Saturday, May 15, 2010
இமேஜ் கந்தர்
கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார்.காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று காரை விரைவாக ஓட்டினார்.அன்று மாலை சுரேஷுடன் தொடர்பு கொண்டு மச்சான் சொறிடா நான் அப்படி கேட்டிருக்க கூடாது என்றார்.நான் அப்பவே மறந்திட்டன் மற்றது உன்னுடைய உந்த இமேஜ் பிரச்சினை நீ சின்னவனாக இருக்கும் போதே தொடங்கிவிட்டது தானே.உனக்கு நினைவிருக்கிறதா நாங்கள் பெடியன்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய கணக்கு வாத்தியாரை மொட்டை வாத்தியார் என்று பட்டம் சொல்லி கூப்பிடுவோம் சொல்ல எல்லோரும் ஓம் என்று சொன்னார் ஆனா நீ உன்னுடைய இமேஜ் பழுதாகிவிடும் வாத்தியாரிடம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பாடசாலைக்கே வராமல் வாத்தியாரிட்ட நல்ல பெயர் வாங்கின ஆள் தானே சரி அதை தான் விடுவோம் எங்களுடன் படித்த சுமதியை ஆசைபட்டு அவளுக்கு உன்னுடையை காதலை தெரிவித்தால் ஏனைய மாணவிகளிடம் உன்னுடைய இமேஜ் பழுதடைந்து விடும் என்று போட்டு கடைசி வரைக்கும் காதலை தெரிவிக்காமல் உன்னுடைய இமேஜை பெட்டைகளிடம் காப்பாற்றின ஆள் தானே நீ.இப்பவும் நீ இந்த இமேஜிற்காக பாடுபடுகிறாய் வேலை தளத்தில் அதிகம் லீவு எடுக்கமாட்டாய் கேட்டால் மனேஜரிடம் உன்ட இமேஜ் ஸ்பொயில் ஆகிடும் என்பாய்.நீ ஒரு படைப்பாளி சிறந்த கருத்தாளன் ஆனால் சில விடயங்களை உன்னுடைய சொந்த பெயரில எழுதமாட்டாய் புனை பெயரில் தான் எழுதுவாய்.ஸ்கந்தா என்ற பெயருக்கு ஒரு இமேஜ் இருக்கு அதை கெடுக்க கூடாது அது தான் புனைபெயரில் எழுதுகிறேன் என்பாய்.கல்யாணம் கட்டின புதுசில் தண்ணி அடிப்பது என்றாலும் மனிசி வெளிநாட்டிற்கு போனால் தான் தண்ணி அடிப்பாய் காரணம் மனிசிக்கு உன்னுடய இமேஜ் பழுதடைந்துவிடும் என்று தானே.இப்ப வயசு போனபடியால் உன்னுடைய இமேஜ் நாடகம் மனிசிக்கு விளங்கிவிட்டது தண்ணி அடிப்பதை கண்டு கொள்வதில்லை.இப்படி பல இமேஜ் விளையாட்டுக்கள் உன்னுடையா வாழ்க்கையில் இருக்கு அதுகளை கிளற போனா ஒரு நாள் போதாது.அதை விடு பின்னேரம் வீட்ட வாறியோ ஒரு "புளு லேபல் ஸ்கொச்" இருக்கு மச்சான் வரும் போது கொண்டு வந்தவன் வாரும் அடிப்போம் என்றான் சுரேஷ்.ஆசையா தான் இருக்கு ஆனால் ஸ்டேட்டில் இருந்து மனிசியின் அண்ணன் வந்திருக்கிறான் அவர்களை தனியே விட்டிட்டு வாறது சரியில்லை என்று காய் வெட்டினான் ஸ்கந்தா.மச்சானையும் கூட்டி கொண்டு வாவன் என்று கட்டாயபடுத்தினான் சுரேஷ்.கூட்டி கொண்டு வாறது பிரச்சினை இல்லை மச்சான் அவருக்கு முன்னால் நான் தண்ணி அடிக்கிறதில்லை ஏன் என்றால் என்னுடைய இமேஜ் என்னாகிறது.(யாவும் கற்..ப...)கடலுக்கு எல்லை உண்டு கற்பனைக்கு எல்லை உண்டோ..??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment