Monday, May 10, 2010

கனகரின் கதறல்

அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ.
நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா?
கட்டாயம் வருவேன் என்று கனகர் உறுதிமொழி அளித்தார்.கலோ கந்தர் போனை வைத்து போடாதையும் உம்மோட கொஞ்சம் கதைக்க வேண்டும் இல்ல சும்மா தான் கேட்கிறன் ஒவ்வொரு கிழமையும் எங்களுடைய தமிழர்கள் ஏதாவது கலை நிகழ்ச்சி வைக்கிறார்கள் ஆனால் எல்லாம் உக்கிரேனியன்,ரஷ்யன்,கங்கேரியன் என்று ஒவ்வொரு தேசிய இனங்களின் மண்டபத்தில் தானே வைக்கிறோம்.நாங்கள் எங்களுக்கு என்று ஒரு மண்டபத்தை கட்டி ஈழ தமிழர் மண்டபம் என்று பெயர் வைக்கலாம் தானே என்றார் மறுமுனையில் கந்தர் என்ன இரண்டு,மூன்று கிளாஸ் போயிட்டுதோ அது தான் செய்ய முடியாத காரியத்தை பற்றி கதைக்கிறீர் ஒரு மண்டபம் கட்டுவது என்றால் எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமோ அது போக பிறகு நிர்வகிப்பதிற்கு எவ்வளவு செலவும் வரும் இதற்கு எல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.
கனகரும் பதிலிற்கு எங்களுடைய ஆட்கள் கோயில்கள் பல கட்டீனம் தானே அதுக்கும் சரியான பணம் செலவும் ஆகும் தானே கோயில் கட்டுவதன் மூலம் நாங்கள் இந்து,இந்தியன் என்று தானே எங்களை முத்திரை குத்தி காட்டுகிறோம் ஏன் ஒரு தமிழன் பெயரில் தமிழ் மண்டபம் கட்ட கூடாது என்று கேட்க கந்தருக்கு கடுபாகி,எங்களுடைய மூதாதையோர் என்ன சொல்லி இருக்கீனம்.கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று தானே பிறகென்ன கேள்வி அது போக கோயில் தான் நல்ல வருமானம் வரும் இப்போ உதாரணதிற்கு உம்மிடம் தமிழர் மண்டபம் கட்டுவதிற்கு என்று பணம் கேட்டு நாலு தமிழர்கள் வந்தால் நீர் என்ன சொல்லுவீர்,இப்ப வசதி இல்லை வீட்டு கடன்,கார் கடன்,கிரடிட் கார்ட் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று புலம்பி தள்ளுவீர் அடுத்த முறை வாங்கோ தாரேன் என்று அடுத்த முறை வந்தாலும் இதை தான் சொல்லுவீர்.
ஆனால் கோயிலிற்கு காசு என்று வந்தால் சத்தம் போடாமல் கொடுத்து போடுவீர் தானே நீரே தமிழ் மண்டபம் கட்டுறது என்றா பணம் கொடுக்க மாட்டீர் பிறகு வந்திட்டீர் பாடம் புகட்ட என்று கந்தர் தொலைபேசியை துண்டித்து கொண்டார் கனகருக்கோ ஏமாற்றம் தான் நியாயமான கருத்தை சொன்னாலும் தண்ணியில் சொன்ன கருத்து என்று கனகர் கண்டுக்காம விட்டதை நினைத்து மனகவலையில் குடிகாரன் பேச்சு விடிந்தா போச்சு என்று இன்னும் உற்சாக பானத்துடன் தனது உறவை பலமாக வளர்த்து கொண்டான்.

No comments:

Post a Comment