இஞ்சாருங்கோ அந்த பஞ்சாங்கத்தை எங்க கொண்டு போய் வைத்தனீங்கள் அப்பா.நேற்றில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை,இந்த கன்றாவி டீவியை "ஆ" என்று பார்த்து கொண்டு இருக்காமல் என்கொருக்கா பஞ்சாங்கத்தை தேடி எடுத்து தாங்கோ.உந்த டீவியில ஊர் செய்தி தானே அதிகம் போடுறாங்கள் அதை பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று புறு புறுத்து கொண்டிருந்த சரசை பார்த்து இப்ப என்னதிற்கப்பா பஞ்சாங்கத்தை அவசரமா தேடுறீர் பேரன் பிறந்திட்டானோ என்று உணர்ச்சிவசபட்டார்.
எப்ப நல்ல நாள் என்று பார்த்து டாக்டரிட்ட சொன்னா அவர் அன்றைக்கு ஒப்ரேசன் பண்ணுவார் நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் பார்த்து இன்றைக்கு டாக்டரிட்ட சொன்னால் தான் அவர் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்ய கூடியதாக இருக்கும் அது தான் அவசரமாக பஞ்சாங்கத்தை தேடுறன்.
சிறிது அமைதிக்கு பின் இருக்குது இருக்குது நான் தான் நேற்று பார்த்து விட்டு கட்டிலிற்கு கீழே வைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லி கொண்டு இரண்டு பஞ்சாங்கத்தோடு கனகரின் பக்கத்தில் வந்து இருந்தாள்.என்ன இரண்டு பஞ்சாங்கத்தோட வாறீர் என்ற கனகரை பார்த்து ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் மற்றது திருகணித பஞ்சாங்கம்.இரண்டு பஞ்சாங்கத்தையும் பார்த்து ஒரு நல்ல நாளும் நல்ல நேரமும் எடுத்து விட்டன்.இதை ஒருக்கா சாத்திரியிட்ட கொண்டு போய் சரியா என்று உறுதிபடுத்த வேண்டும்.
பெரிய உலக தலைவர்கள் எல்லாம் கிரகங்கள் இப்படி இருக்கும் போது தான் பிறந்தவர்கள்.இந்திரா - சந்திரிக்கா - நேரு - காந்தி -புத்தன் போன்ற உலகதலைவர்கள் நாளும் நேரமும் சரி எனி என்ன பெயர் வைக்க வேண்டும் நீங்கள் ஒருக்கா கம்பியூட்டரில போய் "இந்தியன் பேபி நேம்ஸ்" என்று அடியுங்கோ பெயர்கள் செலக்ட் பண்ண நான் வாறன்.
பெயர் நல்ல தமிழ் பெயராக அத்துடன் எங்களின்ட மனித தெய்வத்தின் ஒரு பெயர் அதில் இருக்க வேண்டும்,எண் சாஸ்திரபடி கூட்டுதொகை 5 வரவேண்டும் ஏன் என்றால் பிறக்கும் திகதியும் கூட்டுதொகையும் 5 தான் வருகிறது இரண்டும் ஜந்தாக இருந்தால் பெரிய உலகம் போற்றும் கல்விமான்களாக வருவார்கள் பிரபல மருத்துவர்கள்,விஞ்ஞானிகள் எல்லாரும் கூட்டுதொகை ஜந்து தானாம்.
மற்றது மருமகள் போன் பண்ணி சொன்னவள் பெயர் ஆங்கில எழுத்து "ஏ" தொடங்க வேண்டுமாம் அப்ப தானாம் வெளிநாட்டு பள்ளிகூடத்தில ஏதாச்சும் விசேசம் என்றா பிள்ளையின்ட பெயர் முதலில இருக்குமாம்.இன்னுமொரு விசயம் "ஸ்" என்ற எழுத்து கடைசியில அல்லது நடுவில இருக்க வேண்டும் அப்ப தான் வட இந்திய ஸ்டைலாக இருக்கும் என்று ஒரு பெயர் புராணத்தை சரசு சொல்லி முடித்தாள்.
