Friday, May 21, 2010
கெளரவம் (பிரஸ்டீச்)
இஞ்சாருங்கோ என்ன நித்திரையோ அல்லது மெடிட்சேசன் செய்றியகளோ என்று கேட்டபடியே மனைவி சூடான தேத்தனியுடன் சுரேசிற்கு அருகில் வந்து அமர்ந்தாள்.ஒருத்தன் கண்ணை மூடி கொண்டு ஏதாவது பற்றிய் யோசித்து கொண்டு இருந்தாள் உடனே மெடிட்சேசன் என்று நீங்கள் முடிவெடுத்து என்னுடைய "கஸ்பன்ட்" மெடிடேட் பண்ணி கொண்டிருக்கிறார் என்று நாலு பேருக்கு சொல்லுறது இப்ப ஒரு பஷனா போச்சு.உமக்கு தெரியும் எனக்கு உந்த மெடிட்சேசன்,தியானம்,யோகம்,ஞா�������ம் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது.கண்ணை மூடினால் நித்திரை வரும் அதில சில கனவுகள் வரும் அந்த காலத்தில ஒரே படம் பார்க்கிறனான் அந்த பாதிப்பில் கனவில் சிறிதேவி,சிலுக்கு என்று வந்து போவீனம்.போதும்..போதும் நிற்பாட்டுங்கோ உங்கள் கனவு புராணத்தை இஞ்சாருங்கோ இந்த வார "ரியலெஸ்டட்" புத்தகம் பார்த்தனியளோ உயர் குடி ஏரியாவில் ஒரு வீடு போட்டிக்கிறாங்கள் "பிராண்ட் நீயு கோம்" இன்றைக்கு ஒரு மணிக்கு "ஓபின் கவுசாம்" போய் பார்போம் வாங்கோ என்றாள் மனைவி சுதா.ஏன் அப்பா இந்த வீட்டிற்கு என்ன குறைச்சல் நல்ல பெரிய வசதியான வீடு தானே இது கடைகள்,பள்ளிகூடம்,ரெயில்வேசேஷன்,பஸ்ஸாண்ட் எல்லாம் பக்கத்தில தான் இருக்கு போதாகுறைக்கு எங்களுடைய ஆட்கள் கனபேர் இருக்கீனம்,தமிழ் கடை,தமிழ் சாப்பாட்டு கடை எல்லாம் இருக்கு பிறகு ஏன் அந்த இடத்திற்கு போய் வீடு வாங்க வேண்டும் என்று சொல்லுகிறீர்?எல்லாம் இருக்கு தான் ஆனால் "பிரஸ்டீச்" (கெளரவம்) இல்லை.அந்த ஏரியாவில் இருந்தால் கெளரவம் தானாகவே வரும் நாலு பேருடன் கதைக்கும் போது அந்த "சப்பேர்ப்" பேரை சொன்னாலே "பிரிஸ்டீச்" தானாகவே வரும் அதுமட்டுமில்லை பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி என்று வரும் போது ஒரு தாரதரமும கூடும் என்றாள் சுதா.எனக்கும் ஒரு ஆசை இருக்குது தான் உப்படியான ஏரியாவில் வீடு வாங்க வேண்டும் என்று சரி வாரும் போய் பார்போம் ஆனால் ஒரு கண்டிஷன் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது என்றாள் எங்களுடைய தமிழ் ஆட்கள் பாவிக்கிற "டோயாட்டா" கம்பனிகாரனின்ட காரில ஓடி திரியமாட்டன் எனக்கு புது BMW கார் வேண்டும் அப்படி புதுசு வாங்குவது என்றால் வீட்டை போய் பார்போம்.என்ன நீங்கள் BMW என்று நிற்கிறீங்கள் இவன் தம்பி சாய் தனக்கு "ஸ்போர்ட்ஸ்" கார் வேண்டும் என்று அடம்பிடித்த மாதிரி இருக்கு.சரி சரி போடுற லோனில எல்லாத்தையும் சேர்த்து வாங்குவோம்.சிட்னி முருகனின் தலையில பாரத்தை போட்டுவிட்டு போய் ஆக வேண்டியதுகளை பாருங்கோ என்றாள் சுதா.அடியே சும்மா இருக்கிற அந்த மனிசனின்ட தலையில ஏன் பாரத்தை போடுகிறாய் என்ற தலையில் பாரம் போட்டு இருக்கு அதை பற்றி ஒரு சிந்தனையும் இல்லை சிட்னி முருகனிண்ட தலையில் பாரத்தை போட சொல்லிவிட்டு நீ உண்ட "பிரஸ்டீட்" கனவை நனவாக்க நிற்கிறாய்.ஊரில வேலை செய்து கொண்டிருக்கும்போது நல்லூரு திருவிழாவிற்கு கொழும்பில் இருந்து வரும்சனம் ஆங்கிலத்தில சாமி கும்பிடுது என்று கொழும்பிற்கு போவோம் என்று கொழும்பில வந்து இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் பிள்ளைகள் வடிவாக ஆங்கிலத்தில் கதைக்கிறார் என்று வெளிநாடு போவோம் என்று நாங்களும் வெளிநாட்டிற்கு ஓடி வந்தோம்.இப்ப என்னவென்றால் அந்த வெளிநாட்டில் அதி உச்ச கெளரவமான இடம் எது என்று தேடி அதில் குடிபுக அலையிறோம்.சரி..சரி வாரும் வீட்டையும் பார்த்து அந்த BMW காரையும் பார்த்துபோட்டு வருவோம்.வரும்வழியில் முருகனிட்ட போய் பேர்மிசன் வாங்கி கொண்டு வருவோம்.என்ன நக்கலா?முருகனிண்ட எப்படி பேர்மிசன் எடுக்கிறது என்றாள் சுதா.வழமையாக சொல்லுவீர் போய் நின்று கும்பிட்டேன் ஜயர் நான் நினைத்த பூவை கையில தந்தார் அப்படி இப்படி என்று ரீல் விடுவீர் அப்படி ஒரு ரீலை விடவேண்டியது தானே அது தான் பேர்மிஷன்.வாழ்கையில் முக்காள்வாசி ரீல் தானே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment