பள்ளி பருவத்தில் கல்வியை தேடினேன் பெற்றோர்களின் முயற்சியால் பல்கலைகழகம் செலவதிற்கு ஏற்ற கல்வியை பெற்றேன்.பட்டதாரி என்ற அந்தஸ்து கிடைத்தது.சாதாரன நடுதர வர்க்கத்தை சேர்ந்த நான் நடுதர வர்க்கத்தில் மேல்தட்டு வர்கதிற்கு போக வேண்டும் என்ற ஆசை பொருளை தேட தூண்டின அதற்கு எனது பட்டதாரி என்ற பட்டம் கைகொடுத்தது.
பிரபல வர்த்தகர் தனது ஒரே பெண்ணிற்கு படித்த மாப்பிள்ளை தேடி கொண்டு இருந்தார் தரகர் வீடு வந்து எனது பெற்றோரிடம் சொன்னதை கேட்டு கொண்டிருந்தேன்,மாப்பிள்ளைக்கு பெண்ணின் தந்தை தனது வர்த்தக ஸ்தாபனத்தை சீதனமாக கொடுப்பதாகவும் வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதிற்கான செலவுகளை தானே கவனித்து கொள்வதாக சொன்னவுடன்,எனக்கு பெண்ணை பார்பதை விட பணத்தை பார்பதிற்கான ஆசை தோன்றவே எப்படியாவது அந்த பெண்ணை கல்யாணம் கட்டிவிடுவாதக முடிவெடுத்தேன்.
அம்மா கொஞ்சம் சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று இழுதடிப்பாள் என்ற பயம் இருந்ததால் நேரடியாகவே அம்மாவிடம் "சாதகத்தை தூக்கி கொண்டு போய் சாஸ்திரிமாரிடம் காட்டாமல் உங்களுக்கு விருப்பம் என்றால் உடனே செய்து விடுங்கோ எனக்கு உந்த சாஸ்திரங்களிள் நம்பிக்கை இல்லை என்று ஏதோ பகுத்தறிவாளன் என்ற தோரணையில் சொல்லிவிட்டேன்"
அம்மாவும் சரி நாளைக்கு போய் பெண்ணை பார்க்கலாம் எல்லாம் சரி என்றால் கல்யாணத்தை அடுத்த மாதம் வைக்கலாம் என்றாள்
தனிநபர் வர்த்தக ஸ்தாபனத்தை "லிமிட்டட் கம்பனி" என்ற தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற தேடலில் மூழ்கி வெற்றியும் பெற்றேன் "கம்பனி டிராக்டர்"என்ற பதவியையும் பெற்று கொண்டேன் கல்யாணத்தின் பின் காமதேடல் நாளுக்கு நாள் அதிகமாகவே,மனைவியிடம் கிடைத்தை விட வெளியில் அநுபவிக்கும் ஆசை தூண்டவே சபலத்திற்கு ஆளாகி அந்த தேடலிலும் ஒரு கரை கண்டேன்.வீடில் ஒரு உத்தம புருஷனாகவும் "ரோல் மொடலாகவும்" காலத்தை தள்ளினேன்.
குழந்தைகள் வளர்ந்து வர எனது தேடலும் தொடர்ந்து கொண்டே சென்றது புகழ் என்ற தேடலிற்கும் அடிமை ஆனேன் கோவில்,முதியோர் இல்லம்,சமூக சேவை நிறுவனங்களிற்கு அன்பளிப்பு என்ற போர்வையில் பணத்தை கொடுத்து எனது புகழ்மாலையை நானே வாங்கினேன்.தர்மகர்த்தா,கொடைவள்ளள் போன்ற பட்டங்கள் ஓட்டி கொண்டன மனம் மகிழ்ந்தேன்.
சில பழைய நினைவுகள் (சின்னவீடு,வியாபார கழுத்தறுப்புகள்) மனதை நெருட,ஆத்மீக தேடல் மூலம் அமைதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஆத்மீக குருவை தேடி அலைந்தேன் ஊரில் தேடினேன் அயல் நாட்டிலும் தேடினேன்.ஆத்மீக குரு தனது மன நிம்மதியை தொலைத்து விட்டு நிற்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.இவர்களாள் எனது மனதிற்கு அமைதி கிடைக்க போவதில்லை என்ற எண்ணத்தில் இருக்கும் போது வலது பக்கம் நெஞ்சும் வலிக்க தொடங்கியது.பிரபல மருத்துவராக பணிபுரியும் எனது மகனை தொடர்பு கொண்டு விடயத்தை கூறினேன்.அவன் அம்புலன்ஸ் அனுப்புகிறேன் உடனே வாங்கோ நான் "டெஸ்ட்" பண்ணுகிறேன் என்றான்.
அரை மணித்தியால பரிசோதனை எல்லாம் முடிந்தது இன்று பின்னேரம் உங்களிற்கு "பைபாஸ்" செய்ய வேண்டும் என்னும் இரண்டு நாள் விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றான்.
நான் அதிர்ந்து போய்விட்டேன் எவ்வளவு தர்மங்கள் செய்து இருப்பேன் எனக்கு ஏன் இப்படி வந்தது என்றேன்.அவன் உங்கள் வயது மற்றது "ஸ்ரேஸ்"(மன உளைச்சள்) என்றான்.என்னவெல்லாம் தேடினேன் ஆனால் இதை நான் தேடவில்லை தேடாமல் வந்த இதை நான் என்ன செய்ய?
No comments:
Post a Comment