Monday, March 22, 2010

பொருள் உலகம் நிர்ணயிக்கும் ஆத்மீகம்

சிவா இந்த வருடம் நாங்கள் பாபாவின் பிறந்தநாளிற்கு புட்டபத்திக்கு போகும் போது ஒருக்கா கொழும்பிற்கும் போயிட்டு தெகிவளை ஆஞ்சேநேயர் கோயிலிற்குன் போயிட்டு வர வேண்டும் என்று சுதா சொன்னதை கேட்ட சிவா ஏனப்பா போனமுறை தான் புட்டபத்திக்கு போயிட்டு வந்தனாங்கள் இரண்டு மூன்று வருசத்தால போகலாமே என்று சிவாவை பார்த்த சுதா உங்களிற்கு என்ன விசரா பாபாவின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் வாரேன் என்று மனதிற்குள் நான் அப்பவே நினைத்துவிட்டேன் ஒவ்வொருவருடமும் போக வேண்டும் இது பாபாவின் விடயம் இதில் ஒரு மாறுதலும் இல்லை சொல்லிபோட்டேன்.இப்ப நாங்கள் இந்த அவுஸ்ரெலியாவில் சகல வசதிகளுடன் நிம்மதியாக வாழுகிறோம் என்றா அதற்கு அந்த பாபா தான் காரணம்.புட்டபத்தி போய் அவருடைய தரிசனம் கிடைத்து 2 கிழமையாவது அந்த சூழலில் இருந்தால் தனிசுகம் தான் அது எல்லாம் உங்களிற்கு விளங்கபோகுது கொஞ்சமாவது பயபக்தி இருக்க வேண்டும் என்றவளை பார்த்த சிவா"அடியே நாங்கள் இருகிறதிற்கு காரணம் பாபா இல்லை கப்டன்குக்கும் அவனுடைய படைகளும் காரணம் அத்தோடு நாட்டில் இருகிற பிரச்சினை எனது பட்டபடிப்பு இதுகள் தான் காரணம் என்று கத்தை வேண்டும் போல் இருந்தது"இருந்தாலும் தன்னியலாமையை நினைத்து நொந்து கொண்டான்.எனது பெற்றோர்கள் அன்று கிரமாத்தில் இருந்து பட்டினத்தில் இருக்கும் நல்லூர் கந்தனை தரிசிக்க பண வசதி இல்லாம வருடத்தில் ஒரு நாள் நடந்து தேர்திருவிழா பார்க்க செல்வார்கள் அவர்களிற்கு ஒவ்வொருநாளும் போக வேண்டும் என்று ஆசை இருந்தும் பண வசதி இன்மையால் முடியவில்லை.கடல் கடந்து நயினை நாகபூசனி அம்மனை தரிசிக்க முடியவில்லை இராமேஸ்வரம் போகமுடியவில்லை எவ்வளவு ஆத்மீக ஆசைகளை நிறைவேற்றமுடியவில்லை காரணம் அவர்களின் பொருளாதார நிலைமை.ஆனால் இன்று மனிதசாமியின் பிறந்தநாளிற்கு ஒவ்வொருவருடமும் சென்று ஆத்மீக ஆசைகளை நிறைவேற்ற அவளின் பொருளாதர நிலைமை சீராக இருக்கின்றது,ஆத்மீக ஆசைகளையும் நிறைவேற்றிகொள்ள பொருள் உலகம் தான் நிர்ணயிகிறது என்று தனது மனதிற்குள் சிவா நினைத்து கொண்டு விமான டிக்கடை புக் பண்ண தொலைபேசியை எடுத்தான்.எல்லாம் பாபாவின் செயல் என்று சொல்ல வந்தவன் எல்லாம் டொலரின் செயல் என்று தனகுள்ளே சிரித்து கொண்டான்.

