சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர்
ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய
தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு
சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான்
கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில்
போய்சேரும்.
எங்களுக்கு என்ன வரும் ??????
"தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”,
"எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ "
"இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்"
நான் எம்.ஜி.ஆர் ,சிவாஜி , எல்லாம் அந்த காலத்தில
பார்த்தனான் இந்த புதுசா நடிக்கறவங்கள் ஒருத்தரையும் பார்க்க
கிடைக்கவில்லை,இந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் இனி என்ட வாழ்க்கையில்
எப்பகிடைக்குமோ? இல்லாட்டி கிடைக்காமலயே மண்டையை போட்டுவிடுவனோ தெரியாது"
ஆச்சி இப்படி சொன்னபடியால் எனது மனது கொஞ்சம் இலகி போய்விட்டது.
"ஆச்சி கோவிலுக்கு போய் சாமியை கும்பிடப்போறீங்கள் என்றால் சொல்லுங்கோ
கூட்டிகொண்டு போரன்.உந்த சினிமா கதாநாயகனை தூக்கி பிடிக்க நான்
வரமுடியாது,மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஆச்சி."
" நீ கூட்டிக் கொண்டு போகட்டி உன்ட மனிசியை கூட்டிகொண்டு போகசொல்லு"
"அவள் வந்தா கூட்டிகொண்டு போங்கோ"
கலியாணத்திற்க்கு பின்பு மனிசிக்கு நான் தான் கதாநாயன் என்று
நினைத்திருந்தேன்.ஆனாபடியால் சினிமா கதாநாயகனிடம் அவ்வளவு மோகம் இருக்காது
.ஆச்சியை அழைத்து செல்லமாட்டாள் என்றிருந்தேன்.ஆனால் அவளும் ஆச்சியும்
சேர்ந்துதான் திட்டம் போட்டிருக்கிறார்கள் பின்பு தான் தெரியவந்தது.
"வயசு போன நேரத்தில் ஆச்சி கேட்கிறா,கூட்டிக் கொண்டு போயிட்டு வரட்டேயப்பா"
"சரி,அவர் எந்த ஹொட்டலில் நிற்கிறார் என்று தெரியுமோ?எங்க போய் பார்க்கப் போறீங்கள்."
"அவர் உங்க பராமட்டாவில் ஒரு ரெஸ்டோரன்டில் சூட்டிங்க்கு வந்திருக்கிறார் ஆச்சியுடன் போய் பார்த்துவிட்டு வாரன் "
என்று காலையில் வெளிக்கிட்டவையள் வரும் பொழுது பிற்பகல் 4 மணி ஆகியிருக்கும்.
"அடி பிள்ளை, இவன் தம்பியை ஒரு பக்கமாக பார்த்தால் விஜய் மாதிரி இருக்கு என்னடி" ஆச்சி லெட்டா வந்ததுக்கு கொஞ்சமாக ஐஸ் வைத்தார்.
"விஜயயை படத்தில் பார்த்ததிலும் பார்க்க நேரில் பார்க்கும் பொழுது கூட வடிவாக இருக்கிறார்."என ஆச்சி மனிசிக்கு கொமனட் அடிச்சுது.
வயசு போனதுகள் ஊரில் படம் பார்த்து பழகினதாலும்,வெளிநாட்டுக்கு வந்து டிவி
யில் படம்பார்த்த பழக்கதோசத்தாலும் இந்த கதாநாயக வழிபாடு,மோகம் இருக்கும்
என எண்ணிகொண்டிருக்கும் பொழுது என்னுடைய கை தொலைபேசி ஒரு ராகத்துடன்
சினுங்கியது.
"கலோ "
"யார் சுரேஸோ"
"ஒம் சுரேஸ் தான்"
"நாளைக்கு விஜய்யின் சூட்டிங் எங்க நடக்குது என்று தெரியுமோ"
"நான் அவரின்ட பி.ஏ இல்லை"
"சும்மா பகிடி விடாமல் சொல்லுங்கோ,உங்கன்ட மனிசிதான் , ஆச்சி விஜயை பார்க்க கூட்டிக்கொண்டு போனவவாம்"
"எனக்கு தெரியாது ,எதற்கும் லைன்னில் இரும் மனிசியிட்டை கேட்டு சொல்லுறன்"
"இஞ்சாரும் இவன் விஜய் சிட்னியில எங்க நிற்கிறான் என்று கனகர் கேட்கிறார் உமக்கு தெரியுமோ "
" இன்றைக்கு டார்லிங் காபரில ,நாளைக்கு காலையில திருப்பியும் பரமட்டா
பார்க்கில்,நாளைக்கு பின்னேரம் காபர் பிரிட்ஜ்,நாளன்டைக்கு ....."இப்படி
மனிசி அடிக்கு கொண்டே போனாள்.
" கனகு இந்தா மனசியிட்டயே கேள்ளப்ப" எண்டு தொலை பேசியை கொடுத்துவிட்டேன்.
இவளுக்கு எப்படி விஜய்யின் செடுல் எல்லாம் தெரியும் என்று மில்லியன் டொலர்
கேள்வி மனதில் எழும்பியது.சரி பொம்பிளைகள் தான் விஜய்யை பார்க்க அலையுதுகள்
என்றால் இவன் கனகனும் அலையிறான் பரதேசி என மனதிற்குள் திட்டிப்போட்டு
விட்டிட்டேன்.
மனிசியின் கைதொலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கு என சினுங்கிச்சு நான்
கண்டுகொள்ளவில்லை.கைதொலைபேசி வழங்குனர் காசு கட்ட சொல்லி செய்தி
அனுப்புறான் எண்டு போட்டு பேசாமல் இருந்திட்டேன்.
வீட்டு தொலைபேசி அலறியது .
"கலோ"
" அங்கிள் அண்டி இல்லையோ?"
"வீட்டு வேலையா இருக்கிறா "
"அண்டியிட்ட சொல்லுங்கோ நான் விஜய்யின் சூட்டிங்கில் நிற்கிறன்
என்றும்,அவவின்ட மொபைலுக்கு நான் விஜயின் தோலில் கை போட்டுக் கொண்டு
எடுத்த படம் அனுப்பியிருக்கிறன் எண்டும் சொல்லுங்கோ"
மனிசியிட்ட சொன்னதுதான் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே
விட்டிட்டு மொபைலில் வந்த விஜயின் படத்தை பார்த்து ரசித்தாள்.ஆச்சிக்கும்
தகவல் பரவியது.வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை
திறந்தேன்.ஆச்சியுடன் அவரின் பேத்தி சுருதியும் நின்றாள்.சுருதியும்
கணவனும் கணக்காளராக பணிபுரிகின்றனர். கணவன் விஜயை விடவும் அழகானவன் அவனே
ஒரு கதநாயகன் போலத்தான் இருப்பான்.
"அண்டி விஜய்யின் சூட்டிங்பக்கத்திலதான் நடக்குது வெளிக்கிடுங்கோ போய் பார்ப்போம்,சுமி இப்பதான் எஸ். எம்.எஸ் அனுப்பினவள் "
சுமிதா பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டில் பயில்கின்றாள் அவளை எல்லோரும் செல்லமாக சுமி என அழைப்பார்கள்.
விஜயயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லொரும் வெளிக்கிட்டு
ஒடினார்கள்.காலை 10 மணியளவில் புறப்பட்டவர்கள் மாலை 5 மணியளவில் வீடு
திரும்பினார்கள்.
"அட தம்பி ஒரு தேத்தண்ணி போடடா குடிப்பம் சரியா கலைக்குது"
" ஆச்சி உந்த வயசில உங்களுக்கு உது தேவையா?"
"வேற என்னத்தை கண்டேன்"
"ஏன் அப்புவை கண்டனியள் தானே ...அதுசரி அப்பு விஜய் மாதிரி இருப்பாரோ?"
"சும்மா போடா ....அவர் ஜெமினி மாதிரி இருப்பார் ஆனால் கருப்பு"என்று சொல்லி
வெட்கப்பட்டார்.மனிசி கொண்டு வந்த குளிர்பாணம்,சுடு பாணம் பருகியபடியே
விஜய் புராணம் தொடங்கியது.
சுமி அங்கு எடுத்த படங்களை எல்லொருக்கும் காட்டினாள் ,அத்துடன்
ஒட்டோகிராப்பில் சைன் வாங்கியதாகவும் அப்பொழுது விஜய்யின் கை தனது கையை
தொட்டதாகவும் ஆனபடியால் இன்று தான் கை கழுவப்போரதில்லை என சொல்லி
மகிழ்ந்தால்.
மனுசனுக்கு தெரியாமல் ஹொட்டலுக்கு பூச்செண்டு அனுப்பியதாகவும் .அதை
அனுப்புவதற்கு தான் பட்ட கஸ்டங்களை சொல்லி பூரிப்படைந்தாள் சுருதி.
சிவாஜி கனேசன் பைலட் பிரேமநாத் படசூட்டிங்க்கு வந்த பொழுது சிவாஜியுடன்
எடுத்த படத்தை 83 இனக்கலவரத்தில் சிங்களவன் எரித்துவிட்டான் என்று சொல்லி
ஆச்சி துக்கப்பட்டாள்.
கலியாண கட்டின புதுசில இந்தியாவுக்கு போனபொழுது இந்த மனுசனை சூட்டிங்
பார்க்க கேட்க கூட்டிகொண்டு போகமாட்டேன் எண்டிட்டார் .ஒரு நாள் எதிர்பாராத
விதமாக மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த மனுசன் பிலிம்
போடாமல் கமராவை தட்டியிருக்கு ,என்று என்ட மனுசி தன்னுடைய கவலையை
தெரிவித்தாள்.
இதெல்லாம் கேட்ட எனக்கும் எதாவது சொல்ல வேணும் போல இருந்தது.எனக்கு மயிர்
வெட்டுகிறவர்தான் சிட்னியில விஜய்க்கும் மயிர் வெட்டுகிறார்...கி..கி.....
(க)..... தாநாயகன்
ணவன்
டவுள்
இவர்களே உண்மையான தாயகப்பற்றாளர்கள் . புத்துவின் கதை என்றாலே படமெடுத்த பாம்புதான் . பாராட்டுக்கள் புத்தா .
ReplyDeleteநன்றிகள் கோமகன் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDelete