Saturday, May 15, 2010

பஜனை ஆண்ரி

மறக்காமல் வெள்ளிகிழமை பின்னேரம் ஏழு மணி போல் ஒருக்கா வீட்ட வாரும் தம்பி என்று மணி அண்ரி சொன்னவுடன் சுரேஷ் ஏன் ஏதாவது விசேசமா அண்ரி என்றான்..அப்படி ஒன்றுமில்லை நீ வா,காரணத்தை சொன்னா தேவை இல்லாம அலட்டுவாய் ஆனபடியா நீ வெள்ளிகிழமை மனிசியையும் பிள்ளைகளையும் கூட்டி கொண்டு வா.மணி அண்ரி சுரேஷின் அம்மாவின் தோழி.இப்பொழுது சிட்னியில் மகள் சும்தியுடன் வாழ்ந்து வருகிறா கணவன் மூன்று வருடங்களிற்கு முன் சிவபதம் அடைந்து விட்டார்.ஹரிதாஸ் சுவாமிகள் என்றால் மணி ஆண்ரிக்கு உயிர் ஊரிலே பஜனைகளை பூசைகளை என்று வைத்து தனது பக்தியை ஊர்மக்களுக்கு வெளிபடுத்து கொண்டிருப்பா ஊரில் சிலர் மணி ஆண்ரியை பஜனை ஆண்ரி என்று நக்கலாகவும் கூறுவதுண்டு.அதில் சுரேஷும் ஒருவன்.ஹரிதாஸ் சுவாமிகள் பற்றி கதைக்க வெளிகிட்டால் ஆண்ரியில் கண்களிள் இருந்து ஆனந்தகண்ணீர் வடித்து தான் தனது ஹரிதாஸ் புராணத்தை முடிப்பார்.இந்தியாவிற்கு சென்று அவரை தரிசித்து விட்டு ஊரில் வந்து மணி ஆண்ரி பட்டபாடு சுரேசிற்கு இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து கிடக்கிறது.சுவாமிக்கு அருகில் நின்று ஒரு படம் எடுத்து போட்டு அதை ஊரில் உள்ள சகலரிடமும் காட்டி பெருமைபட்டு கொண்டு திரிந்தவர் தான் இந்த மணி ஆண்ரி.மணி ஆண்ரி கூப்பிட்டபடியா ஏதாவது பஜனையா தான் இருக்கு என்று மனிசையும் கூட்டி கொண்டு வெள்ளி மாலை அங்கு சென்றான்.அவன் நினைத்தது போல் அது ஒரு பஜனை ஒன்று கூடல் தான்.சுமதி தான் இவர்களை வரவேற்றாள் மணி ஆண்ரி பக்தி பரவசத்தில் இருந்தபடி அவ்வளவாக பேசவில்லை அன்று.ஆனால் மகள் சுமதி தான் வந்தவர்களுடன் உரையாடி கொண்டிருந்தா.போன சனி கிழமை ஹரிகரன் புரோகிராம் சூப்பரப்பா.நான் நல்லா எஞ்ஜோய் பண்ணி பார்த்தனான் எண்ட மூத்தவள் சொல்லி போட்டாள் ஒவ்வொரு முறையும் கரிகரன் புரொகிரம் நடக்கும் போதும் தான் போக வேண்டும் என்று.அவளுக்கு ஹரிகரனின் பாடல்களை கேட்பது என்றால் மிகவும் விருப்பம்.நான் இன்டவல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்து வந்தவுடன் நேரடியாக ஹரிகரனுடன் போய் கதைத்தனான் நல்லா கதைக்கிறார் "சோ சுவீடப்பா" நானும் என்ற மனிசரும் அவருடன் நின்று படம் எடுத்தனாங்கள் இருங்கோ கொண்டு வந்து காட்டுறன் என்று ஓடி போய் தனது பட அல்பத்தை கொண்டு வந்து இந்தியா பிரபலங்களுடன் நின்று எடுத்த படங்களை காட்டி புளுகி கொண்டிருந்தார்.மணி ஆண்ரி பஜனை தொடங்க போது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னவுடன் அமைதியாக இருந்து பஜனையை கேட்டனர்.வீடு செல்லும் போது சுரேஷின் மனைவி கீதா கரிகரனின் புரோகிராம் போவோம் என்று எத்தனை தரம் கேட்டனான் நீங்கள் தான் பிடிவாதம் பிடித்து வரமாட்டன் என்றபடியால் நானும் போகவில்லை.சுமதியை பாருங்கோ புருசனோட போய் நின்று படமும் எடுத்திருக்கா நீங்களும் இருக்கிறீங்களே புரோகிராமுக்கே போகமாட்டீங்க இந்த இலட்சனத்தில் படம் எடுக்கிறதை பத்தி உங்களுடன் கதைக்கிறன்.அது சரி என்ற தலைவிதி அப்படி என்றால் யாரை நொந்து என்ன பயன் என்று ஒரு ஒப்பாரியை வைத்து விட்டாள்.அமைதியாக கேட்ட சுரேஷ்.இங்க பாரும் உந்த கதாநாயகனுடன் படம் எடுக்கிறது பிறகு அதை மற்ற ஆட்களுக்கு காட்டி புளுகிறது இது எல்லாம் ஒரு சாதி வியாதியப்பா,சுமதியின் அம்மா ஹரிதாஸ் நாயகன் என்று திரிந்தா இப்ப சுமதி ஹரிகரன் தான் நாயகன் என்று திரிகிறா போதாகுறைக்கு தண்ட மகளையும் ஹரிகரன் விசிறி என்று புலம்புது என்று சொன்னது தான் தாமதம்,எனக்கு உங்களுடைய உந்த விளக்கங்களும்,வியாக்கியானங்���ளும் வேண்டாம் அடுத்த முறை ஹரிகரன் வந்தால் நான் போறது என்று முடிவெடுத்திட்டன் என்றவள் பதில் எதுவும் எதிர்பார்காமல் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

No comments:

Post a Comment