Saturday, May 15, 2010

பனித்திரை

பாலைவனத்தை சோலையாக்கி வெளிநாட்டவரை கூலிக்கு அமர்த்தி வேலை வாய்ப்பு அளிக்கும் மத்திய கிழக்கு நாட்டின் சுரேஷ் தனது பணிகளை செய்து கொண்டிருந்தான் பல நாட்டு இனத்தவர்கள் அங்கு பணி புரிந்தாலும்,அதிகமாக இந்திய,பாகிஸ்தான்,தாய்லாந்,ப���?லிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் தான் குறைந்த ஊத்தியத்திற்கு அதிக வேலை செய்யும் கூலிகளாக பணி புரிந்தார்கள்.பிரித்தானிய காலணித்துவத்தில் இருந்த நாட்டவர்கள் தான் அதிகமாக தொழிலாளர்களாக பணி புரிந்தார்கள்.அவர்களுக்கு தானே ஏக்கங்கள் அதிகம்.இவர்களுடன் சுரேஷ்,சிவா,புஞ்சி பண்டா,இஸ்மையில் போன்ற எம் நாட்டவர்களும் அயல நாட்டு தமிழர்களான இராமன்,கந்தன் போன்றோர் தமிழ் மொழி பேசுவதால் எல்லோரும் ஒரே விடுதியில் தங்கி பணு புரிந்தார்கள்.சுரேஷ் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன் அவன் யாழை விட்டு வெளியே செல்லும் போது யாழ்பாணம் புலிகளின் பூரண கட்டுபாட்டில் இருந்தது.புலிகள் இப்படி பூரண கட்டுபாட்டில் வைத்திப்பதால் எங்களுக்கு ஈழம் கிடைப்பதிற்கு இன்னும் கொஞ்சம் காலம் தான் என்ற நினைப்பு சுரேஷினின் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது அந்த காலகட்டத்தில் சுரேஷிற்கு அரசியல்,அயல நாட்டு அரசியல்,சர்வதேச போராடங்கள் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லை அதுவும் ஒரு காரணம் அவன் அப்படி நினைப்பதிற்கு.உணவு உண்பதிற்காக உணவு விடுதியில் எல்லாரும் ஒன்று கூடுவார்கள் அப்பொழுது அந்த நாட்டு ஆங்கில பத்திரிகைகளை படிப்பது வழக்கம்."யாழ்பாணம் நோக்கி இராணுவம் முன்னேற்றம்""புலிகள் பின்வாங்குகிறார்கள்""கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ வசம்""நல்லூரில் பிரபாகரனின் வீடு இராணுவ வசம்"இப்படி பல செய்திகள் ஆங்கில பத்திரிகையில் வரும்.அதே வேளை சந்திரிக்கா,டக்கிளஸ்,ராதிகா குமாரசுவாமி போன்றவர்களின் அறிக்கைகள் போட்டிக்கு போட்டி பிரசுரிப்பார்கள்.சந்திரிக்கா - "தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து விடுவிக்க தான் இந்த போர்,சமாதானதிற்கான போர்."டக்கிளஸ் - "யாழ் மக்களின் ஜனநாயக உரிமையை பெற்று கொடுப்பதிற்காக தான் எமது அரசு இந்த போரை புலிகளுடன் நடத்துகிறது.எமது அரசிற்கு வெற்றி நிச்சயம் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்ச்சி தருவதாக சந்திரிக்கா அம்மா உறுதி அளித்துள்ளார்.ராதிகா குமாரசுவாமி - "தமிழர்களுக்கு இராணுவ பிரிகேட் ஒன்று உருவாக்கி தருவதாக சந்திரிக்கா எனக்கு கூறி உள்ளார் ஆகவே புலிகள் போரை விட்டு அரசாங்கத்துடன் இணைய வேண்டும்".இந்த செய்திகளை படித்தவுடன் சுரேஷிற்கு மனதில் ஒரு வித பயம் தமிழ் மக்களின் போராட்டம் இத்துடன் முடிவடைந்து விட்டது போன்ற ஒரு எண்ணம் அவனை அறியாமலே அவனின் மனதில் ஏற்பட்டு விட்டது.இரவுகளின் தூக்கம் விழித்தவுடன் தொடர்ந்து உறங்க முடியாமல் அவதிபட்டதும் உண்டு இத்தனைக்கும் அவன் ஒரு முன்னாள் போராளியும் அல்ல.சிவாவிற்கு இந்த செய்திகளை படித்தவுடன் அவனை அறியாமலே ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும்.புலிகளாள் அரசாங்கத்தை வெல்ல முடியாது புலிகள் போராட்டத்தை விட்டு அரசோடு போக வேண்டும் அப்ப தான் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் இப்படி பல கதைகள் சொல்லும் சிவா ஒரு முன்னாள் போராளியாம்!இராமன் இலங்கையை பற்றி எவ்வித அறிவும் இல்லை ஆனால் புலிகளை ஓரம் கட்ட வேண்டும் என்ற உணர்வு மட்டும் உண்டு.எங்கன்ட ரஜிவை கொன்ற புலிகளை ஓரம்கட்ட வேண்டும்,புலிகள் தற்போது ஓடி ஒழிந்திருப்பார்கள்,வீரப்பனை பொலிஸ் துரத்துற மாதிரி புலிகளையும் துரத்தி பிடிக்க வேண்டும் என்று கருத்து சொல்லுவான்.சுரேஷ் இயன்றளவு எல்லோருக்கும் சிங்கள இனவாதிகளின் அரசியல் பற்றியும் தமிழ் மக்களின் அவலநிலை பற்றியும் அவர்களாள் புரிந்து கொள்ள முடியவில்லை.அவர்கள் அதற்கு முயற்சிக்கவும் இல்லை.சிவாவிற்கு மக்கள் போராட்டம் என்ற சித்தார்ந்தமும்,இராமனுக்கு ராஜிவின் கொலை தான் மனதில் பனிதிரையாக படிந்து கிடந்தது எமது போராட்டத்திம் உண்மை நிலையை மறைத்திருந்தது அத் திறை.காலங்களை கரைந்தோடின புலிகள் முல்லை தீவு,கிளிநோச்சி போன்ற முகாம்களை அழித்து பெறும் வெற்றியை பெற்று நீண்ட கால போரட்டதிற்கு தேவையான தள பிரதேசத்தை உண்டாக்கி கொண்டார்கள் இதை பற்றி எந்தவொரு ஊடகமோ அல்லது சிவாவோ பெரிதாக அலட்டி கொள்ளவிள்ளை.சிவாவும்,சுரேசும் மத்திய கிழக்கை விட்டு வெளியேறி மேலைதேய நாடுகளின் பிரஜா உரிமை பெற்று வாழும் போதும் தொலைபேசி மூலம் உரையாடுவதுண்டு.நீண்ட நாட்களிற்கு பிறகு சிவாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்னடப்பா வன்னியும் போயிட்டுதாம் எனக்கும் தெரியும் புலிகளாள் அரசை வெல்ல முடியாது என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்தான்.தொடர்ந்து அரசியல் கதைப்பதை தவிர்த்த சுரேஷ் இவன் தனக்குள் போட்ட பனிதிரை உருக போவது இல்லை தொடர்ந்து பனிபடலம் அதிகமாகவே உறைந்து கொண்டு போகிறது ஆகவே தொடர்ந்து அரசியல் கதைப்பதிலும் பார்க்க கதைக்காமல் இருப்பது மேல் என்று எண்ணி பேச்சை மாற்றினான்.

No comments:

Post a Comment