Thursday, September 14, 2017

பூர்வீகம்

பாடசாலையில் எனது பிள்ளைகளின்  பட்டமளிப்பு விழா பரிசளிப்புவிழா போன்றவற்றுக்கு அடியேன் போவது வழக்கம்.நிகழ்ச்சிதொகுப்பாளராக பாடசாலை மாணவத் தலைவரும் உபதலைவரும் கடமையை செய்வது வழக்கம்.
சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிகளை தொடங்குவதில் உந்த வெள்ளைகள் கெட்டிக்காரங்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான்வேணும்.அவங்களோட சேர்ந்த எங்கன்ட வாரிசுகளும் நேரவிடயத்தில் ஒழுங்காக கடைப்பிடிக்கினம் என்பதில் ஒரு சின்னசந்தோசம்.
நானும் போயிருக்கமாணவத்தலைவன் ''we would like to acknowledge the traditional custodians of this land, of elders past and present.''
நானும் அவுஸ்ரெலியாவுக்கு வந்து கொஞ்ச காலம் ஒடிவிட்டது ,உந்த பூர்வீக குடிகளை கணடதை விட வந்தேறுகுடிகளைகண்டதுதான் அதிகம்.ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற வீகாதசாரப்படி என்று சொல்லலாம்.
பூர்வீக குடிகளுக்கு மரியாதை செலுத்துவதாக சொன்ன மாணவத்தலைவனும் ஒரு வந்தேறு குடிதான். . பக்கத்திலிருந்த மகளிடம் கேட்டேன் உந்த மாணவகூட்டத்தில் ஓரு பூர்வீக குடியை எனக்கு காட்டுமாறு ,  அவள் திரும்பி பார்த்து சிரித்துவிட்டு எங்களுடைய‌ ஸ்கூலிலயே ஒரு பூர்வீக குடிகளுமில்லை அப்பா என்றாள். பூர்வீககுடிகள் அழிக்கப்பட்ட பின்பு இப்படி மரியாதை செலுத்துவதும் ஒருவித நாகரிகம் போல கிடக்கு என நினைத்தவுடன் எனக்கு தாயக் நினவுகள் மலரதொடங்கியது. எமது இனமும் பூர்வீகத்தை ஒருநாள் தொலைத்து விடும் ஆனால் அந்த இனத்திற்கு மரியாதை செலுத்த அழித்தவன் உத்தமனல்ல என்று மனது கூறிகொண்டது

தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக மீண்டும்   எழுந்து நிற்கும் படி சொன்னார்கள் .எல்லோரும் பாடினார்கள் நானும் பாடினேன் என்று சொல்வதை விட வாய்யசைத்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.இரண்டு சகாப்தமாக இந்த நாட்டிலிருந்து சுகபோகங்களை அனுபவிக்கிறேன் ஆனால் இன்னும் தேசிய கீதம் ஒழுங்காக‌ பாடத்தெரியாது,அதற்காக எனது குடியுரிமை ரத்து செய்வார்கள் என நான் நினைக்கவில்லை.
 கிழக்கிலங்கையில் நான் சிறுவயதில் கல்விகற்கும்பொழுது தமிழில் சொல்லிதந்த "நமோ நமோ மாதா" வையே ஒழுங்காக பாட வில்லை பிறகு எப்படி ஆங்கிலத்தில் தேசிய கீதம் பாடுறது.
அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த பொழுது சிங்கம் 3 பார்க்க வேணும் என்று குடும்பத்தினர் சொல்ல நானும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி போட்டு தியட்டருக்கு போனேன்.பீனிக்ஸ் மொலில் உள்ளது தியட்டர்,வெளிநாடுகளில் உள்ள வசதிகளுடன் அந்த மொலும் தியட்டரும் இருந்தது.
வெளிநாட்டு பிராண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக இருந்தது.அங்கு பணிபுரிபவர்களும் நல்ல ஆங்கில உச்சரிப்புடன் பேசகூடியவர்காளாக காணப்பட்டனர்.அதுமட்டுமல்ல பணியாளர்களும் மேற்கத்தைய நாகரிக உடைகளும் அலங்காரங்களுடன் இருந்தனர்.
சிங்கம் 3 யை பார்ப்போம் என்று போய் தியட்டரில் இருந்தேன் .எல்லொரும் எழுந்து நின்றார்கள் என்னடா கோதரி என்று முழுசிகொண்டிருக்கும் பொழுது "ஜனகனமன" ஒலிபர்ப்பினார்கள் நானும் எழுந்து நின்றேன்.எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து எதோ ஒரு நாட்டின் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டிய நிலையை நினைத்து எனக்கே சிரிப்பு வந்திட்டுது.தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க வேணும் என்று எழும்பி நிற்கவில்லை எழும்பி நிற்காவிடில் இருட்டடி விழும் என்ற பயத்தில் தான் எழும்பி நின்றேன்.
.பிரபாகரன்,உமாமகேஸ்வரன்,வாமதேவன்,நாகராஜா போன்றோர்களின் படங்களை போட்டு பெரிய துண்டு பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். இப்படிதான் 1975/76 களில் என்று நினைக்கிறேன் கொழும்பு தியட்டர்களிலும் தேசிய கீதம் ஒலிபரப்பினவர்கள் ஆங்கில படம் பார்க்க போயிருந்தேன் இரண்டு மூன்று பேர் குடிபோதையில் எழுந்து நிற்காமல் இருந்தார்கள் பக்கத்திலிருந்த  தேசப்பற்றாளர்கள் எல்லாம் கூக்குரலிட்டு அவர்களை அடிக்க சென்றனர் அதில் ஒரு கைகலப்பு வந்து பின்பு அவர்கள் எழுந்து நின்றார்கள்.
தமிழன் நாட்டை பிரிக்க போகிறான் எல்லோரும் தேசப்பற்றாளராக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் முளைவிட தொடங்கிய காலம்.தேசப்பற்று என்பது தானாக வரவேண்டும் இன்னோருத்தனின் வற்புறுத்தலின் காரணமாக தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது என்ன விதத்தில் நியாயம் என்று எனக்கு புரியவில்லை .
நானும் மூன்று தேசிய கீதத்திற்கு வாய் அசைத்திருக்கிறேன் அதில் என்ன சொல்லியிருக்கு என்று இன்றுவரை தெரியாது.அதாவது புரியாமல் எழுந்து நின்றிருக்கிறேன்.




பூர்வீககுடிகளை பற்றி எழுதபோய் தேசிய கீதத்தில் வந்து நிற்கிறேன்.பூர்வீக குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பூர்வீக குடிகள்அழிக்கப்பட்டு புதிய தேசியம் உருவாகி அந்த தேசியத்தை பூர்வீக குடிகள் மதிக்க வேண்டும் என்பது இன்றைய வரலாறு.
"அப்பா உந்த ஒசிஸ் அபோஜினலை டிஸ்கிரிமினேட் பண்ணியிருக்கினம்"
"எப்படி உமக்கு தெரியும்"
"லொட் ஒவ் ஆர்டிக்கல்,இருக்கு நான் வாசிச்சிருக்கிறேன்இட் இஸ் கைன்ட் ஒஃப் ஜினோசைட்"
"நீர் அவையளின்ட ஜினோசைட்டை பற்றி கவலைப்படுகிறீர் எங்கன்ட இனத்திற்கு நடந்ததை பற்றி சொல்லவில்லை யே"

"அது யு.என். வில் சொல்லியிருக்காருவன்டா,அர்மேனியா ,பொஸ்னியா,டாவூர் போன்று ஜினோசைட் லிஸ்டில் இருக்கா?"

அப்படி அந்த லிஸ்டில் வரவிடாமல் இருப்பதற்கு இப்ப பலர் போராடியினம்"

"எனக்கு விளங்கவில்லை"
"அதுதான் அரசியல்"
"அது சரி உங்கன்ட பூர்வீகம் எது"
"அட கோதாரி அதுகூட தெரியாதே ஜவ்னா தான்"
"ஓ சிறிலங்கா,நான் சின்னதாக இருக்கும்பொழுது கன்பராவில் போய் 
'சிறிலங்கா ஸ்டொப் த ஜினோசைட்' என்று கத்திக் கொண்டு போனோமே ......"
"ம்ம்ம் அதுதான் அதற்கு பிறகு "நான் வீடு கட்டி முடிந்தவுடன் வீட்டில் வசிப்பதற்கு இரண்டு நெடிவ் (native tree)மரங்களை வைத்தால் தான், நாங்கள்  வசிப்பதற்கு(  நகராட்சி மன்று சான்றிதழ் (certificate of occupancy )தருவார்கள் என சொன்னார்கள்.Image result for images of australian native trees

அதேபோன்று ,சில இன பறவைகள்,மிருகங்கள் அழிகின்றன என கூறி அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்கிவிக்க நகராட்சிமன்றங்கள் தனியார் நிறுவனங்கள் பல கூடுகளை செய்து மரங்களில் தொங்கவிடுகின்றனர்.ஆனால் அன்று ஒரு இனத்தை அழித்திருக்கிரார்கள் என்று ‌ நினைத்தபடியே முகத்தை கண்ணாடியில் பார்த்தேன்
"டேய் இன்று இங்க பூர்வீககுடிகள் ஆட்சியிலிருந்திருந்தால்
நீ இப்ப இங்க இருக்க முடியுமே"
எது நடந்ததோ அது நல்லாவே நடந்தது எது நடக்க இருக்கோ அதுவும் நல்லா நடக்கும் என்று மனசாட்சிக்கு ஒரு சமாதானம்....சொல்லி என்ட வேலையை தொடர்ந்தேன்.

3 comments:

  1. //பூர்வீக குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பூர்வீக குடிகள்அழிக்கப்பட்டு புதிய தேசியம் உருவாகி அந்த தேசியத்தை பூர்வீக குடிகள் மதிக்க வேண்டும் என்பது இன்றைய வரலாறு.//
    அழகாகச் சொல்லி விட்டீர்கள் புத்தன். வலிக்கின்ற யதார்த்தம்!

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  3. வலிக்கின்ற யதார்த்தம்!

    ReplyDelete