தம்பி சண்முகலிங்கம்

Posted 25 July 2007 - 06:24 PM
சன் என்று மனைவி விஜி அழைக்க திடுகிட்டு தன் சிரிப்பை நிறுத்தினான,ஏன் இப்ப உங்கள்பாட்டில் சிரித்து கொண்டு இருந்தனீங்கள் யாராவது பார்த்தால் விசர் என்று நினைக்க போறார்கள் என்றவல் அது சரி இப்ப ஏன் சிரித்தனீங்கள்.அதுவோ சும்மா என்ன நினைத்தேன் சிரித்தேன்,அப்படி என்ன பெரிசாக கிழித்து போட்டீங்கள் இப்ப உங்களை நினைத்து சிரிக்க என்றவளை பார்த்த சன்,அதற்கு காரணமே நீர் தான் விஜி என்றான்.
25 வருடங்களிற்கு முன் நீர் எப்படி என்னை கூப்பிடுறனீர் என்பதை யோசித்தேன் அது தான் சிரித்தேன்.ஏன் எப்படி கூப்பிட்டனான் என்று சொல்லுங்கோ எனக்கு இப்ப எல்லாம் மறந்து போய் விட்டது.அது சரி இப்ப உமக்கு ஒன்றும் நினைவு இருக்காது ஏன் என்றா நீர் இருகிற இடம் அப்படி."இஞ்சாருங்கோ"."இங்கேயப்பா" இப்படி தான் கூப்பிடுவீர்,கல்யாண கட்டிய புதுசில் கூப்பிடவும் மாட்டீர் கிட்ட வந்து தான் சாப்பிட வாங்கோ என்று சொல்லுவீர்.
நாட்டு நிலைமை காரணமாக அவுஸ்ரெலியா வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது அம்மா,அப்பா சண்முகலிங்கம் என்று அழகாக தமிழிழ் பெயர் வைத்திருந்தார்கள்.அம்மா தம்பி சண்முகம் என்று கூப்பிடுவா ஆனால் இங்கு வந்தவுடன் வெள்ளைகாரன் சொல்லவில்லை என் பெயரை சன் என்று மாற்ற சொல்லி நானே மாற்றினேன் ஏனெனில் வெள்ளைகாரன் கூப்பிட கஷ்டமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு.சண்முகம் என்று வைத்திருந்தாலும் வெள்ளைகாரன் அழகாக கூப்பிட்டு இருந்திருபான் என் அகமனதில் தோன்றீய தாழ்வு மனபான்மையும் நாகரீக மோகமும் என் பெயரை சன் என்று மாற்றுவதிற்கு காரணம்.வந்த புதிதில் நீர் என்னை அப்பா என்று அழைப்பீர் பிறகு மற்றவர்களுடன் கதைக்கும் போது என் பெயரை சொல்லுவீர் 2 வருடங்கள் போன பின் சன் என்று அழைக்க தொடங்கி அதுவே தொடர்கதையாக போகிறது என்று சொன்னவனை பார்த்தா விஜி இப்ப என்ன சொல்ல வாறீங்கள் உங்களை பெயர் சொல்லி கூப்பிடகூடாது என்றா அது மட்டும் நடக்காது சொல்லி போட்டேன் என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் அவர்களின்ட கஸ்பன்ட்மாரை பெயர் சொல்லி தான் அழைக்கீனம் நான் மட்டும் பட்டிகாடுகள் மாதிரி ஊரில இருந்த மாதிரி இங்கு செய்யமாட்டேன்.25 வருசமா அவுஸ்ரெலியாவில் இருகிறேன் எனக்கின்று ஒரு அந்தஸ்து இருக்க தானே செய்யும் என்றவள் கோபத்துடன் சமையல் அறைக்கு சென்று "சன்" ரைஸ் முடிந்து போட்டு "சன்சைன் ஸ்பைசில" போய் ரைஸ் வாங்கி கொண்டு வாங்கோ என்று நாலு வீடு கேட்கும்வரை கத்தினா.50 வயசு கிழவன் சண்முகலிங்கம் என்ற தமிழ் பெயரையே சன் என்று கூப்பிடும் என்னுடைய மனிசியும் என்ட சனங்களும் புதுசாக பிறக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை வைப்பார்களா என்று மனதில் எழுந்த கேள்வியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்த சன்னை அவனுடைய பள்ளி நண்பன் "சண்முகலிங்கம்" என்று கூப்பிட தெரியாதவன் மாதிரி நடையை தொடர்ந்தான்..........

நம்பமுடியவில்லை

எல்லாரும் கதை எழுதீனம் (ஜம்மு கூட எழுதுற மாதிரி தெறியுது) சில பேர் கொப்பி பேஸ்ட் பண்ணிணம்..............நானும் என்ட பங்கிற்கு ஒன்றை எழுதி பார்தேன்,தொடர்கதை ஒன்றும் இல்லை ஒருநிமிச கதை,இந்த கதையையும் ஒருக்கா வாசித்து பாருங்கோ..நல்லம் என்று சொன்னீங்கள் என்றா தொடர்ந்து அறுப்பன்(எழுதுவன்).

கவிதாவுக்கு நம்ப முடியவில்லை பாஸ்கரன் இப்படி செய்வான் என்று.பாஸ்கரன் கவிதாவின் அண்ணணுடன் ஒன்றாக படித்தவன்,ஒரு நாள் பாஸ்கரனும் சுதனும் உரையாடி கொண்டிருந்தது கவிதாவின் காதில் விழுந்தது.போராட்டங்கள், ஆயுதங்கள் மற்று இயக்கங்களை வளர்ப்பது எப்படி மற்றும் சோசலிசம், கம்னியூசம் என்று எல்லாம் கதைப்பதை கேட்ட கவிதா மெல்லமாக சென்று தந்தையிடம் சொல்லிவிட்டாள். தந்தையும் சுதனிடம் விசாரித்த போது சுதனும், பாஸ்கரன் இயக்கம் ஒன்றில் இருப்பதாகவும் தன்னையும் இணையும்படி கேட்பதாகவும் தந்தையிடம் கூறினான். அடுத்த நாள் தந்தை சுதனை அழைத்து கொண்டு கொழும்பு சென்று ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்து அனுப்பிவிட்டார்.

முன்னொரு காலத்தில் அண்ணாவிடம் கதைக்கும் போது சிங்கள் இராணுவம் வீதியில் செல்லும் போது இப்படி நின்று கிரனைட் எறிய வேண்டும் என்று சொன்ன பாஸ்கரனா இப்பொழுது இப்படி தேசியதிற்கு எதிராக புலத்தில் இருந்து குரல் கொடுகிறான், கவிதாவால் நம்பமுடியவில்லை