Saturday, May 15, 2010

மக்சிமைஸ்-மினிமைஸ்

ஒய்வு நாட்களில் கணனிக்கு முன்னால் இருந்து, இணையத்தளத்தில் செய்திகளை படிப்பதுதான் கனகரின் பொழுது போக்கு. அன்றும் அவர் கணனிக்கு முன்னால் இருந்து செய்திகளை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது, உள்ளே வந்த மனைவி கீதா , நான் நினைச்சன் நீங்கள் இதில் தான் இருப்பீங்கள் நினைத்தது சரிதான்.அப்பா ஒரு கொம்புயுட்டர் மகள் ஒருகொம்புயுட்டரில் தட்டிக்கொண்டு இருங்கோ, நான் மட்டும் குசினிக்குள்ள இருந்து வெந்து போறன் என்று புறு புறுத்தபடியே கனகருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.மனைவி கொஞ்சம் சுடாகத்தான் இருக்கிறா என்று அறிந்த கனகர், மனைவியை சமாதானப்படுத்த(ஜஸ் வைக்க)சமைக்க கஸ்டமாய் இருந்தால் வாரும் எல்லோரும் ரெஸ்ரொரன்டில் போய் சாப்பிடுவம் என்றார்.நான் அடுத்த வருடம் வேர்ல்ட் டூர் போக வேண்டும், சும்மா உந்த கடைக்காரனுக்கு காசை கொடுக்கஎலாது.நான் ஜந்து நிமிடத்தில சமைத்து போடுவன், சாப்பாட்டு விசயத்தை என்னொடு விடுங்கோ அதை நான் பார்த்து கொல்கிறன். இங்க அப்பா இவள் பெரியவள் எந்த நேரமும் கொம்புயூட்டரில தான் இருக்கிறாள், இடக்கிட அதை பார்த்து சிரிக்கிறாள், நான் அறைக்குள் போனவுடன் பார்த்த பக்கத்தை மினிமைஸ் பண்னிபோட்டு , படிக்கிற பாட பக்கத்தை மக்சிமைஸ் பண்ணி வைத்து படிக்கிறமாதிரி நடிக்கிறாள். என்னடி நெடுகளும் கொம்புயூட்டரில இருக்கிறாய் என்று கேட்டால் அசைமன்ட் செய்யிறன் என்று பூ வைக்கிறாள். நீங்கள் தான் அவளை ஒருக்கா கவனிக்க வேண்டும். இந்த வயது ஒரு பொல்லாத வயது,கவனிக்காமல் விட்டமென்றால் ,என்கெஜ்மன்ட் முடிந்த பிறகு தான் எங்களுக்கு சொல்லுவார்கள் இந்த காலத்து பெட்டைகள், என்று தனது ஆதங்கத்தை பொரிந்து தள்ளினாள்.இஞ்சாரும் சும்மா அந்தரப்பட்டு எதாவது உம்மட பாட்டில் கற்பனை பன்னாதயும். நீர் என்ன செய்தனீர் அந்த காலத்தில், என்னொட கதைக்கிறதற்காக கிடுகு வேலியில் மட்டைகளை தள்ளி வைத்து ஒரு ஒட்டையை(யன்னல்)போட்டு , மக்சிமைஸ் பண்ணி என்னொடு கதைப்பீர் யாரவது வரும் சத்தம் கேட்டால் மட்டையை இழுத்து ஒட்டையை மினிமைஸ் பண்ணி போட்டு ஆடுகளுக்கு குழை(இலைகள்)உடைச்சு கொண்டு இருப்பீர்.ஒரு நாள் அப்பர் என்ன பிள்ளை செய்யிறாய் என்று கேட்க வளவு கூட்டுறன் என்று பூ வைத்தீர் , அதை தான் என்கட வாரிசுகள் எங்களுக்கு செய்யுதுகள்.நீர் வேலியில் யன்னல் வைத்து மக்சிமைஸ் மினிமைஸ் பண்ணின விளையாட்டை அதுகள் கொம்புயூட்டரில் செய்யுதுகள்.உங்க என்ட பழைய கதையை கதைத்து என்னை மூட் அவுட் ஆக்காமல்,குசினிக்குள்ள இருக்கிற பாத்திரங்களை போய் கழுவி வையுங்கோ, என்று சொல்லிய படியே அவ்விடத்தில் இருந்து தனது பழைய நினவுகளை நினைத்த படி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

No comments:

Post a Comment