அன்று வெள்ளிகிழமை அலுவலகத்தில் கண்ணன்,ராதாகிருஷனன்,பழனியாண்��ி ஏனையோர் எல்லோரும் தங்கள் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்கள் வெள்ளை இனத்தவர்கள் மதிய உணவு வேளையுடன் பப்பிற்கு என்று சென்றுவிட்டார்கள்.
பழனியாண்டியின் தாத்தா வெள்ளையர்களின் காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளராக இலங்கைக்கு சென்றவர் பின்பு அங்கே தங்கி இலங்கை பிரஜா உரிமை பெற்றுவிட்டார் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கும் கொண்டு வந்தவர்.ஆகையால் பழணியாண்டியும் அவுஸ்ரெலியாவிற்கு குடிபெயர தொழில்சார் கல்வி தகைமை கொண்டவானாக இருந்தான்.
ராதாகிருஷ்ணண் பெயர் தான் இந்து பெயர் ஆனால் அவனுக்கு தமிழ் தெரியாது கிந்தி நல்லா தெரியும் காரணம் அவன் பிஜி தீவுகளிள் வசித்தவன் அவனுடைய பெற்றோர் தமிழர்கள் ஆனால் பிஜியில் கரும்பு தோட்ட தொழிற்காக வெள்ளையர்களாள் அழைத்து வரபட்டு கிந்தி பெருமான்மையுடன் சேர்ந்து இந்டியன் என்ற அடையாளத்தை பெற்று கிந்தி மொழியை பாடங்களாக பயின்று,தமிழ் பெயரை தவிர தமிழன் என்று சொல்ல வேறு எந்த அடையாளமும் அற்றவன்.
கண்ணண் இந்தியன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் கணணி நிபுணண்,இந்தியன் என்று பெருமையாக பேசுபவன் மூவரும் தமிழர்கள் ஆனால் அடையாளங்களை இழந்த தமிழர்கள்,மூவரும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்கள் நிறம்,மொழி,மதம் ஒன்றாக இருந்தும் அவர்களாள் தமிழால் பேசமுடியவில்லை.அன்றும் மூவரும் மேலதிகாரி இல்லாதபடியா அதிகமாக பேசினார்கள்,வழமை போல் கண்ணண் இந்திய பெருமைகளை பேசினான்.இந்தியாவை விட்டால் உலகில் வேறு ஒருத்தரும் இல்லை என்றும் அமெரிக்கா முதல் அவுஸ்ரெலியாவரை இந்தியர்கள் கணணியில் கொடிகட்டி பறகிறார்கள் இந்தியர்கள் இல்லாதுவிடில் உலகமே இயங்காது என்ற மாதிரி அளந்து கொண்டே சென்றான்.
நீங்கள் கொடிகட்டி பறக்கலாம் ஆனாலும் உங்களை அவன் கூலிகளாக தான் பாவிகிறான் என்பதை அம்றந்துவிட வேண்டாம் ஒரு காலத்தில் எங்கள் மூதாதையர்களை கரும்பு தோட்டதிற்கும்,தேயிலை,இறப்பர் தோட்டதிற்கும் வேலை செய்வதிற்கு கூலிகளாக வெள்ளையர்கள் கப்பலில் அழைத்து வந்தார்கள் அவர்களும் பொருளாதர நிலைமை காரணமாக குடிபெயர்ந்தார்கள் பிஜி,இலங்கை,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிற்கு.இப்போழுது தொழில்சார் நிபுணர்கள் என்ற ரீதியில் விமானத்தில் நாங்களே கூலிகளாக சொந்த விருப்பில் வருகிறோம்.அந்த அள்விற்கு வெள்ளைகாரர்கள் தங்கள் நாட்டை செழிமையாக வைத்துள்ளார்கள் அதனால் நாங்கள் கூலிகளாக வேலை செய்கிறோம் உங்கள் நாட்டில் சனத்தோகையில் 15- 20% மான இவர்களின் பொருளாதார கல்வி நிலைமைகளை வைத்து கொண்டு நீங்கள் கொடிகட்டி பறக்கிறீங்கள் என்று சொல்ல ஏலாது 80% வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை பற்றி சிந்தியுங்கள் என்று பழனியாண்டி கூறியதை ஆமோதிப்பதை போல் ராதாகிருஷ்ணணும் நாங்கள் எல்லோரும் ஒரு விதத்தில் நவீன கூலிகள் தான் என்றவன் இந்த கம்பெனியில் வேலை செய்யும் ஏனைய சமூகத்தவர்கள் வேலை பற்றி கவலைபடாது வீடு சென்று விட்டார்கள்.ஆனால் நாங்கள் ஏனும் வேலையில் நிற்கிறோம் ஏனெனில் எங்களின் அடிமை குணம் மாறவில்லை அத்துடன் பணத்தின் மீது எமக்கு இருக்கும் மோகம் என்று சொன்ன ராதாகிருஷ்ணண் நேரத்தை பார்த்தான் 7 மணி காட்டியது மூவரும் வேலை செய்த நேரம் 8 மணி வரை என்று பதிவு செய்து வீடு செல்ல தயாரானார்கள்.
No comments:
Post a Comment