Saturday, May 15, 2010

ஞாபகம் வருகுதோ?

மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு.அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது.சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு அமர்ந்து கொண்டான் தெரியாதவர்களை தெரிந்தவர்கள் சுரேஷ்ற்கு அறிமுகபடுத்தி வைத்தார்கள் அவனும் பதிலிற்கு "கலோ" சொல்லிவிட்டு தனது வழமையான சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்."உம்மென்று" முகத்தை வைத்து கொண்டிருக்காமல் ஆட்களோட கதையுங்கோ என்று மனிசி திட்ட நிதானதிற்கு வந்தவன் பக்கத்து மேசையில் இருப்பவர்களை ஒரு நோட்டமிட்டான்.அரசியல் கதைக்க கூடிய ஆட்களை காணவில்லை.எல்லாரும் தங்களது பிள்ளைகளின் படிப்பை பற்றி தான் அதிகம் கதைத்து கொண்டிருந்தார்கள்.யாராவது விளையாட்டை பற்றி கதைப்பீனமோ என்று திரும்பி பார்த்தால் அதுவும் இல்லை.எங்கன்ட ஆட்கள் உதைபந்தாட்டதிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தானே கிரிகேட்டிற்கு தான் எங்கன்ட சனம் முக்கியத்துவம் கொடுக்கும் ஏன் என்றால் அது "டீசன்ட் போயிஸ்" விளையாடும் விளையாட்டு அதனால் உலக கோப்பை உதைபந்தாட்டதிலும் பார்க்க உள்ளூர் கிரிகேட் செய்தி பற்றி தான் சனம் அலசும் என்று நினைத்து போட்டு இருக்கையில்.சுரேசின் முதுகை தட்டியபடியே கஸ்டம் கந்தர் வந்து அவனுக்கு அருகாமையில் அமர்ந்தார் அறிமுகமான "கஸ்டம்ஸ் கந்தரை" கண்டவுடன் சுரேசிற்கு ஒரே மகிழ்ச்சி காரணம் கந்தர் அரசியலில் இருந்து அடுபங்கரை வரை செய்திகளை ஒரு அலசல் அலசுவார்கள்..இலங்கையில் சுங்க இலகாவில் வேலை பார்த்து இளைப்பாறியவுடன் அவுஸ்ரெலியா பிரஜா உரிமை எடுத்து மூத்த பிரஜையாக இருக்கிறார்.வானொலி,பத்திரிகைகளிள் வரும் செய்திகளை அலசி ஆராய்வது தான் அவரின்ட தற்போதைய வேலை.சுரேஷ் கந்தரை வம்பிழுக்க வேண்டும் என்று இன்னொரு மேசையில் இருந்த வெள்ளையர்கள்,ஆபிரிக்கா இனதவர்கள் மற்றும் சீனர்கள் என்று பல இன மக்களை காட்டி உவையள் எல்லாம் இருக்கீனம் கவனித்தீங்களோ என்று கந்தரை உசுபேற்றிவிட்டான்.கந்தர் கொஞ்சம் சாதி தடிப்பு பிடித்த ஆள் அது தான் அவன் இப்படி உசுபேற்றினவன் தம்பி சுரேஷ் இப்ப எங்களுடைய ஆட்கள் வெளிநாட்டில் வாழும் போது பல்கலாச்சார மக்களுடன் பழக வேண்டி இருக்குது அத்துடன் அவர்களுடன் வேலை செய்யும் நண்பர்கள் இவர்களுக்கு அழைப்பு கொடுத்திருப்பார்கள் அது தான் அவர்கள் வந்திருப்பார்கள்.இது எல்லாம் நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள கூடாது."இட் இஸ் நொட் அ பிக் டீல்".அண்ணா ஊரில என்னுடைய அக்காவின் கல்யாணதிற்கு என்னுடைய நண்பன் ஒருத்தருக்கு அழைப்பிதழ் கொடுக்க போகக்க நீங்கள் தடுத்தது ஞாபகம் வருகிறதோ.ஒரே ஊரிலையே ஒரே நிறத்தில ஒரே மொழியில பேசுகிற ஒரு நண்பனிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது நீங்கள் என்ற அம்மாவிட என்ன சொல்லி தடுத்தனியள் என்று ஞாபகம் வருதோ?நண்பனிற்கு அழைபிதழ் கொடுத்து அவன் கல்யாணதிற்கு வந்தால் நாங்களும் அந்த சாதி என்று சனம் நினைக்கும்,அது போக நீ அவனை கூப்பிட பிறகு அவன் உன்னை கூப்பிட பிறகு நீ அங்கு போய் சாப்பிட வேண்டி வரும் ஆனபடியால் பேசாமல் இரு என்று எனக்கு ஏசினது ஞாபகம் வருதோ.அங்கு "பிக் டீலாக" இருந்த விடயம் இங்கே எப்படி "நொட் அ பிக் டீலாக" இருக்கிறது அங்கு பல ஒற்றுமைகள் இருந்தும் சாதியால் வேற்றுமை அழைப்பதழ் கொடுப்பதை தடுத்தியள்,இங்க பல வேற்றுமைகள் இருந்தும் (நிறம்,மொழி,கலாச்சாரம்,தேசம்) தராதரம் (வசதி,வாய்ப்பு) ஒற்றுமை காட்டுறியள் என்ற தாமதம் கந்தர் அந்த இடத்தில இருந்து மெல்ல நகர தொடங்கிட்டார்.

No comments:

Post a Comment