Thursday, June 29, 2017

ரவிக்கை

சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல.
"அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்"
"ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை"
"அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்"
அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்"
"கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்"
"உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி"
"அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களைசொல்லாதையுங்கோ"
"எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனென்றால் கீரிமலையில் வந்து நிற்பன்"
"பின்ன போறது தானே பிள்ளைகள் கூப்பிடுதுகள்"
"எங்கன்ட நாட்டு தண்ணி அந்த மாதிரி,  சுவிம் பண்ணினாலும் ஒரு சுகமிருக்கும் உவங்கன்ட சாக்கடை கடலில் எவன் சுவிம்பண்ணுவான் அதோட சுறாவும் வந்து கடிச்சு போடும்"
"உவற்றையை தான் சுறா பார்த்துகொண்டிருக்கு கடிக்கிறதற்கு விட்டா அப்பர்  உதுவும் கதைப்பார் உதுக்கு மேலயும் கதைப்பார்"
மனிசி அவனுடைய‌ கதைகளால் எரிச்சலடைவது புரிந்து
"சரி வீக்கென்ட் போவம்"
எங்கன்ட நாட்டில நல்ல சுவிம்மேர்ஸ் இருந்தவையள் அவையள் இலங்கையிலிருந்து     இந்தியாவிற்கு நீந்தி போய் திரும்பிவந்தவையள் ,அதுமட்டுமல்ல இங்கிலிஸ் கனலையும் நீந்த முயற்சித்தவையள்  என  ஆழிக்குமரன் ஆனந்தனைப்பற்றி சொல்லி சரிந்தஎனது இமேஜ்ஜை  சரிக்கட்ட முயற்சித் தான் ஆனால் ஒருத்தரும் அதை கண்டு கொண்டமாதிரி தெரியவில்லை.
கறுத்த கண்ணாடி போடுற வழக்கம் அவனுக்கில்லை.ஆனால் கடற்கரைக்கு போகும் பொழுது மட்டும்  மறக்காமல் கொண்டு போய்விடுவான்.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க வேணும் என்ற நல்லெண்ணம்எல்லோரும் வெளியால சூரியனை கண்டவுடனே கறுத்த கண்ணாடி போடுவினம் ஆனால் அவன் பீச்சுக்கு போனால் மட்டும்தான் கறுத்தக்கண்ணாடி போடுறவன்அன்று வெளிக்கிட்டு சிறுதூரம்சென்ற பின்பு பொக்கற்றை தட்டிப்பார்த்தவன் ,கறுத்த கண்ணாடி எடுத்து வரவில்லை என்றுணர்ந்து காரை திருப்பினான்.
"ஏன் இப்ப திரும்பி வீட்டை விடுறீயள்"
"வயிற்றை வலிக்குது ஒருக்கா இறக்கினால் சுகமா இருக்கும் "
"வெளிக்கிட முதல் உதுகளை செய்யிறதில்லை"
"சரி சரி இருங்கோ டக் என்று ஓடி வாறேன்."
"டக் என்று வாறது என்றால் காரை ஸ்டார்ட்டில் விட்டிட்டு .சியை ஒன் பண்ணிட்டு போங்கோ"
பெற்றோல் வெஸ்டா போயிடும் யன்னலை திறந்துவிடுங்கோ"
கார் திறப்பை எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று
கண்ணாடியை தூக்கினான் அவனை பார்த்து  அது 'என்ன பீச்சுக்கோ' என்று கேட்பது போன்றிருந்தது.
மீண்டும் காரை பீச் நோக்கி செலுத்தினான்.லெட்டாக போனால் கார் பார்க் கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால் கொஞ்சம்வேகத்தை கூட்டினான்.சிட்னிமுருகன் புண்ணியத்தில் பீச்சுக்கு கிட்ட ஓரிடம் கிடைத்தது.
குடும்பத்தினருடன்  உடையைமாற்றி நீந்த  சென்றான் . அவனுடைய நீச்சல் சகாசங்களை புரிந்து விட்டு கரைக்கு வந்தவன் , ரவலைவிரித்து அமர்ந்து கலப்படம் செய்த கோக்கை சுவைத்தபடி கறுத்த கண்ணாடியை மாட்டினான் அது அவனைப்பார்த்து சிரிப்பது போலிருந்தது.  .நீச்சல் உடையில் பலர் உலா வந்தனர் .சிலர் உள்ளாடைபட்டிகளால் வந்த அடையாளங்களை கலைவதற்காக  சூரியகுளியல் செய்துகொண்டிருந்தனர்.சிறுவர்கள் மணலில் வீடுகள்,கோட்டைகள் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். 
இளைஞன் ஒருவன் கோக் கான் ஒன்றை மறைவாக‌ குலுக்கிவிட்டு நண்பியிடம் கொடுத்தான் அவள் வாங்கி திறக்க அது சிறீப்பாய்ந்து  அவளது முகத்தை நனைத்தது,செல்லமாக திட்டியபடி அவனை துரத்திசென்று கட்டிப்பிடித்து மணலில் வீழ்த்தினாள் அவன் அவளதுஇதல்ளை தனது இதல்களால் கவ்விகொண்டான்.

அருகிலிருந்த  கலப்படமான கொக்கை ஊறிஞ்சியவன்  ,நாகரிகம் கருதி பார்வையை திருப்பவில்லை வேறு காட்சிகள் தெரியும் என்றஎதிர்பார்ப்பில் திருப்பினான்.


அவனுக்கு  உலக நடப்புக்கள் தெரியதொடங்கிய காலகட்டத்தில் அதாவது சின்ன வயசில்  அவன் கண்ட ஆச்சிமார்களில்பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த ஆச்சிமார் பிளவுஸ் போட்டிருப்பினம்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரவிக்கைபோட்டிருக்கமாட்டார்கள்.பிளவுஸ் போட்ட ஆச்சிமார்கள் கூட்டத்தில் பழகிய அவனுக்கு ரவிக்கை போடாதா ஆச்சிமாரை கண்டால் ஒரேசிரிப்பு .. அவனுடய‌  ஊர் சந்தைக்கு பெயரே ரவிக்கை சந்தை.சந்தைக்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் ரவிக்கைபோட்டிருந்தகாரணத்தாலோ அல்லது அங்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் ரவிக்கை போட்டிருந்தகாரணத்தால் அந்த பெயர் வந்ததோஎன அண்மைக்காலம் வரை தெரியாமலிருந்த அவனுக்கு மேடைபேச்சாளர் ஒருவர் மூலம் விடை கிடைத்தது..
மானிப்பாயிலிருந்த டச்சுஇராணுத்தினர் ரொந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது மானிப்பாய் சந்தையில் மட்டும் ஏன் அதிகளவுநேரத்தை செலவழிக்கின்றனர்  என்பதை அறிவதற்காக அவர்களது கப்டன் மறைமுகமாக நின்று அவதானித்துள்ளான் .காரணத்தைஅறிந்த கப்டன் அடுத்த நாள் சந்தைக்கு தனது மனைவியின் ரவிக்கையை கொண்டு வந்து இரண்டு தடியை குறுக்காக கட்டி அதற்குரவிக்கையை அணிவித்து இனி வியாபாரம் செய்ய வரும் பெண்கள் இதை அணிந்து வரவேண்டும் இல்லையேல் வியாபாரம்பண்ணமுடியாது என்று கட்டளை பிறப்பித்தான் அன்றிலிருந்து அது ரவிக்கை சந்தையாக மாறியது என மேடை பேச்சாளர் சொன்னதுஅவனுக்கு ஞாபகம் வரவே மீண்டும் தனது கலப்பட கோக்கை முழுமையாக குடித்து முடித்தவன்  . அன்று சுதந்திரமாக திரிந்த எம்மைஅடிமையாக்கியவன் ,இன்று சுதந்திரமா திரியிரான் நாங்கள் கறுத்த கண்ணாடியோட திரியவேண்டிகிடக்கு என‌ புறுபுறுத்தபடியேஎழும்பி     உடம்பில் பட்டிருந்த மண்ணை தட்டியவன் கானை வாயில்வைத்தான் அது நான் காலிடப்பா என்றது .கானை கையால் நசுக்கிஆத்திரதை குறைத்தான்.

