சிவகுமாரின் அன்பு கட்டளைக்கு இணங்கி கலை நிகழ்ச்சிக்கு போவதிஸ்கு ஆயத்தமானான் சுரேஷ் கனடாவில் இருந்து வந்த சுரேசிற்கு சிட்னி வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை கொஞ்சம் நல்லதாகவே இருந்தது அவன் வந்த போது காலைநிலை வேறு இலங்கையில் உள்ளது போன்று இருந்தபடியால் அவனுக்கு மேலும் சிட்னி பிடித்திருந்தது.
கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சுரேஷ்,நான் சிவகுமார் மச்சான் ரெடியா என்று வாசலிலே நின்ற படியே கூப்பிட்டான்.இருவரும் கிளம்பினார்கள் படைபாளிகள் சங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதிற்கு.
பட்டு சேலைகள்,கதர் வேட்டிகள் என்று தமிழ் மக்கள் கூட்டத்தை கண்ட சுரேஷிற்கு தானிருப்பது ஊரிலா என்று ஒரு சந்தேகம் ஒரு கணம் தோன்றியது.அந்த எண்ணத்தை பொய்யாக்கியது பக்கத்தில் இருந்த இளசுகளின் ஆங்கில உச்சரிப்புகளும்,கிளி பேச்சும்.
மேடையில் அங்குமிங்கும் ஓடி திரிந்து கொண்டு மைக்கை செட் பண்ணி கொண்டிருந்தாள் ஒரு தமிழன்பர்,இடைகிடையே இன்னும் சில நிமிடங்களிள் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று கூறி கொண்டே இருந்தார் ஒரு படியாக நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.
பட்டுவேட்டி,விபூதி குறியுடன் சுரேஷின் வயதை ஒத்த ஒருவர் மேடையில் ஏறினார் அழகான மூக்குகண்ணாடி அணிந்திருந்தார் தனது பேச்சை அழகு தமிழில் தொடங்கினார்,தொடங்கு முதல் பக்தி பாடல் ஒன்றை பாடி தன் பேச்சை ஆரம்பித்தார்.பாரதியார்,மகாத்மா காந்தி போன்றோரின் சுகந்திர தாகம் பற்றியும்,ஆத்மீக சிந்தனைகள் பற்றியும் சில நகைச்சுவை துணுக்குகளை போட்டு சபையோரை அலுப்பு தட்டாம தனது பேச்சை அரங்கிற்றி கொண்டிருந்தார்.
மேடையில் பேசியவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே குரல் கேட்ட மாதிரி இருக்கே என்று கேட்டு கொண்டிருந்தான் சுரேஷ்,இதை உணர்ந்தவன் போல் சிவகுமாரும் என்ன மேடையில் பேசுவது தெரிந்த நபர் போல் இருக்கிறதா என்று கேட்டான்.
ஒம்டாப்பா அது தான் யோசித்து கொண்டிருக்கிறேன் கிளிக் பண்ணுதில்லையடப்பா என்றான் சுரேஷ் இவன் தான்டப்பா எங்களின்ட பள்ளிகூடத்தில் சீனியரா படித்த பிரசாந்.சோவித் யூனியன் சோவியத் நாடு என்ற பொரு சஞ்சிகை மாசம்,மாசம் அடித்து இலவசமாக உலகம் பூராகவும் விநியோகித்தவர்கள் அதை படித்து போச்சு கமீயூனிசம் படித்து கொண்டு திரிந்த பிரசாந் தான்,பிறகு ஏதோ இயக்கத்தில் சேர்ந்து இரண்டு வருசதிற்கு பிறகு வரும் போது கண்ணாடியும்,தாடியும் வைத்து கொண்டு ஊரில தனது பெயரை நாலும் பேர் கதைக்க வேண்டும் என்று பெண்கள் பாடசாலை முடியும் நேரத்திலும் மோட்டார் சைக்கிளில் ஓடி திரிந்து கொண்டு,நண்பர்களை தோழர்கள் என்று அழைத்து கொண்டு திரிவான் அவன் தானாடப்பா என்று கூறி முடிக்க முதலே சுரேஷ் அடாடா இவன் தான்டா "கண்ணாடி லெனின் ".அட இவன் இங்கையா இருக்கிறான் இவன் அப்பவே தமிழ் தேசியதிற்கு எதிர் கருத்து வைப்பவன் ஒன்று பட்ட இலங்கையில் கமினீயூசம் வளர்க்க வேண்டும் என்று புலம்பினவன் இன்று எப்படி புலத்தில் படைப்பாளிகளின் கலை நிகழ்ச்சியில் முன் நிற்கின்றான் என்று கேட்டான் சுரேஷ்.
பிரச்சாந் மேடைகளில் தான் தமிழ் தேசிய ஆதரவாக பேசி புலத்தில் வாழும் எம்மவர்களிடையே பிரபலாமா இருந்து கொண்டு புனை பெயரில் பத்திரிகைகளிளும்,வானொலிகளிள���ம் தேசியதிற்கு எதிரான கருத்தை வைக்கிறான்.அவனை பொறுத்தவரையில் பிரபலம் தான் முக்கியம் மற்றது எல்லாம் இரண்டாவது தரம் தான் என்றார் சிவகுமார்.
தூங்கிறவனை,தூங்கிறது போல் நடிக்கிறனவை எழுப்ப ஏலாது என்று கூறிய சிவகுமாரை பார்த்த சுரேஷ் வாடாப்பா இதற்கு மேலும் இந்த விழாவில் இருக்க மனமில்லை என்று கூறிய படியே எழுந்து சென்று விட்டான்.
No comments:
Post a Comment