சிவாவும்,கண்ணணும் பள்ளி தோழர்கள் சிறுவயதில் இருந்து ஒன்றாக படித்தார்கள் பெற்றோரும் குடும்ப நண்பர்கள் இதனால் அவர்களின் நட்பிலும் பிணைப்பி அதிகமாக இருந்தது விளையாட்டு,டியூசன் போன்றவற்றிற்கு போகும் போது ஒன்றாக செல்வார்கள்.
க.போ.த உயர்தரம் இருவரும் கணிதபிரிவில் படிப்பதிற்காக முடிவு செய்தனர் வழமையான அந்த வயதில் இளைஞர்களிற்கு ஏற்படும் காதல்,கள்ள தம் ,பனைமரத்து உற்சாக பானம் போன்ற பழக்கங்கள் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து பழகி கொண்டார்கள்,ஆனால் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்,க.போ.த பரிட்சைகள் முடிந்தவுடன் ஏதோ பயங்கர சாதனை ஒன்றை முடித்த நினைப்பில் அதிகமாக ஊரை சுற்றினாம் கண்ணண்.சிவா தனது படிப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்புகளும்,கோயில்களிற்கு செல்வதும் விரதங்கள் பிடிப்பதாகவும் இருந்தான்.கண்ணணை கண்டால் சிறிது அட்வைஸ் பண்ணவும் செய்தான் கோயிலிற்கு வரும் படியும் வறுபுறுத்தினான்,சிவா கோயிலிற்கு சென்று அங்கு தேவாரம் படித்து முதியோரிடம் ஆத்மீக கதைகளும் கதைத்து வீடு வருவான்.சிவாவின் குரலையும் ஆத்மீக பற்றையும் முதியோர்கள் பாராட்டினால் அவனுக்கு அது ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் அதை கண்ணணிடமும் தன் சக நண்பர்களிடமும் சொல்லி பெருமைபடுவான்.
ஒரு முறை மாக்கான் கடையில் கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடதாக கண்ணண் சொல்ல இன்று வெள்ளி கிழமை ஏன் மாட்டு இறைச்சி போட்ட கொத்துரோட்டியை சாப்பிடாய் என்று திட்டினான்,பரிட்சை முடிவுகளும் வந்தது சிவாவிற்கு பல்கலைகழகம் கிடைக்கும் என்று உறுதியான முடிவு கிடைத்தது கண்ணணுக்கோ தந்தி கம்மி முடிவு தான்( 4 வெயில்)கண்ணணுக்கு பெற்றோர்களிடம் திட்டு விழுந்தது உன்னோடு படித்தவன் பல்கலைகழகம் செல்ல போகிறான் நீ சும்மா ஊற் சுற்றினது தான் மிச்சம் என்று.கண்ணணுக்கு தொடர்ந்து ஊரில் இருக்க விருப்பமில்லாம வெளிநாடு செல்ல ஆயத்தங்கள் செய்து வெளிநாடும் புறபட்ட்டுவிட்டான்.
நீண்ட நாட்களின் பின் தொலைபேசி அழைப்பு வந்தது நான் சிவாஸ் பேசுகிறேன் என்று ஆங்கிலத்தில் உரையாடினான்,அவனது பேச்சில் ஒரு தமிழ் வார்த்தை கூட இடம்பெறவில்லை ஒரு மதபோதகர் போல் உரையாடினான். தான் கனடாவில் உறவினர் வீட்டில் வந்து நிற்பதாகவும் வந்து தன்னை சந்திக்கும்படியும் கூறி இருந்தான்.
கண்ணணும் மகிழ்ச்சியுடன் உற்சாக பான போத்தல் இரண்டை காரிற்குள் போட்டு கொண்டு நண்பனை சந்திக்க சென்றான்.கண்ணணை கண்ட சிவாவும் கட்டி அணைத்து பரஸ்பரம் சுகம் விசாரித்தனர்.சிவாவின் உறவினர்கள் சிவாவை ஜேசு ஜெபத்தை தொடங்குவோமா என்று அழைத்தது கண்ணணை திடுகிட வைத்தது.அப்பொது தான் சிவா சொன்னா தான் கிறிஸ்தவானக மாறிவிட்டான் என்றும் உன்னையும் இன்று ஜெபத்தில் பங்குபற்ற தான் அழைத்தனான் என்று கூறியவன் கண்ணணிண் பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்த கூட்டத்துடன் சேர்ந்து "ஆலேலோயா" என்று ஜெபிக்க தொடங்கிவிட்டான்.
சிவாவுடன் சேர்ந்து பழைய நினைவுகளை மீட்கலாம் என்று உற்சாக பானத்துடன் உற்சாகமாக சென்றவனுக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.மனிதனி மன உலகம் இவ்வளவு மலிவானதா மாற்றம் அடைய கூடியதா நினைத்து கொண்டு வீடு வந்து தனிமையில் உற்சாகபானத்துடன் உற்சாகமாக இருக்க தொடங்கிவிட்டான் கண்ணண்.
No comments:
Post a Comment