குடும்பத்தினர் இவனருகே வர கார் திறப்பை மனைவியிடம் கொடுத்தான்.
"ஏனப்பா நீங்கள் ஓடுங்கோவன்"
"எனக்கு தலையிடிக்குது"
"வாயை ஊதூங்கோ பார்ப்போம்"
"ஏய் நீ என்ன பொலிஸ்காரியே....மனசனுக்கு வெறுப்பை ஏற்றாமல் ஓடப்பா"

Monday, June 5, 2017

ஊர்க்காவலன்

கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும்முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே  இருந்துபார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட  சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி  சாமி காவுவோம்அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும்  என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்புபிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை.Image result for அன்னதானம் images
சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக்கத்து கிராமத்து பெடியள் எமது ஏரியா பெண்களைபார்க்க வந்தால் அவர்களின் பருமனை பார்த்து  அவர்களை வெருட்டி திருப்பி அனுப்புதல் போன்ற செயல்களை பொது நோக்குடன்  செய்வது எங்களது வழக்கம்.
முற்போக்கு இலக்கிய ஆர்வாளர்கள் கூட்டம் ஆறு மணிக்கு நடை பெறுவதாக இணையத்தளத்தில் விளம்பரத்தை பார்த்த நான்ஐந்தரைமணிக்கு மண்டப வாசலில் போய் நின்றேன்இலவச அனுமதி என்றபடியால் அதிக சனம் வரும் என்று எதிர் பார்த்தேன் ஆனால்எதிர் பார்த்தபடி ஆர்வாளர்கள் சமுகமளிக்கவில்லை.    பி.எம் .டபிள்யு  காரிலிருந்து நஷனல் போட்டு குறுந்தாடியுடன் ஐம்பத்தைந்துவயதுமதிக்க தக்க ஒருத்தர் இறங்கி வந்தார்.அதே நடைஎங்கயோ பார்த்த முகம் கையில் ஒரு தொகுதி புத்தகத்துடன் மண்டபத்தினுள்நுழைந்தார்.
பாடசாலையில் பின்வாங்கிலிருந்த பழக்கதோசம் இங்கும் மண்டபங்களில் பின் வரிசையை நோக்கி எனது கால்கள் என்னை அழைத்துஇருத்திவிடும்.ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.குறுந்தாடி வைத்தவருடன் இன்னும் சிலர் மேடையில்அமர்ந்திருந்தனர்.ஏற்பாட்டாளர்கள் ஒவ்வோருத்தரையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள்..பொன்னாடை போடவில்லைமகிழ்ச்சியாக இருந்தது.
எனது தவிப்புக்கு விடை கிடைக்கும் தருணம் வந்தது அதாவது  தாடியை அறிமுகம் செய்யும் நேரம்.மெல்பேர்னிலிருந்து வந்திருக்கும்முற்போக்கு எழுத்தாளர்,புரட்சிகர சிந்தனையாளர் சி.  என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார்.நினைவில் யார் என்று இன்னும்வரவில்லை.எல்லொரும் கை தட்டினார்கள் நானும் கைதட்டினேன்.
கைதட்டாவிடில் அறிவிப்பாளர்கள் இப்பொழுதெல்லாம் "எங்கே உங்கள் பலத்த கரகோசம்"என‌ கேட்டு வாங்குகிறார்கள்.
என்னுடைய கிறுக்கலுக்கு பச்சை புள்ளிகளும் பாரட்டுகளும் கிடைக்கும் பொழுது ஏற்படும் மன சந்தோசம் போன்று ஒவ்வோரு மேடைபேச்சாளர்களுக்கும்  ஏற்படுவதில் தப்பில்லை என்று நினைத்து மீண்டும் ஒரு பலத்த கைதட்டலுடன் விசிலும் அடித்தேன்.
மைக்கை வாங்கிய சி.தா,தோழர்களே வணக்கம் ,என்னை இன்று தோழர் .பா அவர்கள் தனது  "சிறகொடிந்த காகம்என்ற புத்தவெளியீட்டுக்கு தலமை தாங்கும்படி கேட்டுக்கொண்டதற்கமைய நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன் நிற்கின்றேன்..பா எனக்குசிறு வயது முதலே தெரியும் பல களம் கண்ட போராளி ,நானும் அவனும் வன்னிகாடுகளில் அலைந்த நாட்களை எழுத வரிகள் இல்லை.
எங்கயோ கேட்ட  பரீட்சையமான  குரல் யாராக இருக்கும்?மனது விடை காணதுடித்தது.
    எமது போராட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் எகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அருவருடிகளான எம் இனமுதலாளிகளும் தான்சிங்கள  மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர் அவர்களை கெடுப்பது எகாதிபத்தியவாதிகளின்கைக்கூலிகள்.உண்மையை சொல்லப்போனால் இன்று முள்ளிவாய்காலில் நடந்த சம்பவத்திற்காக அதிகமான சிங்களவர் கண்ணீர்சிந்துகின்றனர்மக்கள் போராட்டம் நடத்தவில்லை ஒரு இயக்கம்தான் போராடியதுமக்கள் போராடியிருந்தால் அதுவும்  சிங்களமக்களுடன் சேர்ந்து போராடியிருந்தால் நாம் இன்று விடுதலை அடைந்திருப்போம்.
பழக்கப்பட்ட அதே கருத்து அடே உவன் எங்கன்ட "கருத்து கந்தசாமி"
சி.தாமோதரம் போல கிடக்கு இருந்தாலும் பக்கத்திலிருந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள அவரை பார்த்தேன்.அவரை சிட்னியில்கண்டிருக்கிறேன் ஆனால் ஒருநாளும் கதைக்கவில்லை.ஒரு புன்முறுவலைபோட்டு
"உங்களுக்கு உவரை தெரியுமோ"
"இவரின்ட பெயர் தாமோதரம் தானே ஊர் மானிப்பாய் "
"ஓம் அவரும் நானும் பேரதேனியாவில் ஒன்றாக படித்தனாங்கள்"
இடைவேளை அறிவித்தார்கள் இருவரும் தேனீர் அருந்தியபடியே
சி.தாவைப்பற்றிய விடுப்புக்களை பகிர்ந்து கொண்டோம்.
"வன்னி காட்டுக்குள் நின்ற போராளி என்று சொல்லுறார் பிறகு எப்படி பேரதேனியாவில் படிச்சிருப்பார்"
"தம்பி ஒரு மாதம் காடுகளில் திரிஞ்சு போட்டு போராளி என்று சொல்ல ஏழுமோ , உமக்கும் ஆளை தெரியும்போல கிடக்கு"
ஓமோம்,என்னை விட இரண்டு மூன்று வயசு அதிகம் எங்கன்ட ஊர் கோவில் மண்டபங்களில் ஒன்று கூடியிருக்கும் பொழுது அரசியல்கருத்துக்களை சொல்லிகொண்டிருப்பார்.மக்களை பாதுகாக்க மக்கள் போராட்டம் வெடிக்க வேணும் என்பார் .நாங்கள் கோவிலில்நின்றால் ஏனடா கோவிலில் நின்று நேரத்தை வீணடிக்கிறியள் மக்களை திரட்டி மக்கள் போராட்டத்தை முன்னேடுப்போம் என்று ஒரேசொற்பொழிவாக இருக்கும்.பிறகு கொஞ்ச நாட்களாக ஆளை காணவில்லை .பெடியங்கள் சொன்னார்கள் தாமு இயக்கத்திலசேர்ந்திட்டான்  என்று.அதற்கு பிறகு இப்பதான் முதல் முறையாக ஆளை பார்க்கிறேன்."
"பொலிஸ் தேடுது என்று காட்டுவழியாக கண்டி வந்து அண்ணனுடனிருந்து /எல் பாஸ் பண்ணி பெர்தேனியாவில் படிச்சவன்,அங்கயும்சிங்களவருடன் ஆள் நல்ல ஒட்டு,நாடகம் ,கதை ,கவிதைஎன்று எல்லாத்துக்கும் முன்னுக்கு நிற்பான்"
அக்கம்பக்கம் திரும்பி பார்த்துவிட்டு காதருகே வந்து
"காய்க்கு ஒரு சிங்கள படுவும் இருந்தது"
"அந்த படுவைத் தான் கட்டியிருக்கிறாரா"
"என்ன தம்பி விசர் கதை கதைக்கிறீர் கொழுத்த சீதனத்துடன் கொழும்பு பெட்டையை கட்டினவன்" 
"கொழும்பு என்றால் சிங்களபிள்ளையையா?"
"சீ சீ எங்கன்ட யாழ்ப்பாணத்து பிள்ளை கொழும்பில செட்டில்தகப்பன் கஸ்டம்ஸில் வேலை பார்த்தவர்."
சி.தாவை சூழ பலர் நின்றனர் .என்னுடன் கதைத்துகொண்டிருந்தவரும்  அவரை சந்திப்பதற்கு செல்ல தயாரானார்
"வாருமன் சி.தாவுடன் கதைப்போம்"
"இல்லை நீங்கள் போங்கள் நான் வெளிகிடப்போறன்"
"இனி எப்ப சந்திக்கலாம்"
"அடுத்த கிழமை சிட்னிமுருகன் கோவிலில் சொற்பொழிவு இருக்கு தாயகத்திலிருந்து சொற்செல்வர் வந்திருக்கிறார்"
"அப்ப அங்க சந்திப்போம் நான் வாரன்"
பெடியளுடன் ஊர் சுற்றும் காலத்தில் ஒரு நாள் சுதுமலை , இனுவில் மருதனாமடம் வரை சென்று திரும்பிகொண்டிருக்கும் பொழுதுஎங்களது சைக்கிள்களுக்கு  பின்னால் "சி 90" கொன்டா மொட்டர் சைக்கிள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.இனுவில் கந்தசாமிகோவிலுக்கு முன்னாள் நாங்கள் நிறுத்தியவுடன் அவரும் முன்னுக்கு வந்து மொட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
Image result for images of honda c90 motorbike
என்னை கண்டவுடன்
" நீங்களா"
"ஒமோம் எப்படியிருக்கிறீங்கள்"
"நல்லாயிருக்கிறன் ,தோட்டத்தில் நின்றனான் சைக்கிளில் குறுப்பா உங்கன்ட கோஸ்டியை அந்த பக்கம் கண்டனான் அதுதான் யார்என்று பார்க்க வந்தனான்,இப்ப யார் யார் என்றில்லை ஊருக்குள்ள வந்து போறாங்கள்"
"அண்ணவின்ட‌ கடிதம் வந்ததோ"
"ஒம் வந்தது அடுத்த மாதம் வாரார்"
"அண்ணர் வந்த பிறகு சந்திப்போம்"
விடை பெற்று மீண்டும் பெடியளுடன் சைக்கிள் சவாரி தொடங்க
"யாரடா மச்சான் உந்த ஊர்க்காவலன்"
"உவரின்ட அண்ணர் என்னுடைய அண்ணருடன் சவுதியில் வேலை செய்கிறார் அந்த பழக்கம்"
. "நீ இல்லாட்டி எங்களுக்கு இருட்டடி விழுந்திருக்கு ஊர்காவலனிடமிருந்து"
என்ற பெடியளின் நக்கலுடன்
ஒருத்தரிடமும் இருட்டடி வாங்காமல் வீடு வந்து சேர்ந்தோம்.
கார் பார்க்  பி.எம்.டபிள்யூ,பேண்ஸ்,டோயொட்டா,வொல்வொ என்று நிறைந்திருந்தது.எனது காருக்கு இடத்தை தேடி பார்க்பண்ணிபோட்டு மண்டபத்தினுள் சென்றேன்.கார்பார்க்கை போன்று மண்டபமும் நிறைவாகவே காணப்பட்டது.
கடந்த கிழமை அறிமுகமான தோழர் கூட்டதினுள் இருக்கின்றாரோ என பார்த்தேன்.மக்கள் கூட்டத்தினுள் அவரை காண்பது கடினமாகஇருந்தது.

