Monday, May 17, 2010

சங்கத்தலைவனாக வேண்டும்

காலையில் எழுந்தவுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நடப்பதுதான் முதல் வேலை.இப்படி மனுசன் நடக்கும் பொழுது மனுசனின் மனம் ஒரு இடத்தில் நிக்காமல் எந்த நேரமும் அலைபாய்ந்தபடியே இருந்தது.இப்பகொஞ்ச காலமாக தலைவராக வேண்டும் என்ற ஆசை மனதைப்போட்டு குழப்பி கொன்டே இருந்தது. இந்த ஆசை அவருக்கு வர ஒரு காரணம் அவரின்ட மனிசிதான்,ஒரு நாள் ஒருநிகழ்ச்சிக்கு போன பொழுது,அங்கு தலைவர் பேசின பேச்சை பார்த்துபோட்டு கனகரின்ட மனிசி,"இஞ்சாருங்கோ அந்த மனுசனுக்கு உங்களை விட 5வயசு கூட இருக்கும் பார்க்க தெறியவில்லை,மேடையில் மூச்சு வாங்காமல் நல்லாய் கதைக்கிறார் பார்த்திங்களோ " என்று எப்ப மனிசி கமலா சொல்லிச்சோ அன்றில் இருந்து அவருக்கு எதாவது சங்கத்தில் தலைவராக வேண்டும் என்று தீர்மானிதுக்கொன்டார்.கமலா சொன்ன மாதிரித்தானே மற்ற பெண்களும் ,தான் தலைவராக இருந்தாலும் சொல்லுவார்கள் என்ற நினைப்பு வரவே எதாவது சங்கத்தில தலைவர் ஆக வருவது என்று சபதமே எடுத்து விட்டார்.் கனகரின் தலைவர் ஆசைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு.புலத்தில் வெளிவரும் இலவச தமிழ்பத்திரிகையில் தனது படம் வரும் என்பதுதான்.படித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தலைவராக வரலாமோ என்று யோசித்து பார்த்தார்,ஏற்கனவே தன்னையும் விட இளசுககள் தலைவராக இருப்பதால் ,சீ இந்தபழம் புளிக்கும் என்று ஒதுங்கிவிட்டார்.பிறந்த ஊரின் பெயரில் சங்கம் வைக்கலாம் என்று யோசித்து பார்த்தார்,ஊரில் இருக்கும் பொழுதே ஊர்காரங்களுடன் பகை இந்த லட்சனத்தில் ஊர்சங்கத்தில் வாய்பில்லை என்று அந்த யோசனையையும் ஒதுக்கிவிட்டார் ்புலத்தில் வெளிவரும் இலவச பத்திரிகையில் கதை, கட்டுரை எழுதி எழுத்தாளர் சங்கத்தலைவனாகலாம் என்று எண்ணியவருக்கு,அதற்கு தலைவராக வர வேண்டும் என்றால் இலக்கணம்,இலக்கியம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதையும் ஒதுக்கிவிட்டார்.தற்பொழுது வசிக்கும் "சப்பேர்ப்பின்"பெயரில் சங்கம்வைக்கலாம் என்று யோசித்து பார்த்தார்,அந்த சங்கத்தில் அங்கத்தவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அதனால் தனக்கு பிரபல்யம் கிடைக்கமாட்டுது என்றுஅதையும் கைவிட்டுவிட்டார்.இப்படியே யோசித்து கொண்டு நடந்தவருக்கு நேரம் போனது தெரியவில்லை,நேரே வீடு சென்று காலை உணவு சாப்பிட்டுவிட்டு,பத்திரிகை எடுத்து படிக்கதொடங்கினார்.மனம் தலைவர் ஆசையை ஞாபகப்படுத்திகொன்டே இருந்தது. பத்திரிகையை படிக்க மனம் இல்லாமல் யோசித்துகொண்டு இருப்பதை கண்ட கமலா "இஞ்சாருங்கோ என்ன கப்பல் கவுண்டமாதிரி யோசிக்கிறியள்" என்றால்.அது ஒண்ருமில்லை சும்மாதான்,பேப்பரிலும் செய்திகளை பெரிசா காணவில்லை அதுதான் என்றார்.இனையத்தில எதாவது செய்திகள் போட்டு இருப்பாங்கள் போய் பாருங்கோவன் என்று மனைவி சொல்ல ,இனையத்தில் செய்திகளை படிக்க தொடங்கினார்.செய்திகளை படிக்கும் பொழுது ஒரு யோசனை வந்தது" கணனி புனை பெயர் எழுத்தாளர் சங்கம்" ஒண்றை ஆரம்பிக்கலாம் என்று ,இதன் முலம் உலகம்புராகவும் தனது பெயர் பிரபல்யம் ஆகும என்ற மகிழ்ச்சியில் அதற்க்குறிய முயற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டார் கனகர்

No comments:

Post a Comment