சிவா இந்த வருடம் நாங்கள் பாபாவின் பிறந்தநாளிற்கு புட்டபத்திக்கு போகும் போது ஒருக்கா கொழும்பிற்கும் போயிட்டு தெகிவளை ஆஞ்சேநேயர் கோயிலிற்குன் போயிட்டு வர வேண்டும் என்று சுதா சொன்னதை கேட்ட சிவா ஏனப்பா போனமுறை தான் புட்டபத்திக்கு போயிட்டு வந்தனாங்கள் இரண்டு மூன்று வருசத்தால போகலாமே என்று சிவாவை பார்த்த சுதா உங்களிற்கு என்ன விசரா பாபாவின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் வாரேன் என்று மனதிற்குள் நான் அப்பவே நினைத்துவிட்டேன் ஒவ்வொருவருடமும் போக வேண்டும் இது பாபாவின் விடயம் இதில் ஒரு மாறுதலும் இல்லை சொல்லிபோட்டேன்.இப்ப நாங்கள் இந்த அவுஸ்ரெலியாவில் சகல வசதிகளுடன் நிம்மதியாக வாழுகிறோம் என்றா அதற்கு அந்த பாபா தான் காரணம்.
புட்டபத்தி போய் அவருடைய தரிசனம் கிடைத்து 2 கிழமையாவது அந்த சூழலில் இருந்தால் தனிசுகம் தான் அது எல்லாம் உங்களிற்கு விளங்கபோகுது கொஞ்சமாவது பயபக்தி இருக்க வேண்டும் என்றவளை பார்த்த சிவா"அடியே நாங்கள் இருகிறதிற்கு காரணம் பாபா இல்லை கப்டன்குக்கும் அவனுடைய படைகளும் காரணம் அத்தோடு நாட்டில் இருகிற பிரச்சினை எனது பட்டபடிப்பு இதுகள் தான் காரணம் என்று கத்தை வேண்டும் போல் இருந்தது"இருந்தாலும் தன்னியலாமையை நினைத்து நொந்து கொண்டான்.
எனது பெற்றோர்கள் அன்று கிரமாத்தில் இருந்து பட்டினத்தில் இருக்கும் நல்லூர் கந்தனை தரிசிக்க பண வசதி இல்லாம வருடத்தில் ஒரு நாள் நடந்து தேர்திருவிழா பார்க்க செல்வார்கள் அவர்களிற்கு ஒவ்வொருநாளும் போக வேண்டும் என்று ஆசை இருந்தும் பண வசதி இன்மையால் முடியவில்லை.கடல் கடந்து நயினை நாகபூசனி அம்மனை தரிசிக்க முடியவில்லை இராமேஸ்வரம் போகமுடியவில்லை எவ்வளவு ஆத்மீக ஆசைகளை நிறைவேற்றமுடியவில்லை காரணம் அவர்களின் பொருளாதார நிலைமை.
ஆனால் இன்று மனிதசாமியின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் சென்று ஆத்மீக ஆசைகளை நிறைவேற்ற அவளின் பொருளாதர நிலைமை சீராக இருக்கின்றது,ஆத்மீக ஆசைகளையும் நிறைவேற்றிகொள்ள பொருள் உலகம் தான் நிர்ணயிகிறது என்று தனது மனதிற்குள் சிவா நினைத்து கொண்டு விமான டிக்கடை புக் பண்ண தொலைபேசியை எடுத்தான்.எல்லாம் பாபாவின் செயல் என்று சொல்ல வந்தவன் எல்லாம் டொலரின் செயல் என்று தனகுள்ளே சிரித்து கொண்டான்.
No comments:
Post a Comment