Sunday, July 25, 2010
வொப்
நிசிக்கு ஒரு கலியாணத்தை செய்து வைச்சால் நான் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அவளும் ஒன்றுக்கும் சம்மதிக்கிறாள் இல்லையே ,ஒவ்வொன்றுக்கும் ஒரு குறை சொல்லி கொண்டிருக்கிறாள் என்று புறுபுறுத்தபடியே வந்த அமர்ந்தாள் ஏன்னுடைய பத்தினி.நேற்று பார்த்த பெடியனைப்பற்றி என்ன சொல்லுகிறாள் உன்ட மகள் என்றேன்.அவனையும் பிடிக்கவில்லையாம்,சரியான" வொப் " என்கிறாள்.அது என்னடி வொப் என்றால் ,உங்களுக்கு ஒரு நாசமறுப்பும் தெரியாது ,இந்த காலத்து பெட்டைகள் பெடியன்களைப்பற்றி கதைக்கிற கதைகளைப்பற்றியும் தெரியாது ,சரி எனக்கு ஒன்றும் தெரியாது உனக்கு தெரிஞ்சதை சொல்லப்பா என்றேன்.வொப் என்றால் fresh on boat(FOB) அதாவது பெடியனை பார்த்தால் ஊரில இருந்து இப்பதான் வந்த பெடியன் மாதிரி இருக்காம் கன்ன உச்சிபிரித்து ,மீசையும் வைச்சிருக்காம் பார்க்க சகிக்க முடியவில்லையாம் என்கிறாள்.நான் என்னத்த செய்ய, போனமுறை பார்த்த பெடியனுக்கு மொட்டை என்று நக்கலடித்தாள் இப்ப பார்த்த பெடிக்கு முடி அதிகமாம்.அதற்கு முதல் பார்த்த பெடியன் மம்ஸ் பேப் என்றாள் அதாவது அம்மா பிள்ளையாம் ,அம்மாவுக்கு பின்னால் திரிகிறானாம்,ஆனபடியால் அவன் வேண்டாம் என்றாள்.சரி அப்ப உம்முடையா அண்ணனின் பெடியன் ஊரில டாக்டராக வேலை செய்யிறான் அவனை கூப்பிட்டு கட்டி வைப்போமோ? என்று நான் கேட்க உள்ளே இருந்த நிசி ஒடி வந்து நோ டட் எனக்கு சிறிலங்கா போய்ஸை கட்டி வைக்க வேண்டாம்.அவர்கள் எல்லாம் என்னுடைய கல்சருக்கு சரி வரமாட்டினம்.அது என்னடி உனக்கு என்று ஒரு கல்சர்,நாங்கள் எல்லோரும் ஒரே கல்ச்சரில் இருக்கிற ஆட்க தானே,அம்மாவின் சொந்தம் வேற பிறகு என்ன கல்சர் கதை கதைக்கிறாய்!!இல்லை டட் நான் இங்க வளர்ந்தனான் எனக்கு அங்கு வளர்ந்தவர்கள் சரிவராது.இங்கு வாழ்ந்த போய்ஸ்தான் சரிவரும் என்று நினைக்கிறேன்.அப்ப வெள்ளைகாரனையோ கட்டப்போகிறாய் என்று ஏக்கத்துடன் தாயார் கேட்க,உங்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது என்று எனக்கு தெரியாது,கோபத்துடன் கதவை சாத்தியபடியே உள்ளே சென்று தூங்கிவிட்டாள் நிசி..யாரையாவது லவ் பண்னுகிறாளோ தெரியவில்லை,அதுதான் எல்லாத்தையும் வேண்டாம் என்று சொல்லுகிறாள் போல கிடக்குது,நீர் மெல்லமாக கேட்டுபாரும்.சீ ..ச்சீ ...அவள் அப்படி செய்யமாட்டாள்,நான் அப்படி வளர்க்கவில்லை.என்கன்ட ஆட்களுக்குள் இப்ப யார் யார் எந்த சாதி என்று கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு இப்ப எல்லோரும் படிச்சவங்களாக இருக்கு. ஊரிலயாவது பெடியன்களை பார்த்தவுடன் ஒரளவுக்கு தெரியும் ஆனால் இங்க எங்களையும் விட அவங்கள் மேல அல்லோ இருக்கிறான்கள் படிப்பிலும் சரி ,பொருளாதாரத்திலும் சரி.உப்படித்தான் வாசுகியின் மகள் என்கன்ட ஆட்களில் ஒருவனை லவ் பண்னி போட்டுது என்று சந்தோசப்படு கலியாணம் கட்டிவைச்சவங்கள்.