Monday, May 10, 2010

பிரசாதம்

சிவாவின் அலுவலகம் அன்றும் வழமை போல பிசியாகவே இருந்தது தங்களிற்குரிய பணியை எல்லோரு ம்செய்து கொண்டிருந்தார்கள் மதிய உணவு இடைவேளை வரும்வரை எல்லோரும் மந்திரிக்கபட்ட மனிதர்கள் போல் கணணி,தொலைபேசி என்று ஒன்று தாவி இன்னொன்றிற்கு பணி புரிந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவு வந்தது கூட சிவாவிற்கு தெரியவில்லை.கம் சிவா வீ வில் கோ வோ லஞ் என்று ஸ்டெல்லா அழைத்ததும் அவனிற்கு மதிய உனவு ஞாபகமே வந்தது உடனே அவன் தனது உணவை மைகோரேவில் வைப்பதிற்கு எடுத்து செல்லும் போது அவனது மணம் நேற்று வைத்த இறால் குழம்பு,இறால் பொறியல் எல்லாம் இருக்கும் ஒரு சின்ன வெட்டு வெட்டலாமென்று நினைத்து கொண்டு மைகோரேவேவில் வைத்த சூடான உணவை திறந்து பார்த்த போது ஒரே ஏமாற்றம் தான் காத்திருந்தது அதில் இருந்ததோ மரகறி சைவ உணவுகள். அவன் சிறிது நேரம் சிந்தித்து இன்று வெள்ளிகிழமையா இல்லையே வியாழகிழமை தானே என்று உறுதியானதுடன் மனைவி சுதாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மரகறி சப்பாடுஅ என்ன விசயம் என்று கேட்ட போது சுதா கொஞ்ச உரத்த குரலில் சிவா இன்று "பாபாவின் நாள்" ஆனபடியால் தான் மரகறி இனிமேல் ஒவ்வொரு வியாழகிழமையும் மரகறி தான் என்றாள்.ஏனப்ப வெள்ளிகிழமை மரகறி தானே சாப்பிடுறனாங்கள் பிறகேன் வியாழகிழமையும்.உங்களுக்கு விருப்பம் என்றால் வெள்ளிகிழமை மச்சம் சாப்பிடுங்கோ ஆனால் வியாழகிழமைகளிள் இனிமேல் பீளீஸ் மரகறி தான் சாப்பிடுங்கோ என்றாள் சரி என்று தொலைபேசியை துண்டித்து கொண்டான் சிவா.
சுதா பணிபுரியும் இடம் பாபாவின் பக்தர்கள் அதிகம் நிறைந்த இடம் அது தான் இப்படி உரத்த குரலில் சொல்லுகிறாள் என்று சிவாவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டது வேலை முடிந்து வீடு வரும் பொழுது மகள் சாய்மீராவிற்கும் தனக்கும் மக்டோனால்சில் பேகர் வாங்கி வந்தவன்,மகளும்.சுதாவும் பஜனை போவதாக ஞாபகம் வரவே தனது பங்கை சாப்பிட்டுவிட்டு மகளின் பங்கை குளிர்சாதனபெட்டியில் வைத்து விட்டு அவன் தொலைகாட்சியில் மூழ்கிவிட்டான்.
"டாட் காய் என்று ஒடி வந்த மகள் தனது கையில் இருந்த பொதியை கொடுத்து கியர் பிரசாதம் சாப்பிடுங்கோ என்று அன்போடு கொடுத்து தோலில் பாய்ந்து கொண்டாள் அவனும் பொங்கல்,சுண்டல்,அவள் ஏதாவது இருக்கும் என்று திறந்து பார்தான் உள்ளே இருந்ததோ ஒரு மரகறி சான்விச் மற்றும் கேக் இரண்டு மூன்று பெயர் தெரியாத இனிப்பு பண்டம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
பிள்ளை எனக்கு பிரசாதம் தந்தபடியா பிள்ளைக்கு "மக்கி" வாங்கி வைத்திருகிறேன் போய் எடுத்து சாப்பிடுங்கோ என்று மகளுக்கு சொல்ல அவளும் ஆர்வத்துடன் எடுத்து சாப்பிட தொடங்க மனைவி சுதா ஓடிவந்து உங்களுக்கு என்ன விசரா இன்றைக்கு வியாழகிழமை டிவோர்டிஸ் ஒருத்தரும் மச்சம் சாப்பிடகூடாது நீங்கள் சாப்பிட்டது போதாது என்று பிள்ளைக்கும் கொடுத்து அவளையும் கெடுத்து போடுங்கோ என்று ஏதோ பயங்கரகுற்றம் செய்தது போல் கத்தினாள்.
சிவாவின் மன உலகம் சிறிது நேரம் சிந்திக்க தொடங்கியது எனது அம்மா நாங்கள் சைவர்கள் வெள்ளிகிழமை எங்களது புனித நாள் மரகறி தான் சாப்பிடவேண்டும்.பொங்கல்.சுண்டல்,அவள் இதுகள் தான் பிரசாதம் என்ற கருத்தை எனக்கு புகட்டினாள் அவாவின் அம்மா இந்த கருத்தை வாவிற்கு புகட்டி இருப்பா ஆனால் இப்போது நாங்கள் பாபா டிவோர்டிஸ், வியாழகிழமை புனித நாள் பாண்,கேக் பெயர் தெரியாத இனிப்பு பண்டங்கள் எல்லாம் பிரசாதம் என்ற கருத்தை எனது மகளின் அம்மா எனது மகளிற்கு புகட்டுகிறாள் என்று நினைத்து கொண்டிருக்கும்போது.டாட் அம்மா நித்திரை கொண்ட பிறகு எடுத்து சாப்பிடுவோம் என்று மெல்ல அவன் காதில் மகள் சாய்மீரா சொல்ல தான் நனவுலகிற்கு திரும்பினான் சிவா ஓம் மீரா ஆனால் அடுத்த வியாழகிழமை "மக்" சாப்பிடகூடாது என்றவனிடம் ஓம் "டாட்" என்ற மீரா அவளது மடியிலேயே தூங்கிவிட்டாள்.

No comments:

Post a Comment