Thursday, September 29, 2011

ஒரே மனம்..

ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்..நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலின் புறதோற்றத்தில் பல மாற்றங்களை காணக்கூடியதாகவுள்ளது. தலை முடி நிறமாறுகிறது அதற்கு கறுப்பு சாயம் பூசினாலும் முகத்தில் விழும் சுருக்கங்கள் முடி நிறம் மாற்றப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.ஜம்பதிலும் ஆசை வரும் என கவிஞர்கள் சொன்னதை சாதாரண மனிதர்களும் கிளிப்பிள்ளை போல் சொல்கிறார்கள் ,ஆசை போனால்தானே வருவதற்கு ஒன்பது,பத்து வயதுகளில் தோன் றிய "அந்த ஆசைகள்"ஜம்பதை தாண்டியும் தொடர்கிறது இன்னும் எத்தனை வயது வரை அந்த ஆசைகள் தொடரும் என்பதை அந்த வயதை அடைந்தவர்கள்தான் எழுத வேண்டும். அப்படி எழுதுபவர்களும் உணமையை எழுதவேண்டும்,மற்றையவர்கள் எம்மைபற்றி தப்பாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் உண்மைக்கு புறம்பாக எழுதவோ கிறுக்கவோ கூடாது.இளம் வயதில "அந்த ஆசைகள் "வரும் பொழுது அடைய வேணும் என்ற ஒரு தீவிரவாதம் இருக்கும்,சிலர் அதை நிறை வேற்றுவார்கள் .அதற்கு காதல் என பெயரும் சுட்டிக்கொள்வார்கள் வேறு சிலரோ சமுகத்திற்கும் பெற்றோருக்கும் பயந்து தங்களை கட்டுப்படுத்துவார்கள்.சுய ஒழுக்கம் என்று சொல்லியும் கொள்வார்கள்.சந்தர்ப்பம் சூழ்நிலை இந்த சுய ஒழுக்கத்தை தோற்கடித்துவிடும்.சிலர் ஜம்பதை அடைந்தவுடன் தங்களது ஆசைகளை அடக்க வேண்டும் முயற்சி செய்வார்கள்,அதற்காக புறதோற்றத்தில் பல மாற்றங்களை செய்வார்கள் தங்களது பழக்க வழக்கங்களை கூட மாற்றிக்கொள்வார்கள். அநேகர் மது அருந்துவதை ,அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவார்கள்.பக்தி கூடும் ,கோயில் குளம் என்று செல்லத்தொடங்குவார்கள். என்னதான் புற தோற்றத்தில் மாற்றங்களை செய்தாலும் "அந்த ஆசைகள்" அவர்களை விடவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்கள் மற்றும் வேறு செயல்கள் மூலம் அறியகூடியதாக இருக்கும்.
4

Thursday, September 15, 2011

முற்போக்குவாதி

மார்க்ஸ் எனது
மானசீக குரு

மாவோ சித்தாந்தம்
மானிடத்தின் சிறப்பு

பெடல் கஸ்ரோ
பெருந்தலைவன் நவயுகத்தின்

செகுவாரா புரட்சியின்
செந்தணல்

அம்பேத்கார் தலித்களின்
அழியாச் சுடர்

நான் முற்போக்குவாதி
வேண்டாம் தனி மனித வழிபாடு

கவிக்கோர் கண்ணதாசன்
கதைக்கோர் சுஜாதா

கலைக்கோர் கமல்
கடவுளுகோர் பாபா

புலிகளின் தோல்விக்கு காரணம்
தனிமனித வழிபாடு

காந்தியவாதி

என் மதத்தை கேலி செய்தேன்
மாற்று மதத்தான் அரவனைத்தான்

என் இனத்தை குறைகூறினேன்
மாற்று இனத்தவன் புகழ்ந்தான்

எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன்
மாற்றான் முற்போக்குவாதி என்றான்

எம் போராளிகளை காட்டி கொடுத்தேன்
என்னை புலனாய்வாளன் என்றான்

எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன்
என்னை அமைச்சராக்கினான்

எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன்
அகிம்சாவாதி என்றான்

என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன்
என்னை சனநாயகவாதி என்றான்

என் இனத்தின் அவலங்களை
கண்மூடி பாராமல்
காதை பொத்தி கேட்காமல்
வாயை மூடி பேசாமல் இருந்தேன்
காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்
3
ipb.global.registerReputation( 'rep_post_667385', { domLikeStripId: 'like_post_667385', app: 'forums', type: 'pid', typeid: '667385' }, parseInt('3') );

துவக்கு

என்னை கைப் பிடித்தவன்
மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை
அதேபோல் நானும் எந்த வேறுபாடும்
பார்ப்பதில்லை
என்னை அவன் இயக்கினான்
நானும் இயங்கினேன்
தோளில் சுமந்தான்
நானும் அழகாக தூங்குவேன்
நண்பனுக்கு அறிமுகம் செய்தான்
அவன் என்னை பார்த்து வியந்தான்
ஒரு நாள் வீழ்த்தினான்
முன்நின்றவனைஎதிரி என்றான்
இன்னோரு நாள் வீழ்த்தினான்
முன்நின்றவனைதுரோகி என்றான்
மற்றொருநாள் இவன் வீழ்ந்தான்
நானும் வீழ்ந்தேன்,முனகினான்
மற்றொருவன் ஒடி வந்தான்
என்னை தூக்கினான்
நிறுத்தினான் அவன் முனகளை
இனியோரு நாள் இவனும் வீழ்வான்
நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன்
ஆனால் என்னை இயக்குபவன் .......