Monday, May 10, 2010

பொருள் உலகம் நிர்ணயிக்கும் காதல்

சிவா நேற்று இரவு தனது மகன் சுரேஷ் சொன்ன வார்த்தையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாம குழம்பி போய் இருந்தான் 24 வயசு தான் சுரேசிற்கு, 22 வயசு தான் சுரேசின் தங்கைச்சியான சுதாவிற்கு.சுரேஷ் புலத்தில் பிறந்து ஏனைய தமிழ் பிள்ளைகளை போல் நன்றாக படித்து பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தது ஒரு அழகான வீடும் வாங்கி விட்டான்.
இவா தான் என்னுடைய கேள் பிரண்ட் இவா தான் கல்யாணம் கட்ட போறேன் என்று தன்னுடைய கேள் பிரண்டை அறிமுகபடுத்தினான் தன் தகப்பனிற்கு,சிவாவும் மிச்சம் நல்லம் என்று புன்முறுவலுடன் கை கொடுத்தான்,சுரேஷின் காதலியை முதலே சிவாவிற்கு அறிமுகமானவள் தான்.ஆனால் சுரேசின் காதலி என்று அல்ல நண்பணின் மகள் என்ற ரீதியில்.
சிவா தனது இளமை பருவத்தை அசைபோடுகிறான்,க.போ.த உயர்தரம் மூன்றாம் தரம் சோதனை எடுபதிற்காக டியூசன் செல்லும் போது தான் அங்கு முதல் தடவையாக மாலதியை கண்டு காதல் கொண்டது அவளும் பயந்து தன் காதலை வெளிபடுத்தினது,பிறகு இருவரும் சைக்கிளிள் செல்வது உயர்தர பரிட்சை முடிவுகள் வெளிவந்ததும் தான் பேராதனைபல்கலைகழகதிற்கு சென்றது மாலதிக்கு யாழ்பல்கலைகழக விஞ்ஞானபீடம் கிடைத்தமை,விடுமுறைகளிள் யாழ்வரும் போது பெற்றோர்களிற்கு தெரியாம மாலதியை சந்திபது ஆனாலும் ஊர் மூலம் அம்மாவிற்கு தெரிய வர அவாவும் தன்னுடைய பங்கிற்கு அப்பரிடம் பத்த வைக்க பிறகு இருவருமாக சேர்ந்து காதலை பிரிக்க கூறிய காரணங்கள்,தம்பி மாலதியை மறந்து போடு அவள் வீட்டில் மூத்த பிள்ளை மற்ற இரண்டு பெட்டைகளையும் அவள் தான் பார்க்க வேண்டும் நீ அவளை கட்டினா உன் தலையில் தான் எல்லா பொறுப்பும் விழும்,அவர்களுடைய அப்பாவும் சாதாரண அரசாங்க உத்தியோகத்தர் தானே அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்காது உனக்கு தம்பியும்,தங்கைச்சியும் இருக்கீனம் அவர்களை படிபித்து கல்யாணம் கட்டி வைக்கிறது எல்லாம் உன் பொறுப்பு.அப்பாவும் நீ படித்து முடிய முன்னம் ஓய்வு பெறவேண்டும் என்று ஒரு அழுகையுன் தன் எதிர்பார்புகளை சிவாவின் தாயார் கூற,பெற்றோரின் விருப்புக்கு ஏற்ப காதலை துறந்து படித்து பட்டம் பெற்று பொறியளாராக இலண்டன் வந்து பின் தங்கைக்கு இலண்டண் மாப்பிளை கட்டி வைத்தது,தம்பியை இலண்டணிற்கு வரவழைத்து படித்தமை ,பின் சிவா நாடு சென்று இலண்டன் மாப்பிளை என்று பெற்றோர் நிச்சயித்த பெண்ணை தனது 35 வயசில் சிவா திருமணம் செய்து இலண்டண் சென்று குழந்தை செல்வங்கள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது,அவுஸ்ரெலியா நல்லதாம் குழந்தைகளின் எதிர்காலம் நல்லதாம் அத்துடன் காலநிலையும் கிட்டதட்ட எங்களுடைய ஊர் மாதிரி என்று மனைவியின் உறவினர்கள் கூறியதிற்கு இணங்க அவுஸ்ரெலியாவில் குடி பெயர்ந்து சகல பொருளாதார வசதிகளுடன் பிள்ளைகளும் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த் இவ்வேளையில்.......
"டாட் இவா என்னுடைய கேள்பிரண்ட் இவாவை நான் திருமணம் செய்ய போறேன் என்று சுரேஷ் "வெளிபடையா சிவாவிடம் சொல்லி விட்டு போயிட்டான் ஆனா அவரோ தனது பழைய நினைவில் ஆழ்ந்து போய் மனைவி கூப்பிட திடுகிட்டு எழும்பி,அந்த நாளிள எனக்கு பொருளாதார சூழ்நிலையால் மாலதியை கைவிட நேர்ந்தது ஆனா இன்று நம்ம பெடியன் பொருளாதாரத்தில் நல்லா இருகிறான்,அவனிற்கு வேற என்ன கவலை இருகிறது என்று வாயிற்குள் முணுமுணுத்தபடி மனைவியிடம் செல்கிறார்...பொருள் உலகம் தான் காதலை வெற்றியடைய செய்யும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்....

No comments:

Post a Comment