Saturday, May 15, 2010
எங்கன்ட ஆட்களோட இருக்க ஏலாது
அன்று மேலதிகாரி வரவில்லை அதனால் சுரேசும்,புஞ்சி பண்டாவும் அதிகமாகவே தங்களது தேநீர் இடைவேளையை எடுத்து கொண்டனர் இருவரும் ஒரே நாடு ஆனால் வடக்கு தெற்கு என்று இரு துருவங்களிள் இருந்து குடிபெயர்ந்து சிட்னியில் ஒரு வேளை ஸ்தலத்தில் தொடர்ந்து ஜந்து வருடங்களாக பணி புரிகிறார்கள்.முதலில் வேலை ஸ்தலத்தில் சேர்ந்தவன் சுரேஷ் தான் பின்பு இணைந்தவர் புஞ்சிபண்டா.பல இனமக்கள் பணி புரியும் அந்த ஸ்தலத்தில் புஞ்சிக்கு சுரேசை முதலில் கண்டவுன்ட ஏதோ ஒரு வித உணர்வில் தான் சிறிலங்கா என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்தினான் சுரேசும் பதிலிற்கு தானும் சிறிலங்கா என்று சொல்லி விட்டான் ஆனால் அவன் தமிழா,சிங்களமா என்று அறிய ஆவலா இருந்தான்.அதை போல் புஞ்சியும் ஆதங்கபட்டு தான் இருந்திருப்பான் இருவரும் மாலை தேநீர் இடவேளையிள் சந்திக்கும் பொழுது தமிழா,சிங்களமா என்று கேட்டா அழகாக இருக்காது விச் பார்ட் ஒவ் சிறிலங்கா என்று கேட்போம் என்று நினைத்தான் அதுவும் அழகல்ல என்று முடிவு செய்து " ஜ யாம் சுரேஷ் வுரோம் ஜவ்னா" என்றான் பதிலிற்கு புஞ்சியும் "ஜ யாம் திலக் புஞ்சி வுரோம் மாத்தரை" என்றான்.இருவரினதும் சந்தேகமும் தீர்ந்தது அதன் பின் இருவரும் நண்பர்களாவே பழகினர் இருவரும் அரசியல் கதைப்பதில்லை தவித்து கொண்டே வந்தார்கள் இதன் காரணமாகவோ என்னவோ மச்சான் என்று கதைக்கும் அளவிற்கு நண்பர்களாகிவிட்டார்கள் இருவரும் தங்களது தேசியதிற்காக பாடுபட தான் செய்தனர் அவர்களை அறியாமலே அந்த உணர்வு வெளியிட தான் செய்தது.சுரேஷ் தனது தேசியம் சம்பந்தபட்ட நிகழ்வுகளிள் பங்குபற்றினான் அதை மாதிரி புஞ்சியும் தனது தேசியம் சார்ந்த நிகழ்வுகளிள் பங்குபற்ற தான் செய்தான்.சுரேஷின் தேசிய நிகழ்வுகள் புஞ்சியின் தேசியத்தை பாதிக்க தான் செய்யும் அதை போல் புஞ்சியின் தேசிய நிகவுகள் சுரேஷை பாதிக்க தான் செய்யும்.அன்று புஞ்சி "அப்பே மினுச்தெக்க இன்டபாய் பிலிகன்டபாய் ஒங்கொள்ளு கட்டி கொந்தாய்" (எங்களுடைய ஆட்களோ காலம் தள்ள ஏலாது நம்ப ஏலாது உங்களுடைய ஆட்கள் நல்லம்) என்று சுரேசிடம் கூறினான்.இந்த வசனத்தை சுரேசின் தந்தை பல வருடங்களிற்கு முதல் "எங்கன்ட சனதோட காலம் தள்ள ஏலாது எங்கன்ட ஆட்களோட ஓப்பிடக்க சிங்களவன் எவ்வளவோ மேல் என்று சொன்னது" தான் சுரேசிற்கு நினைவிற்கு வந்தது.அதாவது தாங்கள் சார்ந்த சமுகத்தில் தங்கள் சுயங்களை காட்டுபவர்கள் பிறிதொரு சமுகத்துடன் பழகும் போது அதனை காட்டி கொள்வதில்லை இதனால் மற்ற சமுகத்தை சார்ந்தவன் இந்த சமுகத்தில் உள்ளவை மிகவும் நல்லவர்கள் என்று மனகோட்டை கட்டுகிறார்கள்.எல்லாரும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் என்று மனசிற்குள் நினைத்து கொண்டான் சுரேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment