Wednesday, February 3, 2016

வண்ண சிங்கள

"நெக்ஸ்ட் பிளிஸ்" என்ற அழ‌கிய குரலுக்கு சொந்தகாரியான அழகி என்னை அழைக்க நானும் "‍‍‍ஹாய்" என்று சொல்லியபடியே இருக்கிற பல் எல்லாத்தையும் காட்டிகொண்டு பயணப்பொதிகளை இழுத்து கொண்டு அவள் இருக்கும் கவுன்டர் அருகே சென்று கையில் ஆய‌த்தமாக வைத்திருந்த பாஸ்போர்டையும் விமான டிக்கட்டையும் கொடுத்தேன் .புன்முறுவலுடன் வாங்கியவள் சகலதும் ச‌ரியாக இருக்கின்றதா என பார்த்தபடியே பொதிகளை நிலுவையில் வைக்கும்படி சொன்னாள் .
த‌ராசு 35 கில்லோ காட்டியது.முப்பது கில்லோ தான் கொண்டு போகமுடியும் மிகுதியை நீங்கள் எடுக்க வேணும் என்றாள்.கை பொதியில் எவ்வள‌வு இருக்கு என்று பார்ர்ப்போம் அதையும் தராசில் வையுங்கோ என்றாள் . மெதுவாக தூக்கி வைத்தேன் அது ஒன்பது கில்லோ என்பதை காட்டியது.கை பொதி ஏழு கில்லோ தான் அனுமதிப்போம் அதையும் குறையுங்கோ என்றாள் . சிறிலங்கா விமானநிலையத்தில் ஒருகாலத்தில் கொஞ்ச காசை கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டிடுவாங்கள் , அறுவாங்கள் இப்ப கண்ட இடத்திலயும் கமராவை பூட்டி வைச்சிருக்கிறாங்கள் இதனால் வாங்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை கொடுக்கிறவங்களுக்கும் சுதந்திரமில்லை என்று திட்டியபடியே சாமான்களை குறைச்சு போட்டு மீண்டும் நிலுவையில் வைத்தேன் 31 கில்லோ காட்டியது. இந்த தடவை கைப்பொதியை எடை பார்க்கும் படி கேட்கவில்லை.பொதிகளுக்கு லெபிள்களை ஒட்டிய அழ‌கி தங்க்யூ என்று சொல்லி பாஸ்போர்ட்டையும் போர்டிங்க் பாஸையும் தந்தாள் ..நானும் பதிலுக்கு நன்றி சொல்லி போட்டு கைப்பொதியை தூக்கியபடி இடத்தை விட்டு நக‌ர்ந்தேன்.
குறைத்த நாலு கில்லோவையும் எப்படியும் கை பொதிக்குள் அடைந்து கொண்டு செல்வது என முடிவெடுத்தேன்.ஏற்கனவே அதனுள் இடம் இருந்தபடியால் இந்த நாலுகில்லோவையும் உள்ளே திணிக்ககூடியதாக இருந்தது.
குடிவரவு,குடியக‌ழ்வு விண்ணப்படிவத்தை நிரப்பி எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கைப்பையை தோளில் மாட்டிய‌படி உள்ளே சென்று வரிசையில் நின்றேன்.அங்கும் ஒரு பெண் அதிகாரி புன்முறுவலுடன் நெக்ஸ்ட் என்றாள்.பாஸ்போர்ட்டில் உள்ள படத்துடன் எனது முகம் பொருந்துகிறாத என பார்த்த பின்பு  கடவுச்சீட்டில்  சீல் குத்தி  தந்தாள் .அவ‌ளுக்கும் நன்றியை சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் நின்றேன்.அது பொதிகளை எக்ஸ்ரே செய்யும் லைன்.எனக்கு முன்னாள் வெள்ளையின‌ தம்பதியினர் இருவர் நின்றனர்.அவர்களின் கையில்  தண்ணீர் போத்தல் இருந்தது .அதை உள்ளே கொண்டு செல்ல முடியாது  என அதிகாரி சொல்ல தம்பதியினர் மனஸ்தாபட்டனர்.
உள்ளே கொண்டு செல்ல வேணுமென்றால் தண்ணீர் கொஞ்சத்தை குடித்து காட்டவும் என அதிகாரி கேட்க அவர்கள் குடித்துகாட்டினார்கள் ,அதன்பின்பு உள்ளே கொண்டுசெல்ல அதிகாரி அனுமதித்தார்.
என்னடாப்பா தண்ணீர் போத்தல் கொண்டு செல்வதற்கு இவ்வளவு நடப்பு காண்டுகின்றனர் என மனதில் எண்ணிகொண்டிருக்கும் பொழுது எனது முறை வந்தது .பெல்ட்,பேர்ஸ் போன்ற‌வற்றை  ஒரு டிரேயில் வைத்து , கைபொதியையும் எக்ஸ்ரே  மேசினுடாக அனுப்பிவிட்டு,நான் எக்ஸ்ரே கதவுடாக சென்றேன்.
தம்பி நல்ல பிள்ளை குண்டுகள் ,வெடிபொருட்கள் ,துப்பாக்கி அவனிட‌மில்லை என்று மெசின் தன‌து மெளன‌த்தின் மூலம் காட்ட‌ அதிகாரி உள்ளே செல்ல அனுமதித்தார்.நான் பெல்ட்,பேர்ஸ்,கைபொதியை எடுக்க போக இன்னுமொரு அதிகாரி கைபொதியை திறந்து காட்டும்படி கேட்டார்.உள்ளிருந்த சென்ட் போத்தலை எடுத்து எவ்வளவு மில்லி என  பார்த்துவிட்டு 100 மில்லி என்றபடியால் கைப்பொதியை கொண்டு செல்ல அனுமதித்தார்.
போர்டிங்க் பார்சில் குறிப்பிட்ட் கேட் இலக்கத்தை கண்டுபிடித்து வாசலில் நின்ற அழ‌கியிடம் போர்டிங் பார்சை கொடுத்து விமானத்தில் ஏறினேன்.
வெல்கம்,யுஅ சீட் ஒன் ரைட் என்றாள்,அவளுக்கும் ஒரு தங்க்யூ சொல்லி போட்டு எனது இருக்கையில் இருந்தேன்.நடை பாதையின் அருகில் உள்ள சீட் என்றபடியால் எனக்கு மிகவும் ச‌ந்தோசமாக இருந்தது.ஏன் என்றால் விமானபணிப்பெண்களை அடிக்கடி அழைத்து தேவையானதை வாங்க‌லாம்,அத்துடன் இயற்கை உபாதைகளுக்கு செல்வதென்றாலும் மற்றவ‌ர்களிடம் "எக்ஸ்கியுஸ் மீ" என்று பல்லிக்காமல் சென்று வரலாம். என்ன தான் வயசு போனாலும் பெண்களை கண்டால் ஒருக்கா பார்க்கதான் மனசு சொல்லுது.மனசின் ஆசையை நிறைவேற்ற சிங்கை அழகிகளை பார்த்து மனசை சமாதானப்படுத்திய பின்பு,தொலைக்காட்சி யில் படங்கள் பார்க்க முடிவு செய்தேன்.பிளேனிலிருந்து  தமிழ் படம் பார்த்தால் கெளரவ குறைச்சல் என்றபடியால் இங்கிலிஸ் படம் ஒன்றை பார்க்க‌முடிவுசெய்து முன்னால் இருந்த தொலைகாட்சிபெட்டியை விரல்களால் தொட்டு விறும்பிய சனலை அழுத்தி ஒரு ஆங்கில படத்தை போட்டு காதினுள் இய‌ர்பொனை செருகிகொண்டேன். விமானம் எயர்பொக்ட்டுக்குள் போகும் பொழுது சிறிது ஆட்டம் போட அடியேனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோண்றி  மறைந்தன.விமானிக்கு மூளையில் பிசகு என்றால் என்ன செய்வது,விமானத்தை யாராவது கடத்தினால்,கீழேயிருந்து யாராவது ஏவுகனையால் தாக்கினால் போன்ற எண்ணங்கள் உண்டாக எல்லாம் வல்ல சிட்னிமுருகனை நினைத்து" முருகா யூ ஆர் கிரேட் "என்று ஆங்கிலத்தில் வணங்கி ,ஊரில இருக்கும் சிவனை நினைத்து ஓம் நமச்சிவாயா சொல்லி மனத்தை தெற்றிகொண்டு கண்யர்ந்து போனேன்.
'சேர் யூ லைக் கொவி,யூஸ்"
இனிமையான குரலை கேட்டு திடுக்கெட்டு எழுந்து "ஸ்கொட்ச் ஒன் த ரொக்"என்றேன்.
ஒரு சிறிய பிளக்லேபிள் போத்தலும் ஐஸ் கட்டிகள் நிரப்பிய‌ கிளாசையும் ,அத்துடன் பிநட்ஸ் பக்கற்றையும் சிரித்த முகத்துடன் தந்து சென்றாள்.
படத்தை பார்த்தபடியே பழரசத்தைரசித்து பருகினேன்.மீண்டும் ஒரு பெக் எடுக்க வேண்டும் போல‌ இருக்க ,படம் பார்த்த கண்கள் விமானபணிப்பெண்ணை தேடியது.எனது கண்களின் தேடலுக்கு பலன் கிடைத்து.
"கான் ஐ ‍ஹாவ் வன் மொர் டிரிங்க்"
"சுயர்"
"தங்க்யூ"
மீண்டும் ரசித்து பருகிகொண்டிருக்கும் பொழுது வண்டிலை தள்ளி கொண்டு வந்தவள்,
"சேர் வட் யூ லைக் "
இரண்டு மாசால தோசை ஒரு தயிர் வடையும் என்று கேட்டாள் தந்திடுவாளாக்கும் என மனம் நினைக்க ,அவளோ என‌க்கு தான் கேட்டது புரியவில்லை என்ற எண்ணத்தில் தங்களிடம் உள்ள இரண்டு சாப்பாட்டை சொன்னால் அதில் சிக்கன் என்பது மட்டும் எனக்கு புரிந்தபடியால் அதையே திருப்பி சொல்ல சாப்பாட்டை தந்து புன்னகையும் இலவசமாக தந்து சென்றாள்..
சாப்பாட்டை முடித்தவுடன் அடுத்த தூக்கத்துக்கு தயாரானேன.
விமானி விமானத்தை இறக்குவத‌ற்குறிய அறிவிப்புக்களை செய்தார் விமானபணியாட்களும் அதற்குறிய ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள் .நானும் புறக்கணி சிறிலங்கா என்ற கொள்கையை துறந்திட்டு "அப்பே லங்கா,நமோ நமோ மாதா"என்ற கொள்கையை அறவணைத்து கொண்டு இறங்கினேன்...ஆயுதப்படையினர் ஆயுதமின்றி நின்றனர் ...ஓஓஓஒ...சமாதானம் வந்திட்டோ அதுதான் ஆயுதமின்றி ஆயுதப்படையினர் என்று நினைத்துகொண்டு எனது பொதிகளை பார்த்துகொண்டிருந்தேன்.டேய் புறம்போக்கு சமாதானம் வந்தால் ஏன்டா ஆயுதமின்றிய ஆயுதப்படை மனசாட்சி ஒரு கேள்வியை கேட்க திகைத்து போய் அதுதானே என்று மீண்டும் பதில் கேள்வியை மனசாட்சி கேட்டுது.... இப்படியான இக்கட்டான‌ நேரங்களில்.."ஒம் நமச்சிவாயா"சொல்லி மன‌தை சமாதானப்படுத்துவதுண்டு.அப்படி சொல்லிகொண்டு மனதை சமாதனப்படுத்தும் பொழுது எனது பொதி போன்று ஒன்று  வர அதை எடுத்து தயாராக‌ இருந்த ரொலியில் எற்றி தள்ளும் பொழுது
" மாத்தையா பொட்டாக் இன்ட மெக்க மகே பாக் " என்ற குரல் கேட்டு
அறைகுறை சிங்களம் தெரிந்தபடியால் எதோ பொதிப்பிரச்சனை, பாக்கை மாறி கொண்டுவந்திட்டன் போல  என்று போட்டு பாக்கை பார்த்தேன் என்ட பொதியில் இருந்த கீறல்கள் அந்த பொதியில் இல்லை என்பது புலப்பட்டது. பொதியின் சொந்தக்காரியின் குரலை கேட்டு அவளை பார்த்தேன்.ஆகா ஆகா ஆஅ காஆகா ....."ஒயாகே பாக் மேக்க எனேத"என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன் சிங்களபாரம்பரிய உடை உடுத்த ஒரு முப்பதைந்து வயது மதிக்க வண்ண சிங்களத்தி என்னருகில் நின்றாள்.....அர‌சியலும் ......புலம் பெயர் புண்ணாக்கும்...சிங்கையூருச்சியா?சிங்களத்தியா? தமிழிச்சியா?.