Thursday, June 29, 2017

ரவிக்கை

சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல.
"அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்"
"ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை"
"அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்"
அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்"
"கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்"
"உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி"
"அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களைசொல்லாதையுங்கோ"
"எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனென்றால் கீரிமலையில் வந்து நிற்பன்"
"பின்ன போறது தானே பிள்ளைகள் கூப்பிடுதுகள்"
"எங்கன்ட நாட்டு தண்ணி அந்த மாதிரி,  சுவிம் பண்ணினாலும் ஒரு சுகமிருக்கும் உவங்கன்ட சாக்கடை கடலில் எவன் சுவிம்பண்ணுவான் அதோட சுறாவும் வந்து கடிச்சு போடும்"
"உவற்றையை தான் சுறா பார்த்துகொண்டிருக்கு கடிக்கிறதற்கு விட்டா அப்பர்  உதுவும் கதைப்பார் உதுக்கு மேலயும் கதைப்பார்"
மனிசி அவனுடைய‌ கதைகளால் எரிச்சலடைவது புரிந்து
"சரி வீக்கென்ட் போவம்"
எங்கன்ட நாட்டில நல்ல சுவிம்மேர்ஸ் இருந்தவையள் அவையள் இலங்கையிலிருந்து     இந்தியாவிற்கு நீந்தி போய் திரும்பிவந்தவையள் ,அதுமட்டுமல்ல இங்கிலிஸ் கனலையும் நீந்த முயற்சித்தவையள்  என  ஆழிக்குமரன் ஆனந்தனைப்பற்றி சொல்லி சரிந்தஎனது இமேஜ்ஜை  சரிக்கட்ட முயற்சித் தான் ஆனால் ஒருத்தரும் அதை கண்டு கொண்டமாதிரி தெரியவில்லை.
கறுத்த கண்ணாடி போடுற வழக்கம் அவனுக்கில்லை.ஆனால் கடற்கரைக்கு போகும் பொழுது மட்டும்  மறக்காமல் கொண்டு போய்விடுவான்.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க வேணும் என்ற நல்லெண்ணம்எல்லோரும் வெளியால சூரியனை கண்டவுடனே கறுத்த கண்ணாடி போடுவினம் ஆனால் அவன் பீச்சுக்கு போனால் மட்டும்தான் கறுத்தக்கண்ணாடி போடுறவன்அன்று வெளிக்கிட்டு சிறுதூரம்சென்ற பின்பு பொக்கற்றை தட்டிப்பார்த்தவன் ,கறுத்த கண்ணாடி எடுத்து வரவில்லை என்றுணர்ந்து காரை திருப்பினான்.
"ஏன் இப்ப திரும்பி வீட்டை விடுறீயள்"
"வயிற்றை வலிக்குது ஒருக்கா இறக்கினால் சுகமா இருக்கும் "
"வெளிக்கிட முதல் உதுகளை செய்யிறதில்லை"
"சரி சரி இருங்கோ டக் என்று ஓடி வாறேன்."
"டக் என்று வாறது என்றால் காரை ஸ்டார்ட்டில் விட்டிட்டு .சியை ஒன் பண்ணிட்டு போங்கோ"
பெற்றோல் வெஸ்டா போயிடும் யன்னலை திறந்துவிடுங்கோ"
கார் திறப்பை எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று
கண்ணாடியை தூக்கினான் அவனை பார்த்து  அது 'என்ன பீச்சுக்கோ' என்று கேட்பது போன்றிருந்தது.
மீண்டும் காரை பீச் நோக்கி செலுத்தினான்.லெட்டாக போனால் கார் பார்க் கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால் கொஞ்சம்வேகத்தை கூட்டினான்.சிட்னிமுருகன் புண்ணியத்தில் பீச்சுக்கு கிட்ட ஓரிடம் கிடைத்தது.
குடும்பத்தினருடன்  உடையைமாற்றி நீந்த  சென்றான் . அவனுடைய நீச்சல் சகாசங்களை புரிந்து விட்டு கரைக்கு வந்தவன் , ரவலைவிரித்து அமர்ந்து கலப்படம் செய்த கோக்கை சுவைத்தபடி கறுத்த கண்ணாடியை மாட்டினான் அது அவனைப்பார்த்து சிரிப்பது போலிருந்தது.  .நீச்சல் உடையில் பலர் உலா வந்தனர் .சிலர் உள்ளாடைபட்டிகளால் வந்த அடையாளங்களை கலைவதற்காக  சூரியகுளியல் செய்துகொண்டிருந்தனர்.சிறுவர்கள் மணலில் வீடுகள்,கோட்டைகள் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். 
இளைஞன் ஒருவன் கோக் கான் ஒன்றை மறைவாக‌ குலுக்கிவிட்டு நண்பியிடம் கொடுத்தான் அவள் வாங்கி திறக்க அது சிறீப்பாய்ந்து  அவளது முகத்தை நனைத்தது,செல்லமாக திட்டியபடி அவனை துரத்திசென்று கட்டிப்பிடித்து மணலில் வீழ்த்தினாள் அவன் அவளதுஇதல்ளை தனது இதல்களால் கவ்விகொண்டான்.

அருகிலிருந்த  கலப்படமான கொக்கை ஊறிஞ்சியவன்  ,நாகரிகம் கருதி பார்வையை திருப்பவில்லை வேறு காட்சிகள் தெரியும் என்றஎதிர்பார்ப்பில் திருப்பினான்.


அவனுக்கு  உலக நடப்புக்கள் தெரியதொடங்கிய காலகட்டத்தில் அதாவது சின்ன வயசில்  அவன் கண்ட ஆச்சிமார்களில்பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த ஆச்சிமார் பிளவுஸ் போட்டிருப்பினம்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரவிக்கைபோட்டிருக்கமாட்டார்கள்.பிளவுஸ் போட்ட ஆச்சிமார்கள் கூட்டத்தில் பழகிய அவனுக்கு ரவிக்கை போடாதா ஆச்சிமாரை கண்டால் ஒரேசிரிப்பு .. அவனுடய‌  ஊர் சந்தைக்கு பெயரே ரவிக்கை சந்தை.சந்தைக்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் ரவிக்கைபோட்டிருந்தகாரணத்தாலோ அல்லது அங்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் ரவிக்கை போட்டிருந்தகாரணத்தால் அந்த பெயர் வந்ததோஎன அண்மைக்காலம் வரை தெரியாமலிருந்த அவனுக்கு மேடைபேச்சாளர் ஒருவர் மூலம் விடை கிடைத்தது..
மானிப்பாயிலிருந்த டச்சுஇராணுத்தினர் ரொந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது மானிப்பாய் சந்தையில் மட்டும் ஏன் அதிகளவுநேரத்தை செலவழிக்கின்றனர்  என்பதை அறிவதற்காக அவர்களது கப்டன் மறைமுகமாக நின்று அவதானித்துள்ளான் .காரணத்தைஅறிந்த கப்டன் அடுத்த நாள் சந்தைக்கு தனது மனைவியின் ரவிக்கையை கொண்டு வந்து இரண்டு தடியை குறுக்காக கட்டி அதற்குரவிக்கையை அணிவித்து இனி வியாபாரம் செய்ய வரும் பெண்கள் இதை அணிந்து வரவேண்டும் இல்லையேல் வியாபாரம்பண்ணமுடியாது என்று கட்டளை பிறப்பித்தான் அன்றிலிருந்து அது ரவிக்கை சந்தையாக மாறியது என மேடை பேச்சாளர் சொன்னதுஅவனுக்கு ஞாபகம் வரவே மீண்டும் தனது கலப்பட கோக்கை முழுமையாக குடித்து முடித்தவன்  . அன்று சுதந்திரமாக திரிந்த எம்மைஅடிமையாக்கியவன் ,இன்று சுதந்திரமா திரியிரான் நாங்கள் கறுத்த கண்ணாடியோட திரியவேண்டிகிடக்கு என‌ புறுபுறுத்தபடியேஎழும்பி     உடம்பில் பட்டிருந்த மண்ணை தட்டியவன் கானை வாயில்வைத்தான் அது நான் காலிடப்பா என்றது .கானை கையால் நசுக்கிஆத்திரதை குறைத்தான்.

குடும்பத்தினர் இவனருகே வர கார் திறப்பை மனைவியிடம் கொடுத்தான்.
"ஏனப்பா நீங்கள் ஓடுங்கோவன்"
"எனக்கு தலையிடிக்குது"
"வாயை ஊதூங்கோ பார்ப்போம்"
"ஏய் நீ என்ன பொலிஸ்காரியே....மனசனுக்கு வெறுப்பை ஏற்றாமல் ஓடப்பா"

4 comments:

  1. ஊதினால் குடித்துவிட்டு கார் ஓட்டும் போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் போய்விடும்)))

    ReplyDelete
  2. ஏன் இந்த நீண்ட இடைவெளி தொடர்ந்து பல பதிவுகளை எழுதுங்கள் அண்ணா!

    ReplyDelete
  3. வலைப்பக்கம் வருவதே உங்களைப்போன்றவர்களின் வித்தியாசமான பதிவுகளை படிப்பதுக்குத்தான்! முடியும் போதெல்லாம் ஒரு சில நிமிடங்களை ஒதுக்குங்க ! முகநூல் /டிவிட்டர் என்று எப்போது யாழ்புத்தன் அடுத்த கட்டம் நோக்கி நகர்வது?)))

    ReplyDelete