பலத்தகரகோசத்துடன் சொற்செல்வர் தனது உரையை தொடங்கினார்.புலம்பெயர்ந்த மக்களை புகழ்ந்து பாராட்டி பேசினார்.மனசுசந்தோசமடைந்தது.வழமையாக புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் அல்லது உங்களால்தான் நாட்டில பட்டினி என்று கூறும் சிலபுரட்சியாளர்களின் குற்றைச்சாட்டை கேட்டு பழகிய மனசுக்கு பெரியவரின் பாராட்டு மகிழ்ச்சியை தந்தது.  எமது குழந்தைகளின் தமிழ்கலாச்சார நிகழ்ச்சிகளை மிகவும் பாராட்டினார்.தாயக மக்களுக்கு சிவனின் பெயரால் பல உதவிகளை தனிமனிதானாக நின்று எனையதனிநபர்களின் பணபங்களிப்புடன் அவர் செய்யும் செயல்களை கேட்ட பொழுது எங்களது புரட்சிகளும் சித்தாதங்களும் ஏட்டு சுரக்கைஎன்பது  வெள்ளிடைமடை.
இவ்வளவு அழிவுக்கு பின்பும் மக்கள் மீண்டும் எழக்கூடியதாக இருந்தமைக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய பங்குண்டு.அதைதாயகத்தில் முன்னின்று எடுத்து செல்லும் பெரியவர் அன்று எனது நண்பர்கள் கின்டலடித்த ஊர்க்காவலன் அல்ல நிஜத்திலயே அவர் ஒர்இனத்தின் காவலன்.
கோவில்கள் ஏன் என்று இளம்வயதில் கேட்ட கேள்விக்கு இப்ப கொஞ்சம் கொஞ்சமாக விடை புரிகின்றது.