Friday, March 18, 2011

அங்கிள் கமரா இல்லைதானே குட்டி கிறுக்கல்

ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்கு கடைசியாக செல்வதும், வகுப்பறையைவிட்டு முதலில் வெளியில் ஒடி வந்து படிக்கட்டுகளுக்கு கீழ் ஒன்று கூடுபவர்களும் நாங்களாகத்தான் இருப்போம்.நாங்ககள் 11 ஆம் வகுப்பு மாணவர் குழுவை சேர்ந்தவர்கள்.நாங்கள் இப்படி படிகளுக்கு கீழ் ஒடி வந்து நிற்பதற்க்கு முக்கிய காரணம் பெண்கள் படிகளில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது எதாவது தெரியும் என்று பார்ப்பதற்க்குதான்.இதனால்தான் அங்கு எல்லோரும் ஒடி வருகிரார்கள் என்பது அன்றுதான் ஆசிரியருக்கும் தெரியவந்தது.சில பெண்களுக்கு பெடியன்கள் ஏன் கீழே வந்து நிற்கிறார்கள் என்று தெரிந்தமையால் படிகளில் ஏறும் பொழுது மிகவும் கவனமாக ஏறுவார்கள்.சில பெண்களுக்கு இது தெரியாது ஆனபடியால் அவசரப்பட்டு ஏறுவார்கள்.அவர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்று விட்டோம்.பிறகு நாம் எமது திருவிளையாடலை தொடங்கிவிட்டோம்..ஒருகுழுவினரை ஆசிரியருகு கட்டுப்படுத்த முடியாமல் போகவே இந்த விடயம் அதிபருக்கு சென்றது .அதிபர்மிகவும் கோபக்காரர்.ஒரு நாள் மறைந்துஇருந்து யார் படிக்குகீழ் வந்து நிற்கிறார்கள் என நோட்டம் விட்டார்.அதில் 6 பேர்வரை மாட்டுப்பட்டனர்.அந்த 6 பேரில் இரண்டு பேர் பாடங்களில் மிகவும் கெட்டிக்காரர்.மீண்டும் படிகளுக்கு கீழ் நீங்கள் கூட்டமாக நிற்பதை கண்டால் பாடசாலையை விட்டு விலத்தி விடுவேன் இதுதான் நான் உங்களை கடைசியாக இந்த இடத்தில் பார்ப்பதாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டார்.அந்த அதிபரால் பலர் பாடசாலையை விட வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டதுண்டு.ஆனால் அவர்கள் படிப்பில் அவ்வளவாக கெட்டித்தனம் இல்லை,ஆகவே சிறு பிழைகள் விட்டாலும் உடனே அதிபர் அந்தமாணவர்களை பாடசாலையை விட்டு இடைநிறுத்திவிடுவார்.இந்த ஆறுவரில் இருவர் பாடங்களில் சுழியன்கள் என்றபடியால் மற்றவர்களுக்கும் தப்பித்து கொண்டார்கள். கதைகள் ,கட்டுரைகள் எழுதுவது,நாடகம் நடிப்பது போன்ற கலைத்துறையிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.அதிபரிடம் இருந்து சலுகை கிடைக்க அதுவும் ஒரு காரணம்அடுத்த இரு வாரங்கள் ஒருத்தரும் படிக்கட்டுக்கு கீழ் போய் ஒன்று கூடுவது இல்லை.3வது கிழமை சந்திரன் மட்டும் அந்த படிகட்டுக்கு கீழ் வருவான் வந்த வேகத்திலயே திரும்பி சென்றுவிடுவான். அவனை தொடர்ந்து சுதன்,ராஜ் இருவரும் வருவார்கள் அவர்களும் சந்திரனைப்போலவே வந்த வேகத்தில் திரும்பி போவார்கள்.ஆனால் இந்த மூவரும் ஒன்றாக் கூடுவதில்லை.மச்சான் நான் இன்றைக்கு பார்த்தன் என சந்திரன் வந்து ஒரு பெண்னின் பெயரை சொல்லி கதை விடுவான் நாம் எல்ல்லொரும் அவனை சூழ்ந்து கொள்வோம் சில கற்பனகளை நிஜம் போல் சொல்லுவான் நாமும் ஆர்வத்துடன் கேட்போம் அதனால் அவன் தான் ஒரு கிரோ என்று எண்ணிக்கொள்வான்.உயர்தர பரீட்சையில் எங்களை விட சந்திரனுக்கு நல்ல சித்தி கிடைத்தது.பல்கலைகழகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.பல்கலைகழகத்தில் தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு வந்து சொல்வான்.ஒரு தடவை பல்கலைகழகத்தில் பகிஸ்கரிப்பு நடந்த படியால் ஊரில் வந்து 3 மாதங்கள் வரை நின்றான்.அந்த காலகட்டத்தில் ஒரு பெண்னுடன் தகாத முறையில் உறவு கொள்ள முற்பட அவள் தனது இயக்க சிநேகிதியிடம் முறையிட்டாள்.இயக்கத்தினர் அவனை விசாரனக்கு என அழைத்து சென்றனர்.இதை அறிந்த பெற்றோர் செய்வது அறியாமல் தவிர்த்தனர்.