கலியாணத்தன்று தான் தெரியும் அவையள் எங்களைவிட குறைஞ்சவையள் என்று,ஆனபடியால் நான் என்கன்ட சாதிப்பிரச்சனை பற்றி வடிவாக சொல்லி வைச்சிருக்கிறன் ,அவள் லவ் பண்ணமாட்டள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்றபடியே அருகில் இருந்த தேனீரை தந்தாள்.இப்ப உந்த வெளிநாட்டில ஒருத்தரும் பெரிதாக சாதி பார்க்கிறதில்லைதானே,நீர் மட்டும் ஏன் தூக்கி பிடித்துகொண்டு இருக்கிறீர்,அது சரி உம்முடைய இரண்டாவது அண்ணனின் பெடியன் சிங்களத்தியை கட்டியிருக்கிறான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறீயள்,ஆனால் மற்றவன் தமிழனுக்குள்ள சாதி மாறி கட்டினால் நக்கல் கதை உங்களுக்கு என்றவுடன் ,எங்கன்ட ஆட்களை சுரண்டாவிடில் உங்களுக்கு நித்திரை வராதே என்றபடியே சண் டிவியை ஒன் செய்தாள்.சிங்களவரில் உந்த சாதிபிரிவினை இல்லை என்று உங்களுக்கு தெரியும்தானே,அதுபோக அண்ணனின் பெடியன் கட்டின பெட்டை மகிந்தாவின் ஒன்றைவிட்ட தம்பியின் மனிசியின்ட ஒன்றைவிட்ட அக்காவின் மகள் .அப்ப மகிந்தா ரொயல் பமிலி அவையளுக்குள்ள நீங்கள் கட்டிய படியாள் நீங்களும் ராயல் பமிலி என்று சொல்லுறீயள்.ம்ம்ம்ம்ம்ம்ம்நிசியை கூப்பிட்டுகொண்டு நீரும் ஒருக்கா இங்கவாரும்.பிள்ளை நிசி நானும் ஒரு காலத்தில வொப்தான்,அதாவது ஒரு காலத்தில் அகதியாக வந்தவன் தான்,அதற்கு பிறகு படிச்சு பட்டம் பெற்று நல்ல உத்தியோகம் பார்க்க வெளிக்கிட்டனான்.இப்ப நீ பார்க்கும் குறும்தாடியும்,வாயை திறந்தால் ஆங்கிலம் ,பொழுது போக டெனிஸ் விளையாடும் அப்பா ஒருகாலத்தில வொப் ,இங்கு வரும் பொழுது கன்ன உச்சியுடன் மீசையை வைத்திருந்தனான்.ஏன் உன்னுடைய அம்மாவும் இப்ப பார்க்கிற மாதிரியில்லை,அவவும் முகத்தில் எண்ணை வளியும்,இரட்டை பின்னல்,ஸ்கேர்ட் ,பிளவுஸ் சுடன் தான் வந்தவ,இப்ப தலமயிரை வெட்டி போட்டு ஜீன்ஸும் போட்டுக்கொண்டிருக்கிறா.நாங்கள் எங்களை அறியாமாலேயே இந்த மேற்கத்தைய விழுமியங்களை பின்பற்றி எங்களை மாற்றிப்போட்டோம்.எங்களுடைய இந்த தோற்றத்தை பார்த்து பரம்பரை பரம்பரயாக நாங்கள் இந்த தோற்றத்துடன் வாழ்ந்தவர்கள் என்று எண்ணிவிடாத,இன்றைய வொப் தான் நாளைய கதாநாயகர்கள்.வெளிநாட்டுக்கு வரும் பொழுது அப்படிதான் இருப்பார்கள் ,5,6 வருடங்களுக்கு பிறகு மேற்கத்தைய விழுமியங்களை பரம்பரையாக பின்பற்றுபவர்கள் போல நடப்பார்கள்.நீ இங்கு பிறந்து வளர்ந்த படியால் உனக்கு உன்னுடைய அப்பா அம்மாவின் வொப் கோலங்கள் புரியவில்லை.உனக்கு விபரம்தெரியும் வயசு வரும் பொழுது கொம்மாவும் நானும் வொப் தோற்றத்தில் இருந்து மேற்கத்தைய தோற்றத்திற்கு நிறத்தைதவிர எனையவற்றை மாற்றி கொண்டுவிட்டோம்....எங்கன்ட ஆட்களில் 90ம்வீதமானவர்கள் வொப் கோலத்தினர்தான் வரும் பொழுது என்பதை மற்றும் நீ நினைவில் வைத்திரு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment