"அண்ணே எங்க போகவேணும்"
பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை
அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க
போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு
உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு
"தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ"
"அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்"
"என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்".
. யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில்
இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம்
ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பொய்யை சொல்லி பேரம்
பேசினேன்.
"அண்ணே இப்ப எல்லோரும் நானூறு தான் எடுக்கிறவையள்,வந்து ஏறுங்கோ"
நாலு டொலர்தானே வரும் எங்கன்ட காசில என நினைத்தபடியே போய் ஏறினேன்.ஊருக்கு
போராய் கண்ட சனத்தோடயும் வாயை கொடுக்காதே என கொழும்பில இருக்கிற உறவுகள்
அறிவுரை சொன்னதிற்கு ஏற்ப நானும் பெரிதாக ஒட்டோ சாரதியுடன்
பேச்சுக்கொடுக்கவில்லை. "அண்ணே இப்ப குளிராக இருக்கு மத்தியானம் பயங்கர
வெய்யில் அடிக்கும்" என்று சொல்லி எனது மெளனத்தை கலைத்தார்.
"அப்படியா"
"மானிப்பாயில் எவடத்த "
"சுதுமலை சந்தியடிக்கு போங்கோ கிட்ட போன பிறகு வீட்டை காட்டுகிறேன்"
"அண்ணே வெளிநாடோ,கொழும்போ"
"நான் கொழும்பு " ஒட்டோவில் ஏறியவுடன் யாழ்நகரை வியப்பாக பார்த்த
பார்வையில் சாரதிக்கு விளங்கியிருக்கும் மச்சான் வெளிநாடு என்று.வெளிநாடு
என சொல்லாமைக்கு முக்கிய காரணம் சுயபாதுகாப்புத்தான். "இதில திருப்புங்கோ
வலக்கை பக்கம் வாற நாலாவது வீட்டடியில் நிற்பாட்டுங்கோ"பேசியபடியே நானூறு
ரூபாவை கொடுத்துவிட்டு ஒட்டோ போனபின்பு இடக்கை பக்கம் இரண்டாவதாக இருக்கிற
எனது பெரியம்மா வீட்டை சென்றேன்.இதுவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான்.
இவர் பெரிய தேசியவீரன் இவருக்கு சுயபாதுகாப்பு என்ன கோதாரிக்கு என நீங்கள்
எண்ணக்கூடும்,ஆனால் ஒரு பிரபல எழுத்தாளரை கண்டவுடன் மக்கள் என்ன செய்வது
என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு மாலை மரியாதை செய்துவிடுவார்களோ என்ற
பயம் தான்.
கிணற்றில் குளிக்கலாம் என்று போனால் அங்கு கப்பியும் இல்லை துலாவும் இல்லை..."தம்பி இங்க வந்து பாத்ரூம்மில் குளி" .
குளித்து விட்டு பெரியம்மா தந்த சுடான தேனீரை பருகிவிட்டு .மருதடியானை
தரிசிக்கலாம் என வெளிக்கிட்டேன். பெரியம்மாவுக்கு தெரிந்த ஒட்டோசாரதியை
ஒழுங்கு படித்தித் தந்தார்.அவர் தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து 20
வருடமாக மானிப்பாயில் வாழ்பவர்.என்னுடைய வயதுதான் இருக்கும் இருந்தும்
என்னை தம்பி என்று அழைத்தார் .அவரைவிட இளமையாக அவருக்கு தெரிந்திருக்கிறேன்
எல்லா புகழும் அவுஸ்ரேலியாவுக்கே.. "தம்பி மருதடிக்கோ விட,நீங்கள் அந்த
அம்மாவுக்கு என்ன முறை?"
" ஒம் மருதடிக்கு விடுங்கோ அவவின்ட தங்கைச்சியின் மகன்"
அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே , பள்ளிபருவத்தில் உலா வந்த
வீதியையும் அறிந்தவர்கள் வீடுகளையும் பார்த்த படியே சென்றேன்.வீதியில்
அறிந்தவர் எவரும் கண்னில் படவில்லை.
வயலும் வயல் சார்ந்த இடத்தில் நம்மட மருதடியான் வீற்றிருந்தான்.முன்பு பழைய
கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிவீசிகொண்டிருந்தவனை புதுதாக கோயில் கட்டுவதாக
வெளிக்கிட்டு எழு வருடமாக கொட்டிலில் வைத்திருக்கிறார்கள்.
அவனையும் வீழ்ந்துவணங்கி ,யாராவது தெரிந்தவர்கள் வருவார்கள் ஊர் விடுப்பு
அறியலாம் என சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். வயயோதிபர் ஒருவர் அருகில்
வந்து
"தம்பி ஊருக்கு புதுசோ என்றார்."
"இல்லை நான் இந்த ஊர்தான்"
"நான் முப்பதுவருசமா இந்த கோயிலுக்கு வந்து போறன் உம்மை கண்டமாதிரி தெரியவில்லை,நீர் ஆர்ட மோன்,உம்மன்ட வீடு எங்கயிருக்கு "
"அண்ணே நீங்கள் முப்பது வருசமா வந்து போறீயள் நான் பிறந்ததில் இருந்து
வந்து போறன்.உந்த மருதடியானிட்ட கேளுங்கோ சொல்லுவான்"என்று சொல்லிவிட்டு
ஒட்டோவில் வந்து ஏறி சுதுமலை அம்மன் கோவிலுக்கு போக சொல்லிவிட்டு மீண்டும்
வீதியை நோட்டம் விட்டேன் அறிந்தவர் எவரும் கண்ணில் படவில்லை.
ஒட்டோவுக்குரிய பணத்தை கொடுத்து விட்டு ஆலயத்தினுள் சென்றேன் சுதுமலை
அம்மன் கோவிலிலும் புனர்நிர்மாண வேலைகள் நடை பெறுவதால் மூலஸ்தானத்தில்
இருந்த அம்மனும் அவரது குடுமபத்தினரும் வெளியே குடிபெயர்ந்து இருந்தனர்.ஒரு
விதத்தில் எனக்கும் நன்மையைக இருந்தது.தூரத்தில் இருந்து மூலஸ்தானத்தில்
இருக்கும் அம்மனின் உருவம் இலகுவில் தெரியாது ஆனால் புதிதாக குடிபெயர்ந்த
இடத்தில் அம்மனின் உருவம் நன்றாகவே தெரித்தது.வணங்கிவிட்டு தெரிந்தவர்கள்
யாராவது கண்னில் படுகிறார்களா என நோட்டம் விட்டேன்.நான் அறிந்தவர் எவரும்
இல்லை.என்னை அறிந்தவர்கள் யாரும் இல்லை.கோவிலின் வெளியே வந்து
அமர்ந்திருந்தேன்.பூஜை முடிந்து வீடு செல்ல வந்த ஐயர்
"தம்பி ஊருக்கு புதுசோ, இந்த பக்கம் நான் உங்களை காணவில்லை" என கேட்டார்.
"இல்லை ஐயா நான் இந்த ஊர்தான்"
"அப்ப உங்கன்ட வீடு எங்க இருக்கு"
25 வருடங்களுக்கு முதல் எங்களுக்கு சொந்தமாய் இருந்த நான் ஒடி
விளையாடிய,பாடசாலையில் உயர்கல்வி படிக்கும் பொழுது சைக்கிளில் மதிலில்
சாய்த்துவிட்டு பெடியங்களுடன் அரட்டை அடித்த வீட்டை சொன்னேன்.உடனே அவர்
தற்பொழுதைய சொந்தகாரனின் பெயரை சொல்லி அவரின் தம்பியோ என கேட்டார் .
"இல்லை ஐயா இப்ப அவர்தான் வாங்கி இருக்கிறார் நாங்கள் வீட்டை வித்து 20 வருசத்திற்கு மேலாய் ஆகிவிட்டது"
"அது தானே பார்த்தேன் 20 வருசத்திற்க்கு மேலாக இந்த கோவிலில் பூஜை செய்கிறேன் எனக்கு தெரியாத ஆட்களா இந்த ஊரில்”
ஐயரின் பூர்வீகத்தை அறிவோம் எண்டுபோட்டு முந்தி இந்த கோவிலில் பூஜை செய்த குருக்களின் சொந்தமோ நீங்கள் என்று கேட்டேன்.
"அவரை உங்களுக்கு தெரியுமோ,அவர் என்ட மாமா "
"உங்களுக்கு அவரை எப்படி தெரியும்"
"எங்கன்ட திருவிழாவில் அவரிட்டதான் காளாஞ்சி வாங்கிறனான்"
"எந்த திருவிழா உங்கன்ட"
"ஒன்பதாம் திருவிழா "
"அட நீங்கள் ஒன்பதாம் திருவிழா உபயகாரரின்ட ஆட்களே,முதலே சொல்லியிருக்கலாம் "சரி நான் வீட்டை போயிற்று வாறன் பிறகு சந்திப்போம்.
நடந்து வீடு செல்லும் பொழுதும் யாராவது என்னை அடையாளம் கண்டு கதைப்பார்களா என்ற ஏக்கத்துடனே வீடு சென்றடைந்தேன்.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவில் மணியோசை கேட்டு விழித்தேன்.தொடர்ந்து
'விநாயகனே விணை தீர்ப்பவனே' என்ற பாடல் ஒலிபெருக்கியில்
ஒலிக்கதொடங்கியது.குளித்து மீண்டும் கோவிலுக்கு சென்றேன்.
சுதுமலை அம்மன் கோவிலின் வளவில் சிவனுக்கும்,முருகனுக்கும் வைரவருக்கும்
தனி கோவில்கள் உண்டு.சிவன் கோவில் திருவிழாவிற்கே நான் ஊருக்கு
சென்றேன்.அந்த திருவிழா எனது மாமா உயிருடன் இருக்கும் பொழுது செய்து
வந்தார் .அவர் கொழும்பில் இருந்தபடியால் திருவிழாவுக்குரிய பணத்தை
அனுப்புவார் நான் தான் தெற்பை போடுவதுவழமை.பிற்காலங்களில் நான் புலத்தில்
இருந்து பணம் அனுப்புவேன் பெரியம்மா செய்து கொண்டிருந்தார்.
25 வருடங்களின் பின்பு மீண்டும் என் பணத்தில் தெற்பை போட்டு வழிபடும்
சந்தர்ப்பம் முதல்தரம் கிடைத்தது.அன்று ஒருத்தரும் என்னிடம் நீங்கள் யார்?
ஊருக்கு புதுசோ என்ற கேள்வியை கேட்கவில்லை?மூலஸ்தானத்தை பார்த்தேன்
சிவலிங்கம் என்னை பார்த்து "டேய் நீயும் ஊரவன் தான்டா"என்ற மாதிரி
இருந்தது.
என் ஊர்கோவில் என்னை அடையாளப்படுத்த உதவிற்று..எல்லா புகழும்
கோவிலுக்கே....இதற்குதான் அந்த காலத்தில் கோவில் இல்லாத ஊரில்
குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்களோ என எண்ண தோன்றுகிறது.
ஒரு இனத்தை அழிக்க பல வகையிலும் முயற்சி செய்தும் அவர்களின் ஆத்மீக பலம்
அந்த மக்களை மீட்டுள்ளது என்பதை நேரில் கண்டேன்.எந்த இசங்களும்
,ஆயுதங்களும்,தனிமனித சித்தாத்தங்களும் செய்ய முடியாததை கோவில்
செய்துள்ளது.
ஒம்நமசிவாய....
புத்தனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு நினைக்க வேண்டாம்....
Sunday, May 12, 2013
Saturday, April 20, 2013
"....கண்டேன் என் க....."
சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர்
ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய
தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு
சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான்
கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில்
போய்சேரும்.
எங்களுக்கு என்ன வரும் ??????
"தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”,
"எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ "
"இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்"
நான் எம்.ஜி.ஆர் ,சிவாஜி , எல்லாம் அந்த காலத்தில
பார்த்தனான் இந்த புதுசா நடிக்கறவங்கள் ஒருத்தரையும் பார்க்க கிடைக்கவில்லை,இந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் இனி என்ட வாழ்க்கையில் எப்பகிடைக்குமோ? இல்லாட்டி கிடைக்காமலயே மண்டையை போட்டுவிடுவனோ தெரியாது"
ஆச்சி இப்படி சொன்னபடியால் எனது மனது கொஞ்சம் இலகி போய்விட்டது.
"ஆச்சி கோவிலுக்கு போய் சாமியை கும்பிடப்போறீங்கள் என்றால் சொல்லுங்கோ கூட்டிகொண்டு போரன்.உந்த சினிமா கதாநாயகனை தூக்கி பிடிக்க நான் வரமுடியாது,மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஆச்சி."
" நீ கூட்டிக் கொண்டு போகட்டி உன்ட மனிசியை கூட்டிகொண்டு போகசொல்லு"
"அவள் வந்தா கூட்டிகொண்டு போங்கோ"
கலியாணத்திற்க்கு பின்பு மனிசிக்கு நான் தான் கதாநாயன் என்று நினைத்திருந்தேன்.ஆனாபடியால் சினிமா கதாநாயகனிடம் அவ்வளவு மோகம் இருக்காது .ஆச்சியை அழைத்து செல்லமாட்டாள் என்றிருந்தேன்.ஆனால் அவளும் ஆச்சியும் சேர்ந்துதான் திட்டம் போட்டிருக்கிறார்கள் பின்பு தான் தெரியவந்தது.
"வயசு போன நேரத்தில் ஆச்சி கேட்கிறா,கூட்டிக் கொண்டு போயிட்டு வரட்டேயப்பா"
"சரி,அவர் எந்த ஹொட்டலில் நிற்கிறார் என்று தெரியுமோ?எங்க போய் பார்க்கப் போறீங்கள்."
"அவர் உங்க பராமட்டாவில் ஒரு ரெஸ்டோரன்டில் சூட்டிங்க்கு வந்திருக்கிறார் ஆச்சியுடன் போய் பார்த்துவிட்டு வாரன் "
என்று காலையில் வெளிக்கிட்டவையள் வரும் பொழுது பிற்பகல் 4 மணி ஆகியிருக்கும்.
"அடி பிள்ளை, இவன் தம்பியை ஒரு பக்கமாக பார்த்தால் விஜய் மாதிரி இருக்கு என்னடி" ஆச்சி லெட்டா வந்ததுக்கு கொஞ்சமாக ஐஸ் வைத்தார்.
"விஜயயை படத்தில் பார்த்ததிலும் பார்க்க நேரில் பார்க்கும் பொழுது கூட வடிவாக இருக்கிறார்."என ஆச்சி மனிசிக்கு கொமனட் அடிச்சுது.
வயசு போனதுகள் ஊரில் படம் பார்த்து பழகினதாலும்,வெளிநாட்டுக்கு வந்து டிவி யில் படம்பார்த்த பழக்கதோசத்தாலும் இந்த கதாநாயக வழிபாடு,மோகம் இருக்கும் என எண்ணிகொண்டிருக்கும் பொழுது என்னுடைய கை தொலைபேசி ஒரு ராகத்துடன் சினுங்கியது.
"கலோ "
"யார் சுரேஸோ"
"ஒம் சுரேஸ் தான்"
"நாளைக்கு விஜய்யின் சூட்டிங் எங்க நடக்குது என்று தெரியுமோ"
"நான் அவரின்ட பி.ஏ இல்லை"
"சும்மா பகிடி விடாமல் சொல்லுங்கோ,உங்கன்ட மனிசிதான் , ஆச்சி விஜயை பார்க்க கூட்டிக்கொண்டு போனவவாம்"
"எனக்கு தெரியாது ,எதற்கும் லைன்னில் இரும் மனிசியிட்டை கேட்டு சொல்லுறன்"
"இஞ்சாரும் இவன் விஜய் சிட்னியில எங்க நிற்கிறான் என்று கனகர் கேட்கிறார் உமக்கு தெரியுமோ "
" இன்றைக்கு டார்லிங் காபரில ,நாளைக்கு காலையில திருப்பியும் பரமட்டா பார்க்கில்,நாளைக்கு பின்னேரம் காபர் பிரிட்ஜ்,நாளன்டைக்கு ....."இப்படி மனிசி அடிக்கு கொண்டே போனாள்.
" கனகு இந்தா மனசியிட்டயே கேள்ளப்ப" எண்டு தொலை பேசியை கொடுத்துவிட்டேன். இவளுக்கு எப்படி விஜய்யின் செடுல் எல்லாம் தெரியும் என்று மில்லியன் டொலர் கேள்வி மனதில் எழும்பியது.சரி பொம்பிளைகள் தான் விஜய்யை பார்க்க அலையுதுகள் என்றால் இவன் கனகனும் அலையிறான் பரதேசி என மனதிற்குள் திட்டிப்போட்டு விட்டிட்டேன்.
மனிசியின் கைதொலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கு என சினுங்கிச்சு நான் கண்டுகொள்ளவில்லை.கைதொலைபேசி வழங்குனர் காசு கட்ட சொல்லி செய்தி அனுப்புறான் எண்டு போட்டு பேசாமல் இருந்திட்டேன்.
வீட்டு தொலைபேசி அலறியது .
"கலோ"
" அங்கிள் அண்டி இல்லையோ?"
"வீட்டு வேலையா இருக்கிறா "
"அண்டியிட்ட சொல்லுங்கோ நான் விஜய்யின் சூட்டிங்கில் நிற்கிறன் என்றும்,அவவின்ட மொபைலுக்கு நான் விஜயின் தோலில் கை போட்டுக் கொண்டு எடுத்த படம் அனுப்பியிருக்கிறன் எண்டும் சொல்லுங்கோ"
மனிசியிட்ட சொன்னதுதான் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே விட்டிட்டு மொபைலில் வந்த விஜயின் படத்தை பார்த்து ரசித்தாள்.ஆச்சிக்கும் தகவல் பரவியது.வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன்.ஆச்சியுடன் அவரின் பேத்தி சுருதியும் நின்றாள்.சுருதியும் கணவனும் கணக்காளராக பணிபுரிகின்றனர். கணவன் விஜயை விடவும் அழகானவன் அவனே ஒரு கதநாயகன் போலத்தான் இருப்பான்.
"அண்டி விஜய்யின் சூட்டிங்பக்கத்திலதான் நடக்குது வெளிக்கிடுங்கோ போய் பார்ப்போம்,சுமி இப்பதான் எஸ். எம்.எஸ் அனுப்பினவள் "
சுமிதா பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டில் பயில்கின்றாள் அவளை எல்லோரும் செல்லமாக சுமி என அழைப்பார்கள்.
விஜயயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லொரும் வெளிக்கிட்டு ஒடினார்கள்.காலை 10 மணியளவில் புறப்பட்டவர்கள் மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார்கள்.
"அட தம்பி ஒரு தேத்தண்ணி போடடா குடிப்பம் சரியா கலைக்குது"
" ஆச்சி உந்த வயசில உங்களுக்கு உது தேவையா?"
"வேற என்னத்தை கண்டேன்"
"ஏன் அப்புவை கண்டனியள் தானே ...அதுசரி அப்பு விஜய் மாதிரி இருப்பாரோ?"
"சும்மா போடா ....அவர் ஜெமினி மாதிரி இருப்பார் ஆனால் கருப்பு"என்று சொல்லி வெட்கப்பட்டார்.மனிசி கொண்டு வந்த குளிர்பாணம்,சுடு பாணம் பருகியபடியே விஜய் புராணம் தொடங்கியது.
சுமி அங்கு எடுத்த படங்களை எல்லொருக்கும் காட்டினாள் ,அத்துடன் ஒட்டோகிராப்பில் சைன் வாங்கியதாகவும் அப்பொழுது விஜய்யின் கை தனது கையை தொட்டதாகவும் ஆனபடியால் இன்று தான் கை கழுவப்போரதில்லை என சொல்லி மகிழ்ந்தால்.
மனுசனுக்கு தெரியாமல் ஹொட்டலுக்கு பூச்செண்டு அனுப்பியதாகவும் .அதை அனுப்புவதற்கு தான் பட்ட கஸ்டங்களை சொல்லி பூரிப்படைந்தாள் சுருதி.
சிவாஜி கனேசன் பைலட் பிரேமநாத் படசூட்டிங்க்கு வந்த பொழுது சிவாஜியுடன் எடுத்த படத்தை 83 இனக்கலவரத்தில் சிங்களவன் எரித்துவிட்டான் என்று சொல்லி ஆச்சி துக்கப்பட்டாள்.
கலியாண கட்டின புதுசில இந்தியாவுக்கு போனபொழுது இந்த மனுசனை சூட்டிங் பார்க்க கேட்க கூட்டிகொண்டு போகமாட்டேன் எண்டிட்டார் .ஒரு நாள் எதிர்பாராத விதமாக மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த மனுசன் பிலிம் போடாமல் கமராவை தட்டியிருக்கு ,என்று என்ட மனுசி தன்னுடைய கவலையை தெரிவித்தாள்.
இதெல்லாம் கேட்ட எனக்கும் எதாவது சொல்ல வேணும் போல இருந்தது.எனக்கு மயிர் வெட்டுகிறவர்தான் சிட்னியில விஜய்க்கும் மயிர் வெட்டுகிறார்...கி..கி.....
(க)..... தாநாயகன்
ணவன்
டவுள்

அளவெட்டியில் இருந்து அடையார்வரை
"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே"
"நீ என்ன மேளக்காரனின் பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்"
"அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வடிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், "
"எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை"
அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான்.
ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன் இன்னும் இரண்டு கூட்ட
மேளம் அவர்களின் திருவிழா அன்று நடை பெறும் .எனையோரின் திருவிழாவில் ஆறு ,எழு கூட்ட தவில் கச்சேரி நடை பெறும்.ஒரு திருவிழாவையும் சுரேஸ் தவறவிடமாட்டான். திருவிழா வேலைகளை முன்னுக்கு நின்று சுரேஸ் கவனித்துகொள்வான்.
தவில் வித்துவான்களையும்,நாதஸ்வர வித்துவான்களையும் அச்சவாரம் கொடுத்து திருவிழா தினத்தன்று வரவழைப்பதற்காக அளவெட்டிக்கும், இணுவிலுக்கும் சென்று வித்துவான்மாரிட்ட காசையும் கொடுத்து திகதியைசொல்லுவான்.
"தம்பி இந்த முறை உபயகாரரிட்ட சொல்லி காசை கூட்டி தாங்கோ"
"ஒம் வித்துவான் ,அப்பாவிட்ட சொல்லுறன்,ஆனால் நீங்கள் இந்த முறை புதுசா வந்த மூன்றுமுடிச்சு படப்பாடலை முதல் தரம் எங்கன்ட திருவிழாவில்தான் வாசிக்க வேணும்"
"ஒம்,ஒமோம்...."
திருவிழா தினத்தன்று மதிய சாப்பாட்டுக்கு அடிச்ச ஆடு ,சாராயம் எல்லாம் வீட்டில் வைத்து வித்துவான்களுக்கு கொடுக்கப்படும்.சாராயம் அளவாகத்தான் கொடுக்கப்படும் போதை கூடினால் இரவுக்கச்சேரிக்கு வரமாட்டார்கள் என்று பயத்தால் அந்த முன் எச்சரிக்கை.
வித்துவான்கள் தங்கத்தால் செய்த புலிப்பல் மாலை,ஐந்து விரலுக்கும் மோதிரம் அணிந்திருப்பார்கள் . சில வித்துவான்கள் தங்களது நாதஸ்வரத்திற்கு தங்கத்தால் சில அலங்கார வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்.இவற்றை எல்லாம் பார்த்து சுரேஸ் எண்ணியதுண்டு இவர்கள் பெரிய பணக்காரர்கள்
என்று.
இப்படித்தான் ஒருமுறை திருவிழா ஒழுங்குகளுக்காக கூட்டம் நடை பெறும் பொழுது
"இந்த முறை சின்ன மேளத்தை கூப்பிடுவமோ"என ஒரு பெரிசு கருத்து சொல்ல
"சீ சீ ..சின்னமேளத்தை கூப்பிட்டியளோ நான் இந்த திருவிழா கொமிட்டியிலயே இருக்க மாட்டன்"என
இன்னொரு பெரிசு மாற்றுக்கருத்து சொல்ல
"நீ இல்லாட்டி கொடி ஏறாதே"
"என்னடா சொன்னாய்"
உடனே சமாதன விரும்பிகள் எல்லாம் இரண்டு பெரிசுகளையும் சாந்தப்படுத்தி சின்ன மேளம் இந்த
தடவை வேண்டாம் அடுத்த முறை கூப்பிடுவோம்...என ஏகமனதாக முடிவு செய்தனர்.
பொம்பிளைகள் தவில் அடிச்சு நாதஸ்வரம் வாசிச்சா நல்லா இருக்காது.என சில அம்மாமார்
ஆதங்கப்பட்டினம்.
(1970 களில் சின்னமேளம் அழிய தொடங்கிவிட்டது.)
சிட்னியில் நடைபெறும் கலை,கலாச்சார,பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு சுரேஸ் சமுக அளிக்க
தவறுவதில்லை.இலவச நிகழ்ச்சியான அரங்கேற்றத்திலிருந்து பணம் செலுத்தும் தென்னிந்திய நட்சத்திர இரவு வரை செல்வது அவனது பொழுது போக்கு என்றோ,அல்லது அடுத்த சந்ததியினருக்கு
கலை பண்பாட்டை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு உயர்ந்த உள்ளம் என்றோ நீங்கள் நினைக்ககூடாது.....
சுவிங்கத்தை மென்றுகொண்டு குருத்தாரும், பாண்ட்ஸும் அணிந்து கலை ஆர்வமிக்க நடுத்தர
வர்க்க கமானவான் போல அரங்கின் முன் அமர்ந்திருந்தான்.இடைக்கிடை தனது மீசையையும் தடவிக்கொள்வான்... நிகழ்ச்சி தொடங்கிய பின்புதான் தெரிந்தது அது மிருதங்க அரங்கேற்றம் எண்டு. வழமையாக அரங்கேற்றம் என்றால் பரதநாட்டியம் தான் நடை பெறுவது வழக்கம். சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தால் குடியும் குடித்தனமும் ஆக இருப்பான் என்ற காரணத்தால் மனைவி இவனை இப்படியான நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுவிடுவாள்.ரசனை இருக்குதோ இல்லையோ நிகழ்ச்சியில் இருப்பான்.
திரைச்சேலை விலகியதும் செல்வன் கமேஸின் மிருதங்க அரங்கேற்றம் என அழகாக ஆங்கிலத்தில்
எழுதியிருந்தார்கள்.கமேஸும் தனது திறமைகளை நன்றாக வெளிப்படுத்தினான்.ஒவ்வோரு ஆவர்த்தனமும் முடிய சபையோர் பலத்த கரகோசம் செய்தனர்.
பிரதமவிருந்தினராக வந்திருக்கும் "அடையாறு திரு சுப்பு சர்மா" அவர்களை மேடைக்கு வருமாறு தாழ்மையுடன் அழைக்கிறோம் என அறிவிப்பாளர் அறிவித்தவுடன் சுப்பு மேடைக்கு சென்றார்
சபையில் இருந்து பலத்த கரகோசம் எழும்பியது. சுப்பு சர்மா தனது சிஷ்யன் கமேஸ் பற்றி புகழ்ந்தார்
..இந்தியாவில் இருந்து கமேஸின் பெற்றோரின் பணத்தில் சிட்னிக்கு வந்து போட்டு கமேஸை
புகழாமல் உம்மடை பக்கத்து வீட்டுக்காரனையே புகழுவான் என நீங்கள் நினைப்பது புரிகின்றது.சுப்பு சர்மாவுக்கு பொன்னாடை போர்க்கப்பட்டது..கமேஸ் சர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது மனிதன் இருந்தும் பாகுபாடு
. அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.
