Friday, September 30, 2016

புரியல்ல

நான் ஒரு அசைவ பிரியன் அதே போன்று எனது நண்பர்களும் அசைவப்பிரியர்கள் .ஐந்து லாம்படிசந்தி நானா கடையில் கொத்துரொட்டி எங்களது அதிஉயர் கெளரவமான சாப்பாடு அன்றைய எங்களது பொருளாதர நிலையில் அதுதான் எங்களுடையசைனீஸ்,தாய்,இட்டாலியன் ரெஸ்ரோரன்ட்.ஆட்டிறைச்சி கொத்து என்று சொல்லுவோம் ஆனால் அவர் ஆட்டை போட்டாராமாட்டைபோட்டரா என்று ஆராச்சி ஒன்றும் செய்வதில்லை.எங்களுடன் ஒரு ஐயர் பெடியனும் இருந்தவன் அவன் வரமாட்டான். டுயுசன்வகுப்பில் பெண்களின் இருக்கைக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் முதலாவதாக  போய் இருப்பது அவன் தான்.வேறுகுழப்படிகளுக்கு ஒத்தாசை செய்வான் அதாவது பெண்களுக்கு லவ் லெட்டர் கொடுப்பது ,அவர்களி பின்பு சைக்கிளில் திரிவது போன்றசெட்டைகளுக்கு ஆனால் சாப்பாட்டு விடயத்தில் மட்டும் மிகவும் கடுமையாயாக இருப்பான். டெய் நாங்கள் அப்பாட்ட சொல்ல மாட்டோம் நீ சாப்பிடு "
" இல்லையடா கோவிலுக்கு போக வேணும்"
"நாங்களும் கோவிலுக்கு போறனாங்கள் தானே"
"இல்லையடா எங்கன்ட பரம்பரையே சாப்பிடுவதில்லை,ஆச்சார்மாக இருக்க வேணும்"
அதன் பிறகு அவனை நாங்கள் வற்புறுத்தவில்லை . அவனுக்கு பூணுல் சடங்கு நடந்தபின்பு அவன் எங்களை மெல்ல மெல்ல புற‌க்கணிக்க தொடங்கினான்.
.
அவனை எல்லோரும் ஐயா என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள் .
நான் பெயர்   சொல்லித்தான் அவனை அழைப்பேன்,ஆனால் அம்மா "ஐயா ஒர் அர்ச்சனை செய்ய வேணும் என்று தான்கேட்பார்"அவனும் மந்திரம் சொல்லி தீபத்தை காட்டுவான் பிறகு தொட்டு கும்பிடுவதற்காக எங்களிடம் கொண்டுவருவான் அம்மாமிகவும் பயபக்தியுடன் தொட்டு கும்பிட்டு தட்டில் தட்சணையும் இடுவார்கால போக்கில் நானும் அவனை ஐயா ஒரு அர்ச்சனைசெய்யவேணும் என்று கேட்க வேண்டிய நிலைக்கு போய்விட்டேன்.
எங்களுடைய வீட்டுக்கு பின்னே  கன்னியாஸ்திரிகள் மடம் இருந்தது .ஞாயிறு காலையில் குழுக்களாக வெள்ளை சட்டை அணிந்துகன்னியாஸ்திரிகள் செல்வார்கள் .கன்னியாஸ்திரிகள்  என்று சொல்லுறாங்கள் ஆனால் வயசு போனவையள் எல்லாம் இருக்கினம்என்று எங்களுக்கு மனதினுள் ஒரே குழப்பம்.கன்னிகள் என்றால் இளம் பெண்கள் என்று எங்கள் மனதில் பதிந்துவிட்டது.பிறகு தமிழ்படங்கள் பார்க்க தொடங்க விளக்கம் தானகவே வந்திட்டுது.


எங்களது வீட்டுக்கு முன்னே மகளிர் பாடசாலை .பாடசாலை  தொடங்கும் பொழுது அல்லது முடியும் பொழுது எனது நண்பர்களுக்குஎன்னிடம் கொப்பிகள் கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்,அவர்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருப்பேன்.
சைக்கிள் மணிசத்தம் கேட்டவுடன் கையில் அகப்படும் கொப்பியை தூக்கி கொண்டு படலையடிக்கு சென்று சைக்கிள் மாநாடுநடத்துவோம்.ஆனால் அந்த மாநாட்டில் எடுத்த தீர்மாணங்கள் ஒன்றும் நிறைவடையவில்லை என்பதையிட்டு நாம் யாரும் இன்று வரைகவலைப்படவில்லை.


ஒரு நாள் கெற்றின் கொழுவியை தட்டும் சத்தம் கேட்க  யன்னலூடாக பார்த்தேன் வெள்ளை யூனிபோர்ம் தெரிந்தது ,மின்சாரம்தாக்கியது போன்றிருந்தது.எங்களது மாநாட்டின் முடிவுகளை அம்மாவிடம் சொல்ல வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் வளவின்பின்னே ஒடி ஒழிந்து கொண்டேன்.
"தம்பி கண்ணா எங்க போயிட்டாஎன அம்மா கூப்பிட்டு கொண்டே வந்தார்.
"இங்க வந்து பார்யார் வ்ந்திருக்கிறது என்று"
நான் இருக்கும் இடத்து கிட்ட வந்த சத்தம் கேட்க
"வாரன் அம்மா ஆட்டுக்கு குழை ஒடிக்கிறன்,சும்மா ஏன் கத்திறீயள்"
"நீங்கள் போங்கோ நான் கை காலை கழுவிபோட்டு வாரன் "
மினக்கெடாமல் வா"
பயந்து கொண்டே வீட்டினுள் சென்றேன் ,கன்னியாஸ்திரிகளின் உடையுடன்  முதியவரும் ஒர் இளையவரும் இருந்தார்கள்.
அவர்களை பார்த்தவுடந்தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
மத போதனைக்கு வந்திருப்பார்கள் ஏன் அம்மா என்னை இதுக்குள் மாட்டிவிட்டவர் என நினைக்கும் பொழுதே
"கண்ணன் என்னை தெரியுதோ"
"இல்லை சிஸ்டர் "
"என்னடா தெரியவில்லையடா "
"யார் அம்மா சொல்லுன்கோவன்"
"மட்டகளப்பு அக்ணஸ் "
"ஹலோ அக்ணஸ் அக்கா எப்படியிருக்கிறீங்கள்"
"நல்லாய் வளர்ந்திடீர்,இப்ப என்ன செய்யிறீர்"
"இந்த வருடம் /எல் எடுக்கப்போரன்"
"எப்படி தெரியும் நாங்கள் இந்த வீட்டில் இருக்கிறோம் என்று"
"உங்களை அண்ரி போனகிழமை கெற்றடியில் கண்டனான் ,ஒவ்வோரு தடவையும் கண்ணை  வாசலில் பார்க்கும்  பொழுதும் இதுஉங்கன்ட வீடாக இருக்கும் என்று நினைக்கிறானான் போனகிழமை உங்களை கண்டபின்புதான் சுயராய் தெரிந்தது ,மதரிட்ட பெர்மிசன் எடுத்து போட்டு மிஸ்ஸுடன் வந்தனான் உங்களை  மீட் பண்ணிட்டு போவம்மென்று."
"டேவிட் அண்ணா என்ன செய்யிறார்"
"பாதிரியாராக -------முனையில் இருக்கிறார்"
அக்ணஸ் அக்கா விடை பெற்று சென்ற பின்பு .
"இந்த பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ தெரியாது ,நல்ல வடிவான பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ,டேவிட் பாதிரியாரக வரவேணும்என்றுசின்ன வயசிலயே அவையளின்ட அம்மா விரும்பினவர் அதானால் அவர் பாதிரியாராக வந்திருப்பார்"எல்லாம் அவையளின்டதலையெழுத்து என பெருமூச்சு விட்டபடியே அம்மா வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார்.
அக்ணஸ் அக்கா என்னைவிட ஐந்து வயது கூடியவர் அவரின் அழகு அவரைவிட வயது குறைந்தவர்களையும் சபலமடையச்செய்யும்..
`புகையிரதம் கொழும்பு நோக்கி போய்கொண்டிருந்தது.மெல்ல மெல்ல சிவப்பு வெள்ளை நிற கட்டிடங்களுடன் கோபுரங்களும்மறையத்தொடங்கினஇடையிடையே சிலுவையில் அறைந்த  ஜேசுநாதர்,கையில் குழந்தையுடன் மாதா சொருபங்களும் வந்துபோய்கொண்டிந்தது . காடுகளிடையே ஆலமரத்தடியில் பிள்ளையார் தனிதிருந்தார் சில இடங்களில்  திரிசூலத்தை காணக்கூடியதாக இருந்தது.புகையிரதத்தின் தாலாட்டில் தூங்கிபோனேன்.முழித்த பொழுது காடுகளினுடாகவும்  சிறு மலை தொடர்களினுடாக வண்டி சென்றுகொண்டிருந்தது.மலைகளின் உச்சியில் வெள்ளைநிற கோபுரங்களும் புத்தர் சிலைகளும் தெரியத்தொடங்கின.மஞ்சள் வர்ண காவியுடுத்து புத்தர் சிலையாக நிற்க அவரை தரிசிக்க காவியுடுத்த சிறுவர்கள் வரிசையாக படிகட்டில் ஏறிகொண்டிருந்த்தார்கள்
. அந்த சிறுவர்கள் எதை தேடி ஏறுகிறார்கள், தேடச்சொன்னது யார் இன்றுவரை பதில்லை.சில இடங்களில் ஊரில் கண்ட மாதசொருபங்களும்,சிலுவையில் அறைந்த ஜெசுநாதரும் ,சில வீடுகளின் முற்றத்தை அலங்கரித்தார்கள்.அரசமரத்தடியில் புத்தர் உரிமையுடன் குடிகொண்டிருந்தார். தலைநகரம் பிக்குகள், பாதிரியார்கள் ,கன்னியாஸ்திரிகள் என நிறைந்திருந்தது
விமானம் சவுதியரபியா நோக்கி பயணமானது.அநேகர் வேலைவாய்ப்பு தேடி சென்று கொண்டிருந்தார்கள் .பெரும்பாண்மையானவர்கள் இஸ்லாமியர்கள் .எனக்கு அருகில் இருந்தவர் மெல்ல கதையை தொடங்கினார்.
"கம கோயத"
"யாப்பானய‌"
"நீங்கள் தமிழா"
" ஒம்,நீங்கள் எந்த இடம்"
"நான் காலி"
அந்த விமானத்தில் இருந்த அநேகர் தொப்பியணித்திருந்தனர்.
ஆனா இஸ்மயில் தொப்பிய்ணித்திருக்கவில்லை ,தாடியும் வைத்திருக்கவில்லை.அவரும் நான் வேலை தேடிசெல்லும் கொம்பனியில்தான் பணிபுரிய  போகின்றார் என்பதை அறிந்து கொண்டேன். விமானநிலையத்தில் இறங்கியவுடன் கடவுச்சீட்டுக்களை கம்பனி பொருப்பெற்றுகொண்டது.சினேக பூர்வமாக பழகினார் தாடி வளர்த்திருந்தவர்களை நக்கலடித்தார்.காலப்போக்கில் அவர .தாடி வளர்த்து, ஐந்து நேர‌ தொழுகைக்கு ஒழுங்காக செல்ல தொடங்கியிருந்தார்.ஒரு வெள்ளிக்கிழமை அரேபிய உடை அணித்து வந்திருந்த்தார்.
"என்ன இஸ்மயில் எப்ப தொடக்கம் அரபியா மாறினீங்கள்"
அவர் இப்ப மெளலான பாந் ஒத பள்ளிக்கு போகின்றார் என பக்கத்தில் நின்ற மற்றைய இஸ்லாமிய நண்பர் சொன்னார். சவுதியில் அநேக பல்நாட்டு மெளலானக்களை பார்க்ககூடியதாக இருந்தது சவுதி வாழ்க்கையில் எதிர்காலமில்லை என்று தெரிய வர ,எனைய புத்தாசலி தமிழனை போன்றுநானும்  அவுஸ்ரெலியாவுக்குள் குடிபெயர்தேன்.
பரமற்றா வில் ஒரு ரெஸ்ரோரன்டுக்கு மகள் அழைத்து சென்றாள் .சாப்பாட்டை ஒடர் செய்து விட்டு கதைத்துகொண்டிருக்கும் பொழுது "இது முந்தி சேர்ச்சாக இருந்தது  இப்ப ரெஸ்ரோரன்ட் ஆக்கி போட்டினம் "என்று பெட்டர்காவ் சொல்ல நான் அங்கும் இங்கும் பார்த்தேன்.
 "என்ன ஏமலாந்திரிய‌ள்"
" ஒரு கன்னியாஸ்திரியையோ ,பாதிரியையோ காணவில்லை
அது சரி இந்த இருபது வருசத்தில் அவுஸ்ரேலியா வீதியில்  கன்னிகளை கண்டிருக்கிறன் கன்னியாஸ்திரிகளையோ பாதிரிமாரையோ காணக்கிடைக்கவில்லை எப்படி பழைய சேர்ச்சில் அவையளை தேடலாம்"
"உந்த லொல்லுக்கு குறைச்சலில்லை சூடு ஆர முதல் சாப்பிடுங்கோ"
.