Saturday, May 15, 2010

செருப்பு

அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள்.சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தார்கள் அவர்கள் உணவருந்திய பின் இவர்களுக்கு வழங்கபடுமாம் என்று அந்த கட்டிடடத்தி பணி புரியும் ஒரு உயர்குடிமகன் வந்து சொல்லி கொண்டே இருந்தான். அவர்களின் சாப்பாடு முடிந்தவுடன் கதவை திறந்தது தான் தாமதம் வெளியே நின்ற மக்கள் உள்ளே ஒரே ஓட்டமாக ஓடினார்கள் சுரேஷியும் ஓடி போய் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான் இவர்களுக்கும் உணவு பரிமாறபட்டது வெள்ளைகார சாமியார் எல்லோருக்கும் உணவுகளை பரிமாறி கொண்டு உசாராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.சுரேஷ் சாப்பாடு முடிந்தவுடன் வீட்டை போய் பெற்றோருடன் நடந்தவற்றை சொன்னான் உனக்கு இங்க சமைத்து வைத்திருக்கிறன் எதற்கு அங்க போய் சாப்பிடனி என்று அதட்டலாகவே அம்மா கேட்டா.ஏழைகள் உணவருந்தும் இடத்தில் நீ ஏன் போய் சாப்பிடனி என்று ஒரு விரிவுரையே நடத்தி விட்டா சும்மா தான் பார்க்க போனான் என்று சொல்லி அவன் சமாளித்து கொண்டான்.நாட்கள் செல்ல அங்க பணிபுரியும் ஜயருடன் பழக தொடங்கினார் சுரேஷ் ஜயரும் அந்த ஆச்சிரமம் மற்றும் வெள்ளைகார சாமியாரின் சரித்திரம் எல்லாம் சொன்னார்.வெள்ளைகார சாமியார் இளம் வயதில் எங்கன்ட கருத்த சாமியார் ஒருவரை சந்திக்க போயிருக்கிறார் அந்த எங்கன்ட கருத்த சாமியார் சொன்னவராம் "எந்த மிதிவடி கட்டையை கொண்டு போய் பூசை செய் என்று"இதை தேவ வாக்காக எடுத்து கொண்டு இந்த வெள்ளைகார சாமியார் மிதிவடி கட்டையை (செருப்பு) வெள்ளியிள் செய்து ஒரு ஆச்சிரம் அமைத்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமைகளிள் அன்னதானம் வழங்கி கொண்டு தன்னுடைய குரு பக்தியை உலகிற்கு காட்டி கொண்டிருந்தார்.செருப்பு யாராவது கும்பிடுவீனமா அம்மா? என்று தனது சந்தேகத்தை தாயிடம் கேட்டான் தாயும் உணர்ச்சிவசபட்டு அப்படி சொல்ல கூடாது இராமரின் பாதரட்சையை அவனுடையை தம்பி அரியணையில் வைத்து அரசாச்சி செய்தவன் என்று விளக்கம் கொடுத்தார்.சுரேஷிற்கு அன்றிலிந்து மிதிவடிகட்டை,பாதரட்சை என்றால் ஏதோ உயர்த்தியான விடயம் என்று எண்ண தொடங்கிவிட்டான்.காலங்கள் ஓடின அவனும் உயர்கல்விக்காக வெளிமாகாணம் சென்று படிப்பை தொடரும் பொழுது தனது பாடசாலை மாணவியை பார்த்து கண்ணால் பேச அவள் பதிலிற்கு "செருப்பு பிஞ்சிடும்" என்று வாயால் பதில் சொன்னாள் செருப்பை இதற்கும் பயன்படுத்தாலம் என்று மனதில் நினைத்து கொண்டால்.காதலை வெறுத்து அவள் செருப்பு பிஞ்சிடும் என்று சொல்லவில்லை ஏற்கனவே தனது காதலை இன்னொருவருக்கு பறிகொடுத்ததால் காதலின் புனிதத்தை பாதுகாக்க தான் செருப்பை பயன்படுத்தி இருந்தாள் என்று பிறகு தான் சுரேஷ் புரிந்து கொண்டான்.பிரபல சினிமா நட்சத்திரத்தின் செருப்பு ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கபட்டதாக பத்திரிகை செய்திகளை பார்த்த சுரேசிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.ஒருவன் பக்தியால் மிதிவடி கட்டையை (செருப்பை) தலை மேல் வைத்து பூசை செய்கிறான்,இன்னொருத்தன் பாசத்தால் செருப்பை அரியணையில் ஏற்றுகிறான்,இன்னொருத்தி காதல் புனிதத்தை பாதுகாக்க செருப்பை தூக்கிறாள் மற்றவனோ ஏலத்தில் பணத்தை கொடுத்து செருப்பை வாங்கிறான்.என்று யோசித்து கொண்டே நடந்தவன் திடிரேன அவனது செருப்பை பார்த்த போது தான் விளங்கியது அது தன் செருப்பு அல்ல கோவிலில் யாரின்டையோ செருப்பை மாறி போட்ட விசயம்.

No comments:

Post a Comment