Monday, May 17, 2010

எனக்கும் பொன்னாடை போர்த்திட்டாங்க

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர்.இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்புகளை தொடர்ந்து செய்து சொந்த பணத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த படைப்புகளை புலம்பெயர் இளைஞர்கள் தங்களது டாக்டர் பட்ட ஆராச்சிக்கு எடுத்து ஆராச்சி செய்ய வேண்டும் இது தான் எனது ஆசை என்று பிரபல எழுத்தாளர் தனது பேச்சை முடித்து கொண்டார்.அடுத்து சிட்னி கவிபேரசு முனியான்டி கவிமழை பொழிவார் என்றவுடன் அரங்கே ஒரே ஆரவாரம்.சுத்த தமிழில்சுய ஆக்கங்களைசுயமாக எழுதிசுய தம்பட்டம் இல்லாமல்சூப்பராக வெளியிடும் சுரேசிற்கு எனது வாழ்த்துக்கள்.என்றவுடன் நித்திரை கொண்டிருந்த எல்லாரும் கையை தட்ட தொடங்கினார்கள் அதில் யாழ்கள வயபோதிபர் ஒருவரும் அடக்கம்.தொடர்ந்து நீங்கள் படைப்புகளை படைக்க வேண்டும் அதற்கு என்னையும் அழைக்க வேண்டும் நான் இங்கு வந்து கவி வடிக்க வேண்டும்.எனக்கு தொடர்ந்து சுரேஷை பற்றி கவி வடிக்க ஆசை இருந்தாலும் நேரமின்மையால் இத்துடன் எனது கவிபுலம்பலை நிறுத்து கொள்கிறேன்.மீண்டும் மேடையில் ஆரவாரம்.அடுத்து புத்தகத்தை வெளியிடுவதிற்காக சிட்னி பிரபல எழுத்தாளர் புத்தனையும் அதை பெற்று கொள்வதிற்கு சிட்னியில் பிரபல தொழிலதிபர்..(கடலை அதிபர்) சுண்டலராஜா அவர்களையும் அழைக்கின்றோம்.சுண்டல ராஜா இப்போது மேடையில் சுரேஷை பற்றி பேசுவார் இந்த எழுத்தாளரின் படைப்புகளுக்கு எனது சொத்து யாவற்றையும் விற்றாலும் ஈடாகாது எண்டு கூறி முடிபதிற்குள் அரங்கில் இருந்து யாரோ "ரீல்" என்று கத்தும் சத்தம் கேட்டது.எழுத்தாளர் சுரேஷ் அவர்களை நன்றியுரை வழங்குமாறு மேடைக்கு அழைக்கின்றோம் என்றவுடன் சுரேஷ் தனது பட்டு வேட்டியின் அகலகரை தெரியுமாறும் சால்வையை படையப்பா ஸ்டைலில் போட்ட வண்ணம் மைக்கிற்கு முன்னால் வந்து மேடையில் கூடி நிற்கும் மக்களை பார்த்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திய சகலருக்கும் நன்றி நன்றி நன்றி..நன்றி.என்ற கூற தொடங்க பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த மனிசி என்னப்பா நித்திரையில் கத்துறியள் விடிந்து போச்சு எழும்பி வேலைக்கு போற அலுவலை பாருங்கோ அதை விட்டிட்டு சும்மா கனவில மிதக்க வேண்டாம் அது சரி இப்ப கனவில் எவள் வந்தவள் அவளுக்கு என்னதிற்கு நன்றி சொன்னீங்கள் என்று சுரேஷின் உயிரை எடுக்காத குறை.அவனோ நித்திரை மயக்கத்தில் படுக்கும் போர்வையை பொன்னாடையாக நினைத்து போர்த்தி கொண்டு ராஜ நடை மலசலகூடத்தை நோக்கி நடந்தான்.

No comments:

Post a Comment