Tuesday, December 5, 2017

பென்டில் கில்(Pendle Hill)

கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசிநிச்சயம் எடுக்கவேண்டிய அழைப்பு
"‍ஹலோ"
"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"
"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்
""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"
"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"
"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரேஎண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும்சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ"
"ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்."
"நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள்தொலைபேசியை துண்டித்தாள்.
கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து.
நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன்  இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதைசெவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம்புட்டுகத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க  கொத்து ரொட்டி கடைக்கு போனேன்.
அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு  நின்றேன்.
புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளதுகொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்டகைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலாநிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று.
"வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் .
"அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும்அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர்.
"‍ஹலோ"
"இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே "
"இல்லை ஏன்"
"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"
மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"
"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"
என்ன"
தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"
"சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி"
மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன்.
இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும்சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெசொல்லலாம்.
மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்றுமக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவாஅவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும்.

விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம்பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலைபாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது.
வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில்  சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன்.

"‍ஹலோ மச்சான் என்ன  இந்த பக்கம்"
" தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து  கொண்டு போவம் என்று வந்தனான்"
" என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு"
"பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு"

 பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல.":10_wink::10_wink: