Monday, May 10, 2010
அவையளுக்கு
கோம் தியேட்டரில் சிவாஜி படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.யாரப்பா வந்தது என்று மனைவி புஷ்பாவின் குரல் கேட்டும்,கேட்காதவன் போல் சிவாஜி படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இங்கை உத நிற்பாட்டுங்கோ எத்தனை தரம் தான் இதை போட்டு போட்டு பார்க்கிறியள் அலுக்கவில்லையோ உங்களுக்கு அப்படி என்ன தான் ஸ்ரேயவில் இருக்கு என்று அன்பு கலந்த அதட்டலாக கேட்டாள் புஷ்பா.இல்லையப்பா நான் அவளை ரசிக்கவில்லை இந்த நம்மன்ட ரஜனியை தான் ரசித்தனான் என்னை விட பத்து வயசு கூட ஆனாலும் பாரும் மேக்கப் போட்டு எவ்வளவு இளமையாக இருக்கிறார் இளசுகளோடும் எவ்வளவு ஸ்டைலா டான்சும் ஆடுகிறார் பாரும் என்றவனை,இங்கப்பா சும்மா அலட்டாமல் யார் உங்க வந்தது என்று சொல்லுங்கோ.நான் "ஸ்பாவில்" இருந்தனான் அதுகுள்ள இருந்தால் உங்களுக்கு தெரியும் தானே வெளியிளே வரவே விருப்பம் இருக்காது வேலைக்கு போயிட்டு வந்தது மேலேல்லாம் ஒரே அலுப்பா இருக்குது அது தான் அதுகுள்ள கொஞ்சம் கூட நேரம் ஸ்பேன்ட் பண்ணிணான் அது சரி இப்ப யார் வந்திட்டு போனது என்று சொல்லுங்கோ. அது என்னுடைய பிரண்ஸ் அது தான் யார் என்று கேட்கிறேன்.எனக்கு விளங்குது யார் வந்தது என்று இங்கே அப்பா எங்களுக்கு வீட்டு கடன்,கார் கடன்,பிள்ளைகளின் படிப்பு சரியான பிரச்சினைகள் இருக்கு இதில அவைக்கும் காசு கொடுக்கிறது என்றா நாங்க எங்க போறது??என்று வழமையான பல்லவியை பாடி முடித்தாள் புஷ்பா.இந்த பிரச்சினையை தான் நானும் இரண்டும்,மூன்று தடவை சொல்லி ஒரு மாதிரி சமாளித்து விட்டன் ஆனால் இந்த முறையும் அப்படி சமாளிக்க மனம் இடமளிக்குது இல்லை இந்த முறை அவைகளுக்கு கொஞ்சமாவது கொடுக்க தான் வேண்டும் நீர் சொன்ன வீட்டு கடன்,கார் கடன் அந்த கடன் இந்த கடன் எல்லாம் இருக்கும் போது தானே "கோம் தியேட்டர்,சுவீமீங் பூல்,ஸ்பா" என்று எல்லாம் எங்களின்ட வீட்டிற்கு செய்தனாங்கள் ஆனால் அவைகளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறது என்றா மனம் வருதில்லை என்ன?கொஞ்சம் உணர்ச்சிவசபட்டவனாக கேட்டான் சிவா.சுவீமீங் பூல்.ஸ்பா,கோம் தியேட்டர் அந்த வசதிகளை தேவையில்லாம இதுகுள்ள எடுக்க வேண்டாம் இங்க நாங்க உழைக்கிறோம் ஒழுங்காக டக்ஸ் கொடுக்கிறோம் ஆனாபடியா அதுகளை அநுபவிக்க தானே வேண்டும் மேலும் இங்கே எல்லாரும் வசதியாக தான் இருக்கிறார்கள் என்றா புஷ்பா.உவையள் ஊரில கொடுக்கு கட்டி கொண்டு பங்கு கிணத்தில குளித்து இரண்டு வருசதிற்கு ஒருக்கா டவுன் தியேட்டரில பஸ்சில படம் பார்த்து வந்த கோஷ்டிகளின் பிள்ளைகள் இவர்களுக்கு இப்ப.ஸ்பா,சுவிமீங் பூல்,கோம் தியேட்டர் எல்லாம் தேவைபடுகிறது ஆனால் "அவையளுக்கு கொடுக்கிறது என்றா மட்டும் சட்டம் கதைக்க வந்திடூவீனம்"என்று உரக்க கேட்க வேண்டும் போல இருந்தது சிவாவிற்கு இருந்தும் மெளனமாக இருந்தான் காரணம் அவனுக்கே புரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment