Wednesday, February 6, 2019

"கிளப் 72"

"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட்  பின்னேரம்  வாறீயா போய் சந்திப்போம்"
"யார் மச்சான் சுதா"
"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா,   அவளோட போவள் 'இரட்டை பின்னல்'  அவளைத்தான்சொல்லுறன்"
"கலா ...."
டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை"
"யாரப்பா போனில் சுதா,கலா என்று  முழுசிக்கொண்டிருக்கிறீயள்"

"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்"
"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து ந்திருக்கிறாளாம்மீட் பண்ண வரட்டாம்."
"போய் மீட் பண்ணுங்கோவன்"
"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்"
"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே"
ஏனப்பா அப்படி கேட்கிறீர்"
"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'
அதுகளா தான் இருக்கும்"
"ஓமடியாத்த ஞாபகம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமைசந்திக்க வாரன் என்று"
"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம்போத்தலை வாங்கி கொண்டு போவமோ"
"இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்"
"அப்ப நான் கட்டாயம் வாரன்"

"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்"
இல்லை நானும் உங்களாட‌ வாரது என்றால் வாரன்"
"அவள் தனியா ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்"
"யாருடன் வந்து நிற்கிறாளாம்"
"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்"
"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்"
சனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.
"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி  நல்லா ஒட்ட‌ வெட்டிவிடவோ"
"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி"
வெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து
"இந்த வெட்டு சரியோ"
"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு"
"டை அடிச்சு விடட்டே"
"அடிச்சுவிடடா தம்பிஇந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு"
"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்"
"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்"
"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ"
"ஒம் ஒம் வெள்ளையின்ட "
சொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்என மனதில் நினைத்து சிரித்து கொண்டான்.
"எவ்வளவு தம்பி"
"40 டொலர்"
"வழமையா 15டொலர்தானே எடுக்கிறனீர்"
.
"டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா"
கடன் ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான்.
"இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் "
"சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்"
"நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு "
"அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் "
"நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்"
"கி கி கி ம்ம்ம்ம்ம்ம்"
போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்"
"போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்"
"இஞ்சருங்கோ உங்களானஎன்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால்விடுவியளே"
"நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே"
"ஆம்பிளைகள் எல்லாம் சிங்களேமே"
"சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ந்தியும்"
"எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்கு பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி ந்திட்டுது"
எனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

"இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே"
"மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார்மட்ச் பண்ணுது போடுங்கோ"
ஆடைகள அணிந்து வாசனை திரவியங்களை அடித்து விட்டு இரண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு
"டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ"
"ஓம் நல்ல  ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது  எனகொன்வூயூஸ் ஆக போறாள் சுதா"
"தாங்ஸ்"
"உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ"
"அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்"
இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு"
குகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது.
"குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்"
"ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்"
"பயப்பிடாதயும்சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி"
"அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ"
குகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள்.
"இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்"
சொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா
சுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு  இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி  மிகவும் அழகாக  வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்சம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும்மெருகூட்டியது.
"ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்"
"ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்"
"அவன் மார்க்கண்டேயர் பரம்பரையை சேர்ந்தவன்என்றான் குகன்
,
மூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள்.
"உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்"
"எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் தான் இருக்க வேணும் என்று நினைக்கிறன்"

"ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ"
"அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை"

"வட்ஸ் அப்பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ"
"சீ சீ"
"நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்என்றான் குகன்.
"நோ நோ ,  இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான்  வாழ்க்கை சுகுமா போகுது"
"அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்"
"எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை...."
அந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை.
தேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர்.
காரில் பயணிக்கும் பொழுது
"மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே"
"என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்"

"அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்"
தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ"
"குடும்பத்தோட போறன்"
"மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா"
"மனிசி ஒன்றும் சொல்லமாட்டாள்"
"பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார்
கி கி கி ....."
வீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக
"குட் லக் மச்சி"என்றான்.

"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்"
"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"