இயக்க பெடியன்கள் என்னுடைய பிள்ளையை அடிப்பார்களோ,தட்டி கிட்டி போடுவாங்களோ என்ற பயத்துடன் தவித்தனர்.எங்களுடன் படித்த ஒருவன் இயக்கத்தில் நல்ல பதவியில் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக எனது வீட்டை வந்து நடந்த சம்பவம் பற்றியும் சந்திரனை உடனடியாக விடுவிக்க எதாவது உதவி செய்யும்படியும் கேட்டனர்.எனது நன்பனின் உதவியால் சந்திரனை விடுதலை செய்யக்கூடியதாக இருந்தது.இருந்தாலும் அவனை இயக்கத்தினர் எச்சரிக்கை செய்துதான் விடுதலை செய்தனர்,இனிமேல் இப்படியான செட்டைகள் விட்டால் தன்டனை பாரதூரமாக இருக்குமென்ற தோனியில்சொல்லி அனுப்பிவைத்தார்கள்.இரண்டு நாட்களின் பின்பு கொழும்பு செல்ல ஆயத்தமானான்.புகையிரத நிலையத்திற்க்கு நான் தான் அழைத்துச் சென்றேன்.மச்சான் உன்டை ஆட்களிட்ட சொல்லு, துவக்கை கையில வைச்சுக் கொண்டு என்னை வெருட்ட ஏலாது என்று,நீ இருந்து பார் நான் உவங்களை கிழி கிழி என்று கிழிக்கிறனோ இல்லையோ என்று.பெட்டகளுடன் சேட்டை விட்டால் உவையளுக்கு என்னவாம்.அது என்னுடைய சுதந்திரம்......என்னை போல எழுதத் தெரிந்த வாசிக்க தெரிந்த ஆட்கள் உவையளிட்ட மருந்துக்கும் கிடையாது.என வீராப்பு பேசிய படியே விடை பெற்றான்.கொழும்பில் இருக்கும் பொழுதும் ,அதன்பிறகு புலம்பெயர்ந்த பின்பும் "சந்திரமுகி","சண்டியன்" என்ற புனை பெயர்களில் புலிகளுக்கு எதிராக பல கட்டுரைகளை வசைபாடியும்,திட்டியும் எழுதியிருந்தான்.ஆலையில்லா ஊரில் இழுப்பை பூ சக்கரை என்ற மாதிரி அவனது படைப்புக்களுக்கு ஒரு சிலரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.அவர்கள் இவனை இலக்கியவாதி என அழைக்க தொடங்க எனையோரும் அவனை இலக்கிவாதி என்றனர். இலக்கிய விழா,பட்டிமன்றம்,சிறுவர்களுக்கான கவிதை போட்டிகள், கட்டுரைபோட்டிகள் போன்றவற்றிக்கு பிரதமவிருந்தினராகவும் அழைத்தனர்.புலி எதிர்ப்பு எழுத்துதான் நவீன இலக்கியம் என்ற ஒரு எழுதாதசட்டம் தற்பொழுது தமிழிலக்கியவாதிகளிடையே காணப்படுவதால் இலங்கை ,இந்தியா போன்ற இடங்களிலும் அவன் பிரபலமடைந்தான்.திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்காக புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.வழமையாக என்னை கண்டால் "கலோ அங்கிள்"என ஒடி வந்து என்னுடன் கதைப்பாள் கீதா, ஆனால் அன்று அவள் என்னிடம் வரவில்லை,எனவே நான் அவளருகே கதைக்க சென்றேன்.கீதா 5ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே புலம்பெர்ந்தவள்,நல்லாய் தமிழ் கதைப்பா இப்பொழுது நல்ல இடத்தில் சட்ட ஆலோசகரா பணிபுரிகிறாள். மேற்கத்தைய பாணியில்தான் உடைகள் அணிவாள். நான் அவளுடன் கதைக்க தொடங்க அவள் என்னுடைய முகத்தை பார்த்து கதைப்பதைவிட என்னுடையை "பிறிவ் கேஸ்சை" மாறி மாறி பார்த்து கதைத்தாள்.புகையிரதம் வரவே இருவரும் ஏறிகொண்டோம்.எனது இருக்கைக்கு முன் ஒரு இடம் காலியாக இருந்தது.அதில் இருந்த கீதா அங்கிள் பீறிவ் கேஸ்க்குள் கமரா ஒன்றும் இல்லைத்தானே என சிரித்தபடி கேட்டாள்.நான் உடனே பீறீவ் கேஸை கீழே பார்த்தேன் ஒரு பக்கம் திறபட்டு இருந்தது ,உடனே எடுத்து பூட்டிவிட்டு ஏன் பிள்ளை அப்படி கேட்ட நீ என்று கொஞ்சம் ஆத்திரமாகவே கேட்டேன்.என்ன அங்கிள் நீங்கள் நேற்று நியுஸ் டி.வியில் பார்க்கவில்லையோ? பார்க்காவிடில் ......கொம் போய் பாருங்கோ எல்லாம் விளங்கும் என்றாள்.....வேலைத்தளம் சென்றவுடன் .கொம் அடிச்சேன் சகல விபரமும் வந்தது...இப்பொழுது வேலைக்கு செல்லும்பொழுது பீறீவ் கேஸ் கொண்டு செல்வதில்லை .....கை வீசம்மா கைவீசு ...........

1 comment:

  1. நல்ல பதிவு புத்தன். பந்தி பிரித்து எழுதியிருந்தால் ,வாசிக்கச் சுகமாக இருந்திருக்கும்.

    ReplyDelete