இப்படிதான் இன்னோரு நாள் எதோ வியுசன் முயுசிக் என்று போனான்.மேலத்தேய இசையும் கீழைத்தேய இசையும் ஒன்றாக கலக்கிற இடம் என்று சனம் சொன்னதை கேட்டுப்போட்டு இவனும் சென்றான்.
மேடையில் பலவிதமான இசைக்கருவிகள் இருந்தன ஒரு சில இசைக்கருவிகள் மட்டும் இவனால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. பெண் ஒருவர் நாதஸ்வரம் போன்ற கருவியை வைத்திருந்தார் நாதஸ்வரத்தை விட சிறியது. இன்னொரு பெண் நாதஸ்வரம் போன்ற வளைந்த ஒரு கருவியை வைத்திருந்தார்.இரு கருவிகளும் நல்ல பளபளப்பாய் மின்னியது.வெளிநாட்டுக்காரன் நாதஸ்வரத்தை மாத்திப்போட்டாங்கள் என்று எண்ணினான்.
"இங்க பாரன் எங்கன்ட நாதஸ்வரத்தை இந்த வெள்ளைகள் என்ன செய்து வைத்திருக்குதுகள்,அதை வைச்சிருக்கிறது எங்கன்டஆட்களின் பிள்ளைகளே"என பக்கதில் இருந்த மனைவியிடம் கேட்டான்.
"நாசமாய் போச்சு அது நாதஸ்வரமில்லை,வலப்பக்கம் இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது கிலாரினட்,நடுவில இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது சக்சாபோன்,அந்த இரண்டு பிள்ளைகளும்
எவ்வளவு அழகாக வாசிக்கினம்.....உதுக்குத்தான் சொல்லுறனான் இப்படியான இசை நிகழ்ச்சிக்கு
வந்து பொதுஅறிவை வளர்க்க வேணும் என்று
...."

Thursday, February 14, 2013
கப்டன்
சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள்.
புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள் மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை,இருந்தாலும் அவர்கள் முயற்சியை கைவிடவில்லை.தென்னை மட்டையின் அடிபாகத்தை வெட்டி கைப்பிடிக்கு சைக்கிள் டியூப்பினை போட்டு யாழ்ப்பாண பிராண்டட் கிரிக்கட் மட்டையை செய்து போட்டார்கள். றப்பர் பந்தின் சொந்தகாரன் பக்கத்து வீட்டு ரவி.விளையாட்டு முழுவதும் தானே பந்து போட வேண்டும் என அடம் பிடிப்பான். பந்து போட கொடுக்காவிடில் பந்தை தூக்கி கொண்டு வீடு சென்று விடுவான் .இதனால் ஆத்திரமடைந்த சுரேஸ் சொந்தமாக ஒரு பந்தை வாங்க வேண்டும் என முடிவெடுத்தான் .ஆனால் பந்து வாங்க அவனிடம் பணம் இல்லை.
அங்கு விளையாட வரும் எல்லோரிடமும் காசு சேர்த்து ஒரு பந்தை வாங்குவோம் என தீர்மாணித்து அமுல் படுத்தினான் .அடுத்த நாள் எல்லோரும் 25 சதம் கொண்டு வந்தார்கள் .உடனே மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் தனியாக கடைக்கு சென்றான். கடைக்கரானிடம் "அண்ணே பார்த்து போட்டு தாங்கோ " என கெஞ்சி அரைவாசி விலைக்கு பந்தை வாங்கி போட்டான். தனக்குறிய பங்கையும் போடாமல் விட்டுவிட்டான். இது எனைய குழு அங்கத்தவர்களுக்கு தெரியாது. நண்பர்களிடம் கடைக்காரர் முதலில் சொன்ன விலைக்குத்தான் பந்து வாங்கினதாக சொன்னான் .மிகுதி பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்.
அவனது குழுவில் எட்டு பேர் வரை இருந்தனர்..அநேகர் இவனது வயதை ஒத்தவர்கள் .சின்ன பெடியன்களும் இணைந்து கொண்டனர்.ரவி தனிப்படுத்தபட்டமையால் அயல் கிராமத்திற்கு விளையாட செல்வான்.பற்றையும் பந்தையும் பத்திரப்படுதும் பொறுப்பை சுரெஸ் எடுத்து கொண்டான். இதனால் அந்த குழுவுக்கே அவன் பொறுப்பாளன் போல செயல் பட தொடங்கினான்.குழு அங்கத்தினர் இவனை கிண்டல் அடிப்பதும் உண்டு.
"உவருக்கு தான் கப்டன் என்ற நினைப்பு"என்று சொல்ல
"என்னிடம் தானே பற்றும் பந்தும் இருக்கு அப்ப நான் தானே கப்டன் ,போஸ் எல்லாம் " என்று சிரித்தபடியே கூறுவான்.
"உந்த தென்னை மட்டை பற்றை வைச்சுகொண்டு இங்கிலாந்து டீமுக்கு கப்டன் மாதிரி கதைக்கிறாய்" என சிலர் கிணடல் அடித்தனர்.
ஒரு நாள் சுரேஸ் சிக்சர் அடிக்க முயற்சி செய்ய பந்து பக்கத்துவீட்டு பிலாமரத்தில போய் மாட்டிக்கொண்டுவிட்டது.கையில் இருந்த பற்றும் தவறிவிழுந்து உடைந்து விட்டது.தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.எல்லோருக்கும் விளையாட வேணும் என்ற உத்வேகம் இருந்ததால் உடனடியாக அந்த உத்வேகத்தை தனிக்க பேணி(டின் ...ரின்) விளையாட்டை விளையாட தொடங்கினார்கள்.வீட்டில் அம்மா பலசரக்கு சாமான் போட கழுவி வைத்த லக்ஸ்பிறே ரின்களை யும் பழைய பந்தையும் எடுத்து கொண்டு வந்தான். இதனால் அவன் அம்மாவிடம் திட்டு வாங்கினது ஒரு பெரிய கதை.
"அட ரின் விளையாட்டிலும் இவன் 'கப்...... ரின்'"டாப்பா எனகிண்டலடித்தனர் .அவன் கண்டுகொள்ளவில்லை,கப்டன் என்று சொல்லுறான்கள் அப்படியே அதை நடைமுறைபடுத்த வேணும் என மனதில் எண்ணிகொண்டான்...
டெனிஸ் பந்தும்,ஒரு நல்ல பற்றும் வாங்க வேணும் என எல்லோரும் முடிவெடுத்தனர்.
தச்சு தொழில் செய்யும் ஒருவரிடம் போய் கேட்டார்கள் .பணம் தந்தால் செய்து தருவதாக அவர் சொல்ல, தீவிரமாக காசு சேர்த்து பற்றை செய்து போட்டார்கள்.
அவனது தீவிர முயற்சியும்,அயராத உழைப்பும் சக குழுவினர் அவனை கப்டன் ,கப்ரின் என அழைக்க தொடங்கிவிட்டார்கள்.
சிலர் கப்டனுக்கும் அடைமொழி வைத்து அழைக்க தொடங்கினார்கள்.சில வயசு போனதுகள் "டேய் கப்டன்"என்றும் வயசு குறைந்ததுகள் "கப்டன் அண்ணா" என்றும் அழைத்தார்கள்.
குழு உறுப்பினர்களுக்கு சமனான பந்து வீச்சும் துடுப்பாட்டமும் அனுமதித்தான் இதனால் எல்லோருக்கும் அவன் மீது அன்பு உண்டானது.
ரவி அயல் கிராமத்தில் உள்ள டிமில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு எதிராக விளையாடுவான்.சுரேஸுடன் விரோதமாக பழகியபடியால் அந்த கிராம மக்கள் எல்லோரையும் விரோதமாக பார்த்தான்.
புளியமரத்தடியில் விளையாடுவதை விட்டுவிட்டு இப்பொழுது தெருவிலும் ,பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் விளையாட தொடங்கி விட்டார்கள்.
ஸ்பின்,வாஸ்ட் போல்,அம்பயர்,லெக் அம்பயர்,ஒவர்,எறிபந்து இந்த சொல்லுகளை எல்லாம் பாவிக்கதொடங்கினார்கள்,காலில் எங்கு பட்டாலும் எல்.பி.டபில்யூ. க்கு கத்துவார்கள் ஆனால் அம்பயர் கொடுக்க மாட்டார்.அவரும் அந்த டீமில் தான் விளையாடுவார்.அவர் அடுத்து பற் பண்ண வேணும் என்றால் மட்டும் கையை தூக்குவார்.அவர் ஏற்கனவே பற் பண்ணி அவுட்டானவர் என்றால் கையை தூக்கவே மாட்டார்.
அனேகமாக விக்கட் விழுத்த வேணும்.இல்லாவிடில் கட்ச் பிடிச்சு ஆட்களை அவுட்டாக்க வேணும்...விக்கட்டில பட்ட பிறகு சில வேளை நோ போல் சொல்லுவினம்...பயங்கர அலாப்பி கிங்மார் இருந்தவங்கள்.
விளையாடுபவர்கள் பல வித கட்டளைகளை போடுவார்கள்.
"காலுக்கு நேரா போடு"
"பந்தை தூக்கி போடு என்ட பக்கமா நான் கட்ச் பிடிக்கிறன்"
"லெக்கில சைட்டா போடு கீப்பருக்கு டிப் போகும்"
சில நேரங்களில் கட்ச் விடுபட்டால் இன்னோருதன் வந்து சொல்லுவான் நான் நிக்கிறன் நீ போ எண்டு .அவரின்ட கையுக்கும் பந்து வரும் கட்ச்சை விட்டிடுவார்
மற்ற டீம்காரன் சொல்லுவான் "அடிடா சிக்ஸ்"
"தூக்கி அடிக்காத கட்ச் பிடிச்சு போடுவாங்கள்"
ஆனால் பந்து போடுறவன் தன் இஸ்டத்திற்கு பந்தை போடுவான்.பற் பண்ணுபவன் தன்ட இஸ்டத்திற்கு பற் பண்ணுவான்.
இப்படி எங்கன்ட அரசியல் கருத்துக்கள் மாதிரி விளையாட்டு கருத்துக்களும் தூள் பறக்கும்....
ஒருநாள் இராணுவ சோதனைச்சாவடிக்கு கிட்டடியில் நிற்கும் பொழுது கப்டன் அண்ணே என்று அவனது குழுவை சேர்ந்தவன் கூப்பிட்டான். இவனுக்கு உயிர் போய்விட்டு திரும்பி வந்த மாதிரி இருந்தது ,இவனது நல்ல காலம் அங்கிருந்த இராணுவத்தினருக்கு கேட்கவில்லை.
கிராமத்தில் கிரிக்கட்டில் சூரனாக இருந்தாலும் பாடசாலை டீமில் அவனை நிர்வாகம் தெரிவு செய்யவில்லை.
விமானஒட்டி ,கப்பல் ஒட்டி எல்லோரையும் கப்டன் எண்டு சொல்லுறது மட்டுமல்லாமல் இராணுவத்தில் பணிபுரிபவனையும் கப்டன் என அழைக்கிறார்கள் என்று இவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.போதாக் குறைக்கு பாடசாலை இல்லங்களிலும் கப்டன் இருக்கு என்னடா இது என மனதில் எண்ணிக்கொண்டான்.
பாடசாலைபடிப்பு முடிந்தவுடன் ,தனது பெயருக்கு முன்னாள் கப்டன் வரக்கூடிய தொழில் பார்க்கவேண்டும் எண்ணியவன் எந்த தொழில் செய்யலாம் என யோசிக்க தொடங்கினான்.
விமான விபத்து நடந்தால் உடம்பே கிடைக்காது அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டான்.கப்பல் மாலுமியாக வந்தாலும் கலியாணம் கட்டி மனிசியை கூட்டி கொண்டு போக ஏலாது என சிலர் சொல்ல கேட்டதால் அந்த யோசனையும் கைவிட்டான்...
இராணுவத்தில சிங்களவன் சேர்க்கமாட்டான், அப்படி செல்வாக்கை பயன்படுத்தி சேர்ந்தாலும் புலிகள் வைக்கிற கன்னி வெடியில் ஆள் சுக்குநூறு என்று எண்ணியவன் கப்டன் ஆசை மறந்துவிட்டான் (துறந்துவிட்டான்)
"ரவி டேய் மச்சான் எப்படி இருக்கிறாய்,ஊர் பக்கம் போகவில்லையோ"
",சிட்னியில் இருக்கிற டமிழ்ஸின் பிள்ளைகளுக்கு கிறிகட் கோட்ச் பண்ணுகிறன் அத்துடன் ஒவர் 40(40 வயத்துக்கு மேற்பட்டோர்)டிமுக்கு கப்படனா இருக்கிறன் ....உனக்கு தெரியும்தானே நான் எங்கன்ட சனத்தோட பழகிறதில்லை எண்டு,அதுசரி நீ என்ன செய்கிறாய்"
"நான் என்கன்ட சனத்தோட நின்று பந்து உருட்டிறன்.........கி கி..."
முக்கிய குறிப்பு: இது சுத்த கற்பனை கதை கலப்படமில்லை..அத்துடன் கிறிகட்டுக்கும் எனக்கும் வெகு தூரம்....

Monday, December 31, 2012
நாங்கள் யாழ்ப்பாணத்தார் (we are from Jaffna)
பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம்
.சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய்
அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க
வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ்
பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம்
கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி
என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி
க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான்
விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு
போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்க வேண்டும்
பிறகு நேரம் கிடைக்காது இப்ப வாங்கோ என்று அதிகாரம்கலந்த பாசத்தோடு
அழைத்தான்.போங்கோ பிள்ளை அப்பா கூப்பிடும் பொழுது போய் படியுங்கோ அப்பதான்
சாய்பிரியாவை விட அதிக புள்ளி எடுக்கலாம் . போனமுறை சாய்பிரியா கேடயம்
எடுத்தவ இந்த முறை நீங்கள் எடுக்க வேணும் என அம்மா வேறு அவளை நச்சரித்தாள்
.சாய்பிரியாவின் அம்மாவும் இவளின் அம்மாவும் ஒன்றாக யாழ்ப்பாணத்தில்
படித்தவர்கள்
பெரியவளுக்கு அந்த வயசில் போட்டிகள் கேடயங்கள் எதைப்பற்றியும் தெரியாது.
அப்பாவும் அம்மாவும் தன்னை படிக்க வற்புறுத்துகிறார்கள் என்று எண்ணியபடியே கேள்விகொத்தொடு வந்தாள் .,வரும் பொழுதே “தங்கச்சி மட்டும் விளையாடுகிறா நான் மட்டும் படிக்க வேண்டும் கோல் கெர் டு(call her too) ” என்ற படியே வந்து அமர்ந்தாள்.சரி சின்னா நீங்களும் வாங்கோ அடுத்த வருடம் நீங்கள் இந்த போட்டிக்கு போக வேணும் தானே இப்பவே படிச்சால் நல்லம் என்று சொல்லி இருவருக்கும் சுரேஸ் படிப்பித்தான்
சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..
சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்
அப்பா தங்கச்சி சொன்னது எல்லாம் சரிதானே பிறகு ஏன் நீங்கள் வேறு பதில் கொன்னீங்கள்..
தங்கச்சி சொன்னது சரிதான் ஆனால் சமய போட்டியில இந்த கேள்வி கேட்டால் நீங்கள் புத்தகத்தில் இருக்கும் பதிலை சொல்ல வேணும் சரிதானே.
பிள்ளைகள் இருவரும் ஒம் அப்பா என்று போட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.
போட்டி முடிவடைந்து முடிவுகள் அறிவித்தார்கள் .பெரியவளுக்கு கேடயம் கிடைத்தது .பெற்றோர்கள் சந்தோசப்பட்டார்கள் .சாய்பிரியாவுக்கு என்ன கிடைச்சதாம் என்று பெரியவளிடம் தாய் கேட்டார்.”எனக்கு தெரியாது அம்மா”.தாய்காரியின் முகத்தை பார்த்தியளே உம் என்று வைச்சிருந்தா ,அவளின்ட மகளுக்கு கேடயம் கிடைக்கவில்லை எண்ட ஆத்திரம்தான்.
"சீ சீ அப்படியிருக்காது"
"உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் எதிராக சொல்லாவிட்டால் நித்திரை வராதே"
"சரி சரி உதை விடும்"
பெரியவள் மூன்றாம் வகுப்பு படிக்க தொடங்கியவுடனே சுரேஸும் மனைவியும் அவளது படிப்பில் அதிக அக்கறையுடன் ஈடுபடத்டொடங்கிவிட்டார்கள்.படிப்பு மட்டுமல்ல நீச்சல்,பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வலை பந்தாட்டம்,போன்ற துறைகளிலும் அவளை ஈடுபடுத்தினார்கள்.அவளும் நன்றாக பாடங்களில் சித்தியடைந்தாள் . அக்கா எல்லாப்பாடங்களில் "எ" எடுத்திருக்கிறார் நீங்களும் அடுத்த வருசம் எல்லா பாடத்திலயும் "எ" எடுக்க வேணும் என்றனர் பெற்றோர்.சிறுசும் ஒம் என்று தலை அசைத்தாள்.இருவரும் நன்றாக படித்துகொண்டிருந்தனர்.அதே நேரம் எனைய துறைகளிலும் இருவரும் தங்களால் இயன்றளவில் பிரகாசித்துக்கொண்டிருந்தனர். தங்கச்சியின் குரலை பார்த்தியா நல்லாய் இருக்கு நீயும் அவளை போல பாட வேணும் என தாயார் சொன்னார்.இன்னொரு நாள் அக்கா நல்லா பரதம் ஆடுகிறாள் அவளை பார்த்து நீ வடிவாய் ஆடவேணும் என்றாள்.
"வை யு பிப்பில் ஆர் கொம்பயர் இச் அதர்(why do you people compare us to each other ) "என்றனர் சிறுவர்கள் இருவரும்.
"அம்மாவுக்கு வாய் காட்டாமல் அவ சொன்னதை செய்யவும்"என்றான் அதிகாரத்துடன் சுரேஸ் .
சிறுவர்களின் அந்த கேள்விக்கு பின்பு சகோதரர்களிடையே ஒப்பிடுவதை தவிர்த்து கொண்டனர்.ஆனாலும் அயலவர்களுடன் ஒப்பிடுவதை விடவில்லை.
உயர் வகுப்பு பாடசாலை தேர்வில் சாய்பிரியா அதிக புள்ளி கிடைத்து வேறு பாடசாலைக்கு சென்று விட்டாள் .இதனால் சுரேஸும் அவனது மனைவி யும்பெரும் கவலையடைந்திருந்தனர்.ஆனால் பிள்ளைகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.காரணம் இவர்கள் செல்லும் பாடசாலைக்கும் சாய்பிரியா செல்லும் பாடசாலைக்கும் பெரிதாக தராதர வித்தியாசம் இல்லை.தராதர வரிசையில் சாய்பிரியாவின் பாடசாலை முதலாவது ,இவர்களது இரண்டாவது.
பிள்ளைகள் இப்ப உயர் வகுப்பு படிப்பதால் எதிர்கருத்து வைப்பதற்கு துணிந்து விட்டார்கள் பெற்றோரும் அதை மெளனமாகவும் சில நேரங்களில் சிரித்தும் சமாளித்து விடுவார்கள்.தாயாரை விட சுரேஸ்தான் பலே கில்லாடி சிரித்து சமாளிப்பதில்.
" பெரிசு ,சாய்பிரியா எத்தனை மாக்ஸ் எடுத்தவ இந்த முறை டெஸ்டில்"
"எனக்கு தெரியாது ,மற்ற ஆட்களின்ட மாக்ஸ்சை (marks)கேட்கிறது நொட் நைஸ்(not nice),மற்றது அவ வேற ஸ்கூல்"
"நீ டெலிபோன் பண்ணி கேட்டிருக்கலாம் நான் படிக்கிற காலத்தில என்ட மாக்ஸ்சை பார்க்க முதல் மற்றவனின்ட மாக்ஸ்சைதான் பார்ப்பேன்"என சொல்லி சிரித்தான் சுரேஸ்.
"யூ பிப்பில் ஆர் சொ ரூட்(you people are so rude) "
"தங்கச்சி இன்றைக்கு பலே ஆட்டத்தில கிறிஸ்டினா நல்லா செய்திருந்தா அவவுக்குதான் முதல் பரிசு கிடைச்சது"
"ஒம் அக்கா நானும் பார்த்தேன் சுப்பேர்ப்(superb)"
" பிள்ளைகள், அவள் நல்லாய் செய்தாள் என்று சொல்லுறீயள் ஏன் உங்களால் செய்யமுடியாமலும்,முதல் பரிசு எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் படிக்கிற இடத்தில்தானே நீங்களும் படிக்கிறீயள்"
"கேர் பெரண்ட்ஸ் ஆர் ரஸ்யன்(her parents are Russians) "
"சொ வட் .மனம் இருந்தால் இடம் உண்டு"
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"இருவரும் ஒன்றாக செய்தனர்.
"நீச்சலில் முன்வீட்டு சன்டினாவுக்கு பாடசாலையில் முதல் இடம் கிடைச்சிருக்கு ஏன் உனக்கு கிடைக்கவில்லை பிள்ளை"
"சி இஸ் ஒசி கெர்ல்"
"சொ வட், நீயும் இங்கதானே பிறந்தனீ...ஏன் உனக்கு எடுக்க ஏலாமல் போய்விட்டது..."
"!!!!!!!ம்ம்ம்ம் ஐ வில் ரை நெக்ஸ்ட் டைம்(I will try next time)"
"இந்த முறை முயுசிக் கொம்பிடிசன் வருகிறது இரண்டு பேரும் டான்ஸ்க்கும்,முயுசிக்கும் போடவேணும் ,இந்தியன் பெட்டைகள் அனுஸ்காவும் கம்சிகாவும் தான் இந்த முறையும் முதலாவதாக வரப் பார்ப்பாள்லவையள் ஆனால் நீங்கள் தான் இந்த முறை முதலாவதாக வரவேணும்"
" ஒ கொட்(oh god)....ஏன் அம்மா நீங்கள் எல்லாத்தையும் கொம்பிடிசனாக பார்க்கிறீங்கள் ,ட்ரை பண்ணுவோம் இவ் வி கெட் ......."
யார் அம்மாவுக்கு வாய்காட்டிகொண்டு எதிர்த்து கதைக்கிறது என்று கேட்டபடியே சுரேஸ் அங்கு வந்தான்.
"அப்பா ,அம்மா எல்லாத்தையும் கொம்பிடிசனாகத்தான்(competition) பார்க்கிறா ஏன் இப்படி செய்கிறா என்று தெரியவில்லை"
அம்மா மட்டுமல்ல நானும் அப்படித்தான் பிகோஸ் வி ஆர் வ்ரோம் யவ்னா (because we are from Jaffna).எதிலும் ஒரு போட்டியிருக்க வேணும் அப்பதான் முன்னுக்கு வரலாம்.
"நீங்கள் சின்ன வயசில எடுத்த மெடல்கள் ஒன்றையும் இங்க காணவில்லையே அப்பா"
சுரேஸுக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் போனாலும் சாமாளித்துவிட்டான் ,ஆர்மிக்காரனின் தலையில் பழியை போட்டு தப்பித்துகொண்டான்.மெடல்களை அவன் தொட்டே பார்க்கவில்லை என்பது அவனுக்கே தெரிந்த உண்மை.
"அது எல்லாத்தையும் ஆர்மிகாரன் உடைச்சுப்போட்டான்,அவன்கள் மெடல்களை மட்டுமா உடைச்சாங்கள் எங்களுடைய கல்வியையும் பாழாக்கி போட்டாங்கள் ,ஆனாலும் எங்கன்ட சனத்தின்ட விடாமுயற்சியும் போட்டி மனப்பாங்கும் தான் அழித்தாலும் மீண்டும் முளை விடுகிறார்கள்....அவங்களை"
அப்பா டென்சன்(tension) ஆகிவிட்டார் லெட்ஸ் கொ( lets go),என கூறியவாறு பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

Thursday, November 22, 2012
"காய்....பேய்காய்"
சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட
அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால்
நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி
என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம்
ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில்
பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம்
எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து
வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு
அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக
நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன்
வேறு சில விடயங்களுக்கும் அது பின்பு உதவியது என்பது நான் அறிந்த உண்மை...
நான் ஆங்கில டியுசனுக்கு போகமுதல் அவனது அறைக்கு செல்வேன்.பின்பு இருவரும் ஒன்றாக டியுசன் வகுப்புக்கு செல்வோம்.ஆங்கில வகுப்புக்கு போகும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே இருவரும் அலங்காரத்துடன் செல்வோம்.சுரேஸ் ரஜனியின் ஸ்டைலில் தலைமயிரை குழப்பிவிட்டு பெல்போட்டம் காற்சட்டை ,மேற்சட்டையின் ஒரு பட்டனை கழற்றி விட்டிருப்பான்.கையில் 80 பக்க கொப்பியை சுருட்டி வைத்திருப்பான்.
ஆசிரியருக்கு எங்களின் படிப்பின் அக்கறையைவிட அவரின் பணத்தில் அக்கறை அதிகமாக இருந்தது .அதனால் எங்களது சேட்டைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.பெண்கள் இருக்கும் வாங்குக்கு அருகில் அதிகமாக நாங்கள் போய் இருப்போம்.சில பெண்கள் திரும்பிப் பார்ப்பார்கள் ,சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரியிருப்பார்கள்,சிலர் பார்க்கவே மாட்டார்கள்.புதிதாக அன்று ஒருத்தி வந்திருந்தால் பார்த்தவுடனே ஒரு இது (காதல் என நல்ல எழுத்தாளர்கள்,வர்ணிக்க கூட்டும் ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு இதுதான்)அவளும் எங்களுக்கு பக்கத்தில் இருந்த வாங்கில் வந்திருந்தாள்.
"மச்சான் காய் என்னை பார்க்குதடா"
"எந்த காய்"
"புதுசா வந்த காய்"
"என்னை பார்க்குதோ? உன்னை பார்க்குதோ?"
"என்னைட்ட நீ இப்ப அடி வாங்கப்போறாய் காய் என்னைத்தான் பார்க்குதுடா காயை மடக்கலாம் போல கிடக்குது"
நான் பார்த்தேன் காய் உடனே கீழே குனிந்து கொண்டாள்.பார்த்துகொண்டே இருந்தேன் ,எங்களை பார்ப்பதும் உடனே குனிவதாகவும் இருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.காய் அவனை பார்த்து கொண்டேயிருந்தாள்.இந்த காய் அந்த காயை மடக்கப்போகுது என்று போட்டு நான் எனது படிப்பை கவனிக்க தொடங்கினேன்.படிப்பு எறுகிறமாதிரி தெரியவில்லை.கல்வி தோல்வியை தழுவ சபலம் வெற்றி பெற்றது.
இந்த காயை விழுத்தாமல் விடுவதில்லை என்றவன் அதற்கான முயற்ச்சியிலும் ஈடுபட தொடங்கினான். பார்ப்பதும் சைக்கிளில் பின்னால் செல்வதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது.
