Monday, July 12, 2010

களனி கங்கையின் இசை நிலவிலே
பெளத்த நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்துரயில்,
பஸ் ஒட்டி விளையாடிடுவோம்

யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம்
புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம்
முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு
அரபிய தொப்பிகளை பரிசளிப்போம்

புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம்
இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம்
மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால்
எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம்


மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம்
வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம்
மட்டுநகரில் கருவாடு காயவைப்போம்
தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம்
விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம்
சீனாக்காரனுக்கு துறைமுகம் கொடுப்போம்
இந்தியாக்காரனுக்கு காதில நல்லாய் பூ வைப்போம்

பொய்கள் சொல்வோம் கொலைகள் செய்வோம்
சர்வதேசத்திற்கு சவால் விடுவோம்
ஜக்கிய நாடுகள் சபைக்கு வழக்கு போடுவோம்
நமோ நமோ மாதா நம்மட மாதா...


பாரதியார் சிங்களவராக இருந்திருந்தால் இப்படி கவிதை எழுதியிருப்பார் ....சும்மா ஒரு கற்பனை

No comments:

Post a Comment