Friday, June 11, 2010

நித்தியானந்திகள்

ரிங்...ரிங்..ரிங்..தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் "மரியா" உங்களுடைய அபோயின்மன்ட் பின்னேரம் 3 மணிக்கு இருக்கு என்றாள்.நான் சரி "we will meet at 3ó clock same place"என்று சொல்லி தொலைபேசியை வைக்க,"சொப்பிக்"முடிவடைந்து வீட்டுகுள் நுழைந்தவள் யாரோட மூன்று மணிக்கு போக போறியல் இங்க நான் ஒருத்தி இருக்கிறேன் என்று இல்லை கண்டவள்கிண்டவளுடன் "போனில்"கதைப்பது பிறகு"அபோயின்மன்ட் விக்ஸ்"பண்ணுறது,இன்றைக்கு நான் கண்டபடியால் தெரிந்துவிட்டது இப்படி எத்தனை நடந்திச்சோ என்று புறுபுறுத்தபடியே உள்ளே சென்றவள் வாங்கிய பொருட்களை குளிர்சாதனபெட்டியில் போட்டாள்.சும்மா விசர் அலட்டாதையும் என்னுடன் வேலை செய்யும் "மரியா"வேலை விடயமாக மூன்று மணிக்கு ஒரு "மீட்டிங்"இருக்கு அதை தான் ஞாபகபடுத்தியவள் என்றேன்.குளிர்பானத்தை குடித்தபடியே என்னவோ நீங்க சொல்லுறதை தான் நான் நம்ம வேண்டும்,நானும் "டிகிரி கோல்டர்"தான் அந்த காலத்து பொம்பிளைகள் மாதிரி இல்லை என்று சிரித்தபடியே கூறினாள்.குளிர்பானம் அவளை குளிர்மைபடுத்தியது நானும் குளிர்பானத்திற்கு ஒரு நன்றியை சொன்னேன்."ரெலிபோன் ரிங்" பண்ணுது எடுங்கோ அப்பா நான் பெரியவனை "சுவிமிங் கிளாசில"விட்டிட்டு வாரேன் என்று வெளியே சென்றவள் திரும்பி வரும் பொழுது தொலைபேசியில் நான் சல்லடித்து கொண்டிருப்பதை கண்டாள்,கோபம் வந்தாலும் காட்டிகொள்ளாமள் உள்ளே சென்றாள்.ஆனந்தி,மனிசி வந்திட்டா பிறகு நான் கதைக்கிறேன் உம்முடைய நம்பரை சொல்லும் என்று அதை எழுதி கொண்டேன்.என்ன வெயிலோ என்று அன்பாக கேட்க,வெயில் வெளியில் இல்லை மனசிற்குள் தான் அனலாய் சுடுகிறது என்றாள்.ஏன் சும்மா கத்துகிறாய் என்று எனது குரலை உயர்த்த அடங்கியவளாக நீங்கள் ஏன் இப்ப சும்மா கத்துறியள் இப்படி கத்துவதனால் எனக்கு ஒன்றுமில்லை உங்களுக்கு தான் கூடாது."பிளேட் பிரசர்"கூடி ஒரு நாளைக்கு மண்டையை போட வேண்டி வரும்,மண்டையை போட்டாலும் பரவாயில்லை கை,கால் இழுத்து போட்டால் யார் வைத்து பார்க்கிறது என்றவள், எனிமேல் கோபம் வரும் போது சும்மா கத்தாமல் நித்தியானந்த சுவாமியின் கதவை திற காற்று வரும் சொற் பொழிவு சஞ்சிகைகளிளும் வருது தொலைகாச்சிகளிளும் வருகிறது பொறுமையாக இருந்து பாருங்கோ படியுங்கோ மனதில் அமைதி கிடைக்கும் சொல்லியபடியே ஒரு சஞ்சிகையை கொண்டு வந்து தந்தாள்.சொல்ல மறந்து போனேன் நீர் வெளியே போகும் பொது ஒரு "கோல்"வந்தது அது யாரோ உம்முடையை பஜனை குரூப்பில் இருப்பவராம் நித்தியானந்த கண்ணன் என்று பெயர் சொன்னார் சனிகிழமை சுவாமி நித்தியானந்தா பஜனையாம் உம்மை வரட்டாம் என்றேன்.அதுசரி யாரப்பா அந்த நித்தியானந்த கண்ணன்,அட உங்களுக்கு தெரியாதோ அது எங்கண்ட "பென்டில்கில்" கண்ணன் சிவபக்தர்களை சிவனடியார்கள் என்பது போல் கம்னியூஸ்டுகளை தோழர் என்பது போல் நித்தியானந்தாவின் பக்தர்களை நித்தியானந்திகள் என்று சொல்லுறனாங்கள்.அடுத்த சனிகிழமை நித்தியானந்த சுவாமிக்கு காலை 5 மணியில் இருந்து பின்னேரம் 5 மணி வரை பஜனை வைக்கிறோம் மத்தியான பிரசாதமும் உண்டு அவருடைய சொற்பொழிவுகளை நித்தியான்ந்தி பத்மா விளங்கபடுத்த உள்ளார் நீங்களும் வாங்கோ என்றாள்.சரி என்று தஞ்சாவூர் பொம்மை போல் தலையை ஆட்டி போட்டு நான் எங்களிண்ட யாழ் இணையைத்தை தட்டி பார்த்து கொண்டு இருந்தேன்.நித்தியானந்தாவின் லீலைகள் என்று வந்த செய்தியை படித்துபோட்டு இஞ்சவாரும் கதவை திறந்து காற்று வாங்கின சாமி சீலையை திறக்க போய் பிரச்சினையில மாட்டுபட்டு போனாராம் என்று மனிசியை கூப்பிட்டு காட்டினேன் மனிசி நம்பமாட்டாள் என்று அடம்பிடித்தாள் அவள் ஒரு நாளும் அப்படி செய்யமாட்டார் அது "கிராபிக்ஸ்"செய்த விளையாடு சாமியின் எதிரிகள் அப்படி செய்து போட்டார்கள் அந்த முகத்தை பார்த்தாலே தெரியுது இப்படியான கெட்டவேலைகள் செய்ய கூடியவர் அல்ல என்று.சுவாமியை இப்படி எழுதினவர்கள் பேசினவர்கள் எல்லாம் இடி விழுந்து சாக வேண்டும் என்று திட்ட வேறு தொடங்கிவிட்டாள்.அடியே கட்டின புருஷன் "ரெலிபோனில" கதைத்தாலோ பொம்பிளையோடு சிரித்து கதைத்தாளோ சந்தேகம் வந்து முறைத்து பார்பீர்கள் ஆனா இந்த பொறுக்கிகள் சாமியார் என்ற பெயரில் செய்தவைகளை படம் பிடித்து காட்டினாலும் நம்பமாட்டியள் என்று அடம்பிடிகிறியள் எதற்கு எடுத்தாலும் நாங்கள் "டிகிரி கோல்டர்"என்பீர்கள் உந்த புறம்போக்குகள்,பொம்பிளை பொறுக்கிகள் பின்னால் போகும் போது உங்கள் டிகிரிகள் உங்களுக்கு என்னத்தை செய்தன....இனிமேல் எவனுக்கு பின்னாலையும் சாமி,ஆனந்திகள் என்று போனீயோ கொலை விழும் அல்லது நான் வீட்டை விட்டு போகனும் இல்லை நீ விட்டு போகனும் என்றபடியே அரைபோத்தலை அடித்துபோட்டு நான் நித்தியானந்ததில் திளைத்தேன்.

No comments:

Post a Comment