"என்னடா காயை மடக்கலாம் என்றாய் ,காய் மடங்கிறமாதிரி தெரியவில்லை "
" அடுத்த வகுப்பில் பார் "
அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ,இவன் அந்த பெட்டையுடன்(காயுடன்) கதைத்தது தான் தாமதம் சிலர் விசில் அடித்தார்கள் வேறு சிலர் கைதட்டினார்கள்.மச்சான் நீ காயை மடக்கிப்போட்டாயடா என எல்லோரும் சொல்ல அவனுக்கு வெட்கம் வரதொடங்கி விட்டது.
அடுத்த கிழமை வகுப்புக்கு வந்த பொழது ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவில்லை இருவரும் படிப்பில் கவனமாக இருந்தார்கள் . நான் மட்டும் அவர்களை கவனிப்பதில் கவனமாக இருந்தேன்.நான் பார்த்த காயை இந்த காய் மடக்கிபோட்டுதே என்ற அதங்கம்தான்.வகுப்பு முடிந்தவுடன் வாட போவோம் என்று அவனை அழைத்தேன்.வழமையாக வகுப்பு முடிந்தவுடன் அவனது றூமூக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டை போவேன்.
"மச்சான் நீ போடாப்பா நான் லெட்டா வாரன் ,அவள் சொன்னவள் பெடியங்களுக்கு முன்னாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எல்லோரும் போன பிறகு கொப்பியை வாங்கிகொண்டு வாரன்"
"இப்ப நீ காய் வெட்டுறாய்"
"கோபிக்காதயடா"
"சரி சரி வாழ்த்துக்கள்"
என கூறியபடி நேராக வீடு சென்றேன்.
இரண்டு நாட்கள் கழித்து வீட்டை வந்தான் .அப்ப நாங்கள் ரோட்டில் நின்றுதான் கதைப்போம் ,சகோதரிமார் இருப்பதால் வீட்டினுள்ளே அனுமதி கிடையாது.
மச்சான் காய்யை விழுத்திப்போட்டன். எல்லோரும் போனபிறகு எனிட்ட கொப்பியை தந்து என்னோட கதைச்சது.வீட்டை கொப்பியை கொண்டு போய் பாருங்கோ என்று சொல்லிச்சுது வீட்டை போய் பார்த்தால் என்னை பிடித்திருக்கா? என்று எழுதியிருக்கு மச்சான்.நான் அடுத்த வகுப்புக்கு இதுக்கு பதில் எழுத வேணும் என்றவன் என்னை கூட்டிகொண்டு டீ வாங்கித்தந்தான்.
பின்பு நான் அவனது றூமுக்கு அடிக்கடி போய் வருவேன்.
அவனது காதல் நன்றாகவே சென்று கொன்டிருந்தது. ஒரு நாள் சொன்னான்
"மச்சான் காய் கணக்கில வீக்காம் , டியுசன் சொல்லி தரச் சொல்லி கேட்குதடா"
"சொல்லிக் கொடன்"
"இங்கிலிஸ் டியுசன் முடிந்தவுடன் அப்படியே இங்க கூட்டிக்கொண்டு வந்து டியுசன் எடுக்கப்போரன்"`
..........................
{தொடர்ச்சி.......இத்துடன் இத் தொடர் முடிவடைகிறது}
ஆங்கில டியுசன் முடிய அநேகமாக நான் அவனது றூமூக்கு போவது வழக்கம் .அந்த காயை கொழுவியதின் பின்பு என்னை அவன் ஒதுக்குவது(காய் வெட்டுவது)நன்றாக புரிந்தது. இருந்தும் தொடர்ந்தும் அவனது அறைக்கு சென்று வந்தேன்.
"மச்சான் இன்றைக்கு காய் றூமூக்கு வாரது என்று சொன்னது, நீ டியுசன் முடிய வரவேண்டாம் டாப்பா"
"காய் என்று சொல்லாமல் பெயரை சொல்லலாம் தானே"
"கலியாணம் கட்டினால் கலா என்று அழைப்போம் இப்ப காய் தான்"
"சரி சரி எதோ நடத்து"
வகுப்பு முடிந்தவுடன் எனது வீட்டை போகமல் சற்று தொலைவில் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.உண்மையிலயே கலா இவனது அறைக்கு செல்கிறாள என்று.10 நிமிடங்களின் பின்பு கலா அவன் இருந்த வீட்டின் கேட் அருகே வந்து நின்று இரு புறமும் பார்த்து விட்டு உடனடியாக உள்ளே சென்று விட்டாள்.
இதற்குமேல் கலாவை அவன் மடக்கி போட்டான் என்பதற்கு எந்த சாட்சியும்
தேவையில்லை என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.
அடுத்த முறை வகுப்புக்கு போக முதல் அவனது றூமூக்கு போக நினைத்து போட்டு தவிர்த்து கொண்டேன்.வர வேண்டாம் என்று சொன்னவனின் இடத்து ஏன் போவான் என்ற கெளரவம் தடுத்தாலும் கணக்கு வகுப்பில் நடந்தை அறிய மனம் துடித்தது.
வகுப்புக்கு முதலே அவனது றூமூக்கு சென்றேன் .உற்சாகமாக வரவேற்றான்.
"எப்படியடாப்பா அன்றைய கணக்கு பாடம் போச்சு.."
"காய் துணிச்சது ஆங்கில டியுசன் முடிய சினேகிதி வீட்டை போறன் என்று பொய் சொல்லி போட்டு வந்திருக்கு ஒரு பெட்டை தனிய றூமுக்குள்ள இருந்தா படிப்பு எங்க வரப்போகுது.காதல்தான் வரும்"
அவள் வருவது தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் சொன்னான் மச்சான் காலை தட்டினேன் பேசாமல் இருந்தாள் .
"நீ சும்மா விடமாட்டியே"
"விசயத்தை முடிச்சிட்டேன்"
"டேய் டேய் பத்திக் கித்தி போகப் போகுது"
"அந்த விசயத்தில நான் உசார் மச்சான்"
"எதோ நடத்துராசா நடத்து உன் காட்டில மழை"
அவன் சொன்ன விடயத்தில் உண்மை இருக்ககூடும் காரணம் இந்த விடயத்தில் அவன் துணிந்து செயல் படக்கூடியவன்.ஏற்கனவே ஒரு பெண்னிடம் அடிவாங்கிய அனுபவமும் உண்டு.
"கலியாணம் கட்டுற யோசனை இருக்கோ அல்லது காய் வெட்டுற பிளானொ?"
"அதை அந்த நேரத்தில் பார்ப்போம்"
"என்னடா இப்படி சொல்லுறாய்"
கலா இந்தியாவுக்கு படிக்க போறாள் மச்சான் என்று ஒரு நாள் சொன்னான்.
இனி எல்லாம் கடிதப்போக்குவரத்துதான்.
இந்தியா போனவுடனே அவள் கடிதம் போட்டிருந்தாள்.இவன் பதில் போடவில்லை .அவள் பல கடிதங்கள் போட்டிருந்தாள் இவன் மறுமொழி போடவேயில்லை.
சில கடிதங்களை அவன் உடைத்தே பார்க்கவில்லை மேசையில் கவனிப்பாரற்று கிடந்தது.
"என்ன மச்சான் பதில் போடவில்லையோ"
"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"......
முற்றும்..

Thursday, September 27, 2012
கிரிக்கட்டும் அரசியலும்
அவன் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன்.கிரிக்கட் விளையாட்டு என்றால் அவனுக்கு
நிகர் அவனேதான். பாடசாலை முடிந்து வீடு வந்து உணவு உட்கொண்டபின்பு
மீண்டும் அதே பாடசலைக்கு விளையாடுவதற்காக சென்றுவிடுவான்.பாடசாலை அவனது
வீட்டிற்க்கு அருகாமையில் இருந்தமையால் மிகவும் வசதியாக இருந்தது
.விளையாட்டு ஆசிரியரும் அவனோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.தேனீர்
,சிற்றூண்டிகள் போன்றவைகளை கொடுப்பான்.ஆசிரியரும் சில விளையாட்டு
நுட்பங்களை கற்றுகொடுத்தார்.
படிப்பில் அவ்வளவு சுட்டி என்று சொல்ல முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் அவனுக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்தில்தான் இவனுடன் உரையாடுவார்கள் இவனும் நன்றாகவே ஆங்கிலத்தில் அந்த வயசில் பேசுவான்.
பாடசாலை கிரிக்கட் அணியில் தெறிவு செய்யப்பட்டிருந்தான்.பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் அவன் தான் அந்த பாடசாலையின் நாயக ஆட்டக்காரன்.ஒரு மட்ச்சில் எதிரணியை வெற்றியடைய 2 ஒட்டங்கள்தான் பெற வேண்டிய நிலை இவன் அதை செய்தான் அன்றிலிருந்து அவன் தான் பாடசாலை "கீரோ"...அந்த காலத்தில் டெஸ்ட் மட்ச்சுக்கள் அதிகமாக நடை பெறும். ஐம்பது ,இருபது ஒவர் மட்ச்கள் நடைபெறுவதில்லை.டெஸ் விளையாட்டுக்கள் அநேகமாக வெற்றி தோல்வி இன்றிதான் முடிவடையும்.கடைசி நாள் பந்தை தடுத்து விளையாடியே அந்த சாதனை நிலை நாட்டிவிடுவார்கள்.
மாவட்ட அணிக்கும் தெரிவு செய்தார்கள்.நாட்டின் விளையாட்டு குழுவிற்க்கு தெரிவு செய்ய பல முறை அழைத்தார்கள் ஆனால் தெரிவு செய்யவில்லை அவனது மொழி ,பிராந்திய அரசியல்வாதிகளின் செல்வாக்கின்மை முக்கிய காரணம் என்பதை அவன் இன்றும் ஏற்றுகொள்ள தயராகவில்லை.
அரசியல்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான்.அரசியல் ஒரு தீண்டத்தகாத விடயம் என்ற கருத்து அவனது குடும்பத்தில் இருந்தது. இனபாகுபாடு காரணமாக தனது விளையாட்டு திறமை நாடளவியரீதியில் பிரகாசிக்கவில்லை என்பதை அவனால் சிந்தித்து பார்க்ககூட முடியவில்லை. பாடசாலை ,விளையாட்டு,கோவில் இதுதான் அவனது செயல்பாடுகள்.புத்தகம் வாசிப்பது என்றால் கிரிக்கட் சம்பந்தமான புத்தகம்தான் வாசிப்பான்.இங்கிலாந்து,மேற்கிந்திய தீவுகள்,இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் விபரணங்களை எங்களுக்கு வந்து சொல்லுவான். மேற்கிந்திய தீவுகளின் விளையாட்டு வீரர்களை புகழ்ந்து கொண்டிருப்பான்.அந்த அணியை சேர்ந்த வீரர்கள்தான் இவனது நாயகர்கள்.இவனது பள்ளி பருவகாலத்தில் அவர்களது அணி உச்சத்தில் இருந்தது.எது உச்சத்தில இருக்கின்றதோ அதை நாடுவது மனித இயல்பு அந்த வகையில் அவனும் அந்த அணியை நேசித்திருக்கலாம்.பத்திரிகையில் வரும் படங்களில் துடுப்பாட்ட வீரர்களின் அக்சன்களை பார்த்து தானும் அதே போல ஆடுவான்.
தொழில் தேடி கொழும்பு சென்றான்.அவனது மாமனாரின் வீட்டில் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாடினான்.மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இவனும் அவர்களும் ஆங்கிலத்திலயே உரையாடினார்கள்.ஆங்கிலமும் கிரிக்கட்டும் மேட்டுகுடிகளின் ஒரு அடையாளம். இவனது விளையாட்டு திறமையால் சிங்கள நண்பர்களின் ஸ்போர்ட் கிளப்பில் சேர்ந்து பிரகாசிக்க கூடியதாக இருந்தது.கொழும்பு செல்லும் பொழுது சிங்கள மொழி பேசமாட்டான் . காலப்போக்கில் அதையும் கற்றுகொண்டான்.நணபர்களுடன் சிங்கள மொழியில் பேசக்கூடிய தேர்ச்சியும் அடைந்தான்.
கிரிக்கட் விளையாட்டின் திறமையாலும்,ஆங்கில அறிவாலும், மாமனாரின் சிங்கள நண்பரின் செல்வாக்கினாலும் அவனை ஒரு தனியார் நிறுவனத்தில் பயிற்சி கணக்காளராக பணிபுரிய அழைத்திருந்தார்கள்.
வேலைக்கு சென்று கொண்டு அதே நேரம் கணக்காளர் தேர்வுகளையும் கற்று பாஸாகி கொண்டிருந்தான் இதனால் அவனுக்கு அதே கொம்பனியில் கணக்காளர் பதவி கிடைத்தது. தனிஅறை,கார் போன்றவை நிறுவனத்தால் வழங்கப்படிருந்தன. சிங்கள வாகனசாரதியையும் நிறுவனம் அவனுக்காக வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவன் மாத்தையா என அன்பாக அழைப்பான்.கார் கதவை திறந்துவிடுவான் மற்றும் அலுவலகத்தில் சிற்றூழியம் செய்வான். தேனீர் போட்டுக்கொடுத்தல் மற்றும் மனைவியை கடைகளுக்கு அழைத்து செல்வான்.
காலையில் வேலைக்கு சென்றவுடன் ஆங்கிலப்பத்திரிகை எடுத்து முதலில் பார்ப்பது கிரிக்கட் சம்பத்தப்பட்ட விடயங்களைதான். சிற்றூழியன் பத்திரிகையுடன் நல்ல சூடான தேனீரும் கொண்டு வந்து கொடுப்பான்.
தொழில் புரியும் காலங்களிலும் அரசியல் செய்திகளை அவன் வாசிப்பதில்லை சர்வதேச செய்திகளையும் ,சர்வதேச நாணய மற்றும் வியாபரசெய்திகளை மட்டும் விரும்பி படிப்பான்.அது அவனது தொழிலுக்கும் அவசியமாக இருந்தது.கொழும்பில் குண்டு வெடித்தால் அதையும் ஒரு செய்தியாகவே பார்த்தான்,அதன் காரணத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை."அன்ன கொட்டி போம்ப தம்மா"என சிற்றூழியன் எதாவது வெடிச்சத்தம் கேட்டு சொன்னால் அதே உணர்வுடன் இவனும் இருப்பான்.சும்மா தேவையில்லாமல் இவன்கள் குண்டு வைக்கிறாங்கள் என மனதில் எண்ணிக்கொள்வான்.
ஒரு சில இனக்கலவரங்களையும் சந்திக்கவேண்டியிருந்தது.படிப்பறிவற்றவர்கள் செய்கின்றனர் நல்ல சிங்களவர்கள் செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தான்.ஒரு இனக்கலவரம் நடைபெறும் பொழுது அலுவலகத்தில் இருந்தான். உடனே சிங்கள நண்பர்கள் அவனது வீட்டுக்கு அழைத்து சென்று அவனையும் அவனது மனைவியையும் தங்களது வீட்டில் வைத்து காப்பற்றினார்கள்.இதனால் சிங்களவர்கள் மீது அவனுக்கு ஒரு மதிப்பு எற்பட்டுவிட்டது.இது இனக்கலவரமில்லை ஒரு படிப்பறிவற்ற குழு இன்னோரு குழுவின் சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றனர் என்ற எண்ணத்துடன் இருந்தான். பல மாதங்களாக அவனையும் மனைவியையும் சிங்கள நண்பர்கள் மிகவும் கவனமாக கவனித்து வந்தனர்.அவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது ஒன்றாகவே அழைத்து செல்வார்கள்.
இனக்கலவரங்கள் அவனது மனைவியை பயங்கொள்ள வைத்தது. அவளது அண்ணன் அவுஸ்ரேலியாவில் இருந்தபடியால் அவளும் அவுஸ்ரேலியா சென்று உயிர் பிழைப்போம் என்றிருந்தாள்.கணவனிடம் சொல்லி அவுஸ்ரேலியா தூதரகத்துக்கு நேரடியாகவே சென்று விண்ணப்பத்தை கையளித்தாள்.கல்விதகமைகாரணமாக அவர்களுக்கு விசா உடனே கிடைத்தது.அவனுக்கு அவுஸ்ரேலியா வரவிருப்பமில்லயென்றாலும், மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக அவுஸ்ரேலியா வந்து சேர்ந்தான். அவுஸ்ரேலியாவில் நிரந்தர வேலை கிடைத்தது.வாகனம் ஒட்டுவதற்க்கும் ,மற்றும் சிற்றூழியம் செய்ய வேலையாட்கள் இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. மாத்தையா என்று கூப்பிட ஆட்கள் இல்லை .எல்லோரும் பெயர் சொல்லி அழைத்தனர் .இதனால் சிங்களவர்கள் நல்லவர்கள் என்ற எண்ணம் மேலும் வளரத்தொடங்கியது
. சிங்களநண்பர்களுடன் தொடர்பில் இருந்தான். விடுமுறைக்கு கொழும்புக்கு சென்றால் சிங்கள நண்பர்களை மறக்காமல் போய் சந்திப்பான் அவர்களும் இவனை வந்து சந்திப்பார்கள்." கொட்டிகே வட தமாய் ஒக்கம" என சொல்லுவார்கள் இவனும் ஆமா போடுவான். அவுஸ்ரேலியா வந்த பின்பு கொழும்பில் குண்டு வெடித்தால் மட்டும் செய்தியாக தெரியும்..நாட்டின் எனைய பகுதியில் நடந்தவைகள் பற்றி எதுவும் தெரியாது காரணம் முன்னனி ஊடகங்கள் அந்த செய்தியை பிரசுரிப்பதில்லை . சிறிலங்காவின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் என்ற சிங்களவர்களின் கருத்தோடு ஒன்றாகி நின்றான்.
.முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு பல சிங்களநண்பர்கள் அவனை தொடர்பு கொண்டார்கள்.புலிகளால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் .அங்கு இருக்கும் நீங்கள் உதவி செய்யவேண்டும் என கோரிக்கை விட்டனர்.
எங்களது விளையாட்டு கழகத்தினர் 25 ஆண்டு நிறைவு விழா இந்த வருடம் கொண்டாடுகிறோம் "ஒயா தமாய் ஜீவ் கேஸ்ட்",என சிங்கள நண்பனின் அழைப்பை கேட்டவனுக்கு சிங்களவன் உண்மையிலயே நல்லவன் என்று மனதில் எண்ணிக்கொண்டா.....
பத்திரிகையில் இவனது படத்துடன் செய்தி பிரசுரமாகியிருந்தது.புலத்திலிருந்து வந்த தமிழர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி.......
ஆர் ஆர்

Subscribe to:
Posts (Atom)