பேப்பரில் எழுதி பார்த்து கொண்டிருந்த சரஸை பார்த்து என்னப்பா பெயர் வைத்தாச்சோ என்று கேட்டபடியே இஞ்சாரும் "அப்புகுட்டி' உம்முடைய அப்பான்ட பெயரை பேரனுக்கு வையுமன் நல்ல தமிழ் பெயரா இருக்கு மற்றது "ஏ" யிலும் தொடங்குது பேசாம அதையே வையும் என்றார் அது பழைய காலத்து பெயர் புதுசா ஏதாவது வைக்க வேண்டும் புதுசாக இந்த காலதிற்கு ஏற்ற மாதிரி வைக்க வேண்டும்,உங்களுக்கு உந்த வேலை சரி வராது சும்மா இருங்கோ என்று செல்லமாக அதட்டினாள் சரசு.
அப்ப "அப்பு குட்ஸ்" என்று வையுமேன் ஏன் என்றா "ஏ" என்றும் தொடங்கு மற்றது "ஸ்" வருது கொஞ்சம் வட இந்திய வாடையும் வீசுது பிறகென்ன அப்படியே வையும்,இங்கே சும்மா அலட்டாமல் போய் உங்களின்ட வேலையை பாருங்கோ என்னை கொஞ்ச நேரம் தனியாக விடுங்கோ பெயரை தெரிவு செய்வதிற்கு என்று கோபமாக திட்டினாள் சரசு.சிறிது நேரத்தின் பின் இஞ்சாருங்கோ இந்த பெயர் எப்படி இருக்கு.
"அபிசாய்ஷேஸ்" இதில எனக்கும் மருமகளுக்கும் தேவையான எல்லாம் இருக்கு என்று தான் தெரிவு செய்த பெயரை கன்கரிடம் காட்டினாள்.
உது என்ன தமிழ் பெயரோ என்று கனகர் கேட்க.ஓமோம் "அபிஷேகம்" ஒரு தமிழ் சொல் அதில இருந்து தான் நான் இதை தெரிவு செய்தனான் எங்கண்ட மனித தெய்வத்தின் பெயர் இருக்கிறது வட இந்திய எழுத்து வருகிறது "ஏ" யில தொடங்குது கூட்டுதொகை 5 வருது, டபிள் ஏ தொடங்குது அப்ப தான் பாடசாலையில் முன்னுக்கு பிள்ளையின் பெயர் இருக்கும் இது எல்லாத்தையும் விட இது ஒரு தமிழ் பெயர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.
அபி என்றால் அழகு என்றும் தமிழில் அர்த்தபடும் என்று சரசு சொல்லி முடிக்க கனகருக்கு பிரசர் கூடி தண்ட சாதகத்தை தூக்கிட்டார் நடையை கட்ட சாஸ்திரியிட்ட.
உது என்ன தமிழ் பெயரோ என்று கனகர் கேட்க.ஓமோம் "அபிஷேகம்" ஒரு தமிழ் சொல் அதில இருந்து தான் நான் இதை தெரிவு செய்தனான் எங்கண்ட மனித தெய்வத்தின் பெயர் இருக்கிறது வட இந்திய எழுத்து வருகிறது "ஏ" யில தொடங்குது கூட்டுதொகை 5 வருது, டபிள் ஏ தொடங்குது அப்ப தான் பாடசாலையில் முன்னுக்கு பிள்ளையின் பெயர் இருக்கும் இது எல்லாத்தையும் விட இது ஒரு தமிழ் பெயர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.
அபி என்றால் அழகு என்றும் தமிழில் அர்த்தபடும் என்று சரசு சொல்லி முடிக்க கனகருக்கு பிரசர் கூடி தண்ட சாதகத்தை தூக்கிட்டார் நடையை கட்ட சாஸ்திரியிட்ட.
No comments:
Post a Comment