Saturday, May 15, 2010
கொளுந்தரின் காதல்
பாடசாலை மணி அடித்தவுடன் சிவகொளுந்து தன்னுடைய பறியை (புத்தகபையை) தோளிள் மாட்டி கொண்டு,பிள்ளைகள் எழுந்து வரிசையாக போக வேண்டும் சரியோ மற்ற வகுப்பு பெடியன்கள் போல கத்தி கொண்டு போறதில்லை யாராவதும் அந்த மாதிரி கத்தினியளோ பிறகு நான் வாத்தியாக இருக்க மாட்டன் பொலிஸ்காரன் மாதிரி தான் இருப்பன் என்று கூறி மாணவர்களை வீடு செல்வதிற்கு வழி அனுப்பி வைத்தார்.இதனால் இவரை டிஸிபிளீன் சிவகொழுந்தர் என்று தான் பாடசாலையில் உள்ளோர்கள் அழைப்பார்கள்.மாணவர்கள் எல்லோரும் சென்றவுன்ட தானும் வெளியே வந்து சிறிது நேரம் வகுப்பாறை வாசலில் நின்று தான் வீடு செல்வார்.சிவகொளுந்தருக்கு இரு ஆண்பிள்ளைகள் உண்டு,மனைவி கமலா பேரழகி என்று இல்லை ஆனாலும் யாழலகி (அதாவது சாதாரண யாழ்பாணத்து பொம்பிளையின் அழகு).கொளுந்தருக்கு ஏற்ற கொளுந்தி என்று சொல்லலாம் யாழ்பாணத்து பெண்களின் குணம் சகலதும் உண்டு.பணிவிடை செய்தல்,புருசன் பிள்ளைகளின் பெருமை பேசுதல்,விடுப்பு கதைத்தல்,பதி பக்தி பேசுதல் இன்னும் பல.சொந்த வீடு,கடனில்லாத வாழ்க்கை,அரச உத்தியோகம்,தோட்ட வருமானம் என்று சகல வசதிகளும் கொளுந்தர் குடும்பதிற்கு உண்டு.கொளுந்தர் மாணவர்களுடன் கண்டிப்பாக இருப்பதால் பாடசாலையில் அவருக்கு ஒரு மரியாதை இருந்தது மாணவர்களும் பயந்து தான் இருந்தார்கள்.சுரேஷ் அன்று பாடசாலை விட்டு செல்லும் பொழுது தனது புத்தகபையை தட்டி பார்த்தான், சாப்பாடு பெட்டியை வகுப்பறையில் விட்ட நினைவு வரவே மீண்டும் வகுப்பறைக்கு சென்றான்.சிவகொளுந்தர் சக ஆசிரியை வதனாவுடன் சிரித்து பேசி கொண்டு இருந்தார்.சுரேஷை கண்டவுடன் கொளுந்தர் வாத்தியார் என்ற அதிகார தோரணையில்,மேலும் பெண் ஆசிரியை பக்கத்தில் இருந்தனால் அதிகாரம் இருமடங்காக இப்ப ஏன் இங்க வந்தனி என்றார்..!அவனும் பயந்து போய் "சேர் சாப்பாடு பெட்டியை மறந்து போய் விட்டிட்டு போயிட்டன் அது தான் எடுக்க வந்தனான் என்று பணிவாக பதில் சொன்னான்.""போய் எடுத்து கொண்டு ஓடு என்று மீண்டும் அதட்டினார்"பாடசாலை விட்டவுடன் கொளுந்தர் சிறு தாமதமாக வீடு செல்வதிற்கு காரணம் வதனா டீச்சருடன் கதைப்பதிற்காக இருக்கலாமோ என்று நினைத்த சுரேஷ்,"சீ...சீ அப்படி இருக்காது என்று தனது புத்தியை தானே நொந்து கொண்டான்."சில நாட்களின் பின் அவர்களை அந்நியொன்னியமாக கண்ட சுரேஷிற்கு,அவனின் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை.அட நாங்களும் காதல் என்று ஒரு பெட்டைக்கு பின்னால திரியிறோம்.கல்யாணம் கட்டின இவனும் காதலிக்க என்று ஒரு மனிசியை தேடுறான் என்னடா உலகம் இது என்று பெரு மூச்சு விட்டான் சுரேஷ்.இவன டிசிபிளீன் சிவகொளுந்து என்று அல்ல சபலிஸ்ட் சிவகொளுந்து என்று தான் சொல்ல வேண்டும்,என்ற நினைத்தபடியே தனது சபலம் நியாயம் ஆனது நேர்மையானது என்றபடியே தனது ஒரு தலை காதலை இரு தலையாக்க செல்கிறான் சுரேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment