Monday, May 10, 2010

மாப்பிள்ளை கொழும்பாம்

குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்றும் புரியாம முழித்தான்,குகன் முழிப்பதை கண்ட மதன் விசயத்தை சொன்னான் தனக்கு ஜ.சி.எம்.ஏ செய்ய தகுதி காணது ஆகையால் உனது ரிசல்சீடை போட்டொகொப்பி எடுத்து அதில் எனது பெயரை வெட்டி ஒட்டி மீண்டும் போட்டோகொப்பி எடுத்தா அது எனது ரிசல்ட்சீட் மாதிரி இருக்கும் அதை லண்டனிற்கு அனுப்பினா அதை அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள் ஒரு மாதிரி பதிவு பண்ணிபோடலாம்.பிறகு கொழும்பில் இருந்து டியூசனும் படித்து ஓடிட் நிறுவனத்திலும் வேலை பார்த்தால் பிரயோசனமாக இருக்கு ஆகவே தந்து உதவுமாறு நண்பணிடம் கேட்டான்.குகனும் கொடுத்து உதவினான்.
மதன் கொழும்பு சென்று படிக்க தொடங்கி சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாக இரண்டும்,முன்று கடிதம் போட்டிருந்தான் பிறகு தொடர்புகள் அற்று விட்டன குகனும் வெளிநாடு சென்று தனது படிப்பை தொடங்கி தொழில் பார்த்து கொண்டிருந்தான்.
குகனின் தந்தை ஒரு நாள் தொலைபேசியில் தங்கை சுதாவிற்கு நல்ல வரண் ஒன்று வந்திருப்பதாகவும் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து விசாரிக்கும்படி தந்தை கேட்டு கொண்டார்.பெடியன் சின்ன வயதில் இருந்து கொழும்பில் தான் படித்தது என்றும் சொன்னார்.குகன் தந்தை கொடுத்த இலக்கத்தை சுழற்றினான் மறுமுனையில் சிறிலங்கா ஆங்கில உரையாடல் தொடங்கியது.குகன் தன்னை அறிமுகபடுத்தி தன்னுடைய ஊரையும் தற்போது வெளிநாட்டில் வாழ்பதாகவும் தெரிவித்தான்.மதன் தான் ஒருவருடம் படித்த கொழும்பு பாடசாலையை குறிபிட்டு அங்கு தான் கல்வி பயின்றதாகவும் பெற்றோர்கள் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் விலாசி தள்ளினான்.குகனிற்கு இவனது பெயரையும்,குரலையும்,அவனது பெற்றோர்களின் ஊரை கேட்டதும் புரிந்துவிட்டது மதன் தனது நண்பன் தான் என்று ஆனால் மதனிற்கு காட்டிகொள்ளவில்லை.
தங்கை சுதாவிடம் தொடர்பு கொண்டு கிண்டல் பண்ணிணாண் என்ன மாப்பிளை கொழும்பாம் படித்தது,வளர்ந்தது எல்லாம் கொழும்பாம் என்ற கிண்டலிற்கு பதில் தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் சுதா திருமண நாளை எதிரிபார்த்து கனவில் மூழ்கி காத்திருந்தாள்.குகனும் அந்த நாளை எதிரிபார்த்து காத்திருந்தான் மதனை கிண்டல் பண்ண.

No comments:

Post a Comment