கனகரிடம் கிளாசை கொடுத்து
" அண்ணே எடுங்கோவன் என்றேன்",
"லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்"
,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன்
ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார்
"ஹலோ "
"லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்"
போனை கையால் பொத்திக்கொண்டு
"லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் .
அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன்.
"நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட சொல்லு கூப்பிடசொல்லி"
"சுதா!! மாமியை வரச்சொல்லி சொல்லும் மாமா தேடுகிறார்"
"மாமா தேடவில்லை உங்களுக்கு தண்ணியடிக்க பாட்னர் அதுக்கு எங்கன்ட மாமாவை பயன்படுத்த்றீயள் என்ன" என செல்லமா அதட்டியபடி மாமாவின் கையிலிருந்த போனை வாங்கி
"ஹலோ மாமி புட்டு அவிக்கிறேன் வீட்டை வாங்கோ நான் உங்களை கூப்பிட இருந்தனான் அதுக்குள் மாமா கொல் எடுத்திட்டார் ,வெளிகிடுங்கோ நான் வந்து பிக்கப் பண்ணுகிறேன்"
மாமி வாரவாம் என்று சொல்லியபடி மாமாவிடம் போனை கொடுத்து விட்டு ...
"மாமி வாரா இரண்டு பேரும் பார்த்து பாவியுங்கோ" என்று கூறியபடி காரடிக்கு சென்றாள் சுதா.
"உவள் வந்து கிளாஸ் கணக்கு கேட்க முதல் இரண்டு பெக் அடிச்சு போட வேண்டும்"
போதலை திறந்து தனது இஸ்டத்திற்கு அருந்த தொடங்கினார்.
"டேய் நீ உந்த பன்டமிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்"
என்னை டேய் என்று அழைக்க தொடங்கிற்றார் என்றால் மாமா அடுத்து உலக நடப்பு தான் கதைப்பார் அதுதான் அவருடைய வழமை.
"உவன் அமெரிக்கன் தான் உந்த வைரஸை பரப்பி போட்டு இப்ப சீனாக்காரனை பிழை சொல்லுறான்"
"
ஏன் அப்படி சொல்லுறீயள்"
வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டவுடன்
"வந்திட்டாளவையள் போல, இந்த கிளாஸுக்குள் கொஞ்சத்தை ஊற்றிபோட்டு போத்தலை ஆங்கால கொண்டுபோய் வை"
அவர் சொன்னமாதிரி செய்து போட்டு ..
""அண்ணே அப்ப நீங்கள் சொல்லுறீயள் அமெரிக்கன் தான் செய்திருக்கிறான் எண்டு ,நான் நினைக்கிறேன் உவங்கள் சப்பட்டைகள்தான் செய்திருப்பாங்கள்"
"இஞ்ச உந்த பட்ட பெயர் சொல்லி ஆட்களை விழிக்கிறதை நிறுத்து உது எல்லாம முதலாளித்துவ சிந்தனையுள்ள உன்னை போல ஆட்களுக்கு கை வந்த கலை"
"சரி அண்ணே மன்னியுங்கோ, ஏன் அமெரிக்கன் தன்ட மக்களை கொல்லப்போறான்"
"அது முதலாளித்துவ சிந்தனை தான் ,சீனா வல்லரசாக மாறப்போகுது என்ற பயத்தில தன்னட மக்களை கொல்கின்றான் அத்தோட உந்த கொரானாவுக்கு வக்சின் என்று மருந்தை கண்டுபிடிச்சு நல்ல வியாபாரம் செய்யபோறாங்கள்..."
"அண்ணே எதற்கு எடுத்தாலும் சும்மா முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டாமல் உங்கன்ட மாவோ சிந்தனையையும் மீள்பரிசீலனை செய்யுங்கோ"
"டேய், டேய் நீ ஒரு முதலாளித்துவ அருவருடி உன்னோட எங்கன்ட புனித தாலிவர் மாவோவின் சிந்தனையை பற்றி கதைக்கிறது வேஸ்ட்"
"சரி அண்ணே ,உங்களுக்கு தெரியுமோ ஜெ.வி.பி காலத்தில ஒரு கதை அடிபட்டது ஜெ.வி.பி ஆட்சி அமைத்தால் வயோதிபர்களை கொலை செய்துவிடுவார்கள் எண்டும் அதற்கு ரோகணா விஜயவீர விடுதலையான பின்பு ...,எனது பெற்றோர்களை நான் கொல்வேனா என மறுப்பு தெரிவித்ததும்"
"இப்ப ஏன் அதை இதுக்குள்ள கொண்டுவாராய்...."
"இல்லை இப்ப கொரானாவில் இறந்தவர்களில் 90% வயோதிபர்கள் தானே மாவோ சிந்தனையின் ஒரு வடிவமோ"
"டேய் டேய்"
மாமாவின் குரல் கொஞ்சம் உயர தொடங்கியது
"என்ன சத்தம் அங்க ,சாப்பாடு ரெடி வாங்கோ இரண்டு பேரும்"
மாமியின் குரல் கேட்டவுடன் மனுசன் பெட்டி பாம்பாகிவிட்டார்.
இவரின்ட சத்தம் வீட்டுக்குள்ள தான் போல எண்ணிகொண்டிருக்கும் பொழுது
"இஞ்சயப்பா மாமாவையும் கூட்டி க்கொண்டு வாங்கோ சாப்பிட இனி காணும்"
உடனே கையிலிருந்த கிளாசை மேசையில் வைத்து விட்டு நானும் மாமாவை பின் தொடர்ந்தேன்.
மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.மாமி சாப்பிடுவதற்காக கையை கழுவிக்கொண்டிருந்தார்.
"ஹலோ மாமி" என்றேன்
எனது மனைவி என்னை பார்த்து முழுசினார்,வழமையாக மாமியை அக்கா என அழைப்பேன் ,என்னை விடமூன்று வயது தான் அதிகம் ..மனைவிக்கு தெரியும் நான் உறவு சொல்லி அழைக்க தொடங்கி விட்டேன் என்றால்
பாவனையின் எல்லைக்கு வந்திட்டார் என நினைத்து
கிளாஸ் போத்தல் எல்லாம் மாயமாக மறைய தொடங்கிவிடும் அதுவும் அவர்களது உறவுகள் இருந்தார்கள் என்றால் எனது பாவனைக்கு பல வித தடைகள் போடப்படும்.
"
"ஹலோ மாமி என்ன முதுகில புத்தர் இருக்கிறார் ,கவனம் சிறிலங்காவுக்கு போட்டுக்கொண்டு போய்விடாதையுங்கோ "
"ஒன்லைனில ஒடர் கொடுத்து இந்தியாவிலிருந்து எடுப்பிச்சனான் அவன்கள் இப்படி தைச்சு போட்டாங்கள்"
"ஏன்டா சிறிலங்காவுக்கு போட்டுகொண்டு போக ஏலாது புத்தர் அவங்கன்ட கடவுள்தானே" என மாமா கேட்டார்
"கடவுளை கோவிலில்தான் வைக்கவேணுமாம் சீலையிலயும் ,பிளவுஸிலயும் வைக்கூடாதாம்"
"இஞ்சயப்பா மாமி உடுத்திறக்கிற சீலையும் ஒன்லைனில் தான் ஒர்டர் பண்ணி எடுத்தவ வடிவா இருக்கு என்ன?"
"நீரும் ஒவ்வோரு மாதமும் எடுக்கிறனீர்தானே"
"ஒமப்பா ஆனால் மாமியின்ட கடையில் விதம்விதமா கன செலக்சன் இருக்கு"
"நாளைக்கு ஒடர் பண்ணி எடும்"
"ஏன் நான் நாளைக்கு மட்டும் வெயிட் பண்ண வேணும் இப்பவே ஒன்லைனில போக வேண்டியான் மாமியும் நிற்கின்றா
சூஸ் பண்ண இஸியாக இருக்கும்"
மேசையில் சாப்பிட்டபடியே கதைத்துகொண்டிருந்தோம் .
"என்ன மாமி இன்றைக்கு ஸ்டைலா எங்கன்ட வீட்டை வெளிகிட்டுக்கொண்டுவந்திருக்கிறீயள்"
"இன்றைக்கு பேத்தியின்ட பேர்த்டெ "
"நீங்கள் போகவில்லையா ? இங்க நிற்கீறியள்"
"பின்னேரம் ஸ்கைப்பில கெக் வெட்டினவையள் அதுக்கு வெளிக்கிட்டனான் அப்படியே இரவு வெஸ்புக்கில் முருகனையும் பார்ப்போம் என்று தான் இருந்தனான் அதுக்குள்ள இவர் இங்க கூப்பிட்டு போட்டார் இங்க இருந்து முருகனை பார்ப்போம்"
"வெஸ்புக்கில் முருகனை பார்க்க இவ்வளவு அலங்காரம் தேவையே மாமி"
"நீங்கள் ஏன் மாமியை போட்டு அறுக்கிறீயள்"
"சீ சீ நான் அறுக்கவில்லை சும்மா கேட்டனான்"
"கண்ணா முருகனை வெஸ்புக்கில் பார்க்க வெளிக்கிட தேவையில்லை ஆனால் முருகனுக்கு ஸூமில் பஜனை பாடவேணும் அது தான் வெளிகிட்ட படியே நிற்கின்றேன்"
"ஏன் நீ எனக்கு முதலே சொல்லவில்லை இரு நானும் வெஸ்டியை சுற்றி போட்டு வாரன் ,கண்ணா வெஸ்டி ஒன்று எடுத்து தாடா" மாமா உற்சாக வெளிக்கிட ஆயத்தமானார்,மாமி தன்னுடைய காளிமுகத்தை காட்ட தொடங்கிவிட்டார்.
"நான் சொல்லவில்லையோ? நேற்று காலம்பிற கத்திகத்தி சொன்னான் பஜனை ஸூமில் செய்யப்போகினம் என்று நான் சொல்லுறதை கேட்கிறதில்லை பிறகு சொல்லுறது நான் சொல்லவில்லை என்று இந்த மனுசனுக்கு இதே வேலயா போச்சு"
" கண்ணா நீ வெஸ்டியை எடு"
"
தண்ணியை அடிச்சு போட்டு சாமிக்கு பஜனை பாடப்போறீங்களோ?"
"தண்ணி அடிச்சு போட்டு கோவிலுக்கு தான் போககூடாது சூமில்
பஜனை பாடலாம் தானே என்ன கண்ணா?"
"கண்ணா வேஸ்டியை கொடுக்காதே வயசு போக போக உந்த மனுசன் சொல்வழி கேட்கிதில்லை"
"இரண்டும் பேரும் உங்கன்ட செல்ல சண்டக்குள்ள என்னை இழுக்காதையுங்கோ"
"நான் பஜனை பாடஇல்லை நீங்களே பாடுங்கோ"
என்று கதிரையை விட்டு வெகமாக எழுந்து போய் கொண்டுவந்திருந்த பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்து
"இந்தாங்கோ முருகனை காட்டும் பொழுது இதை கொம்பூயுட்டருக்கு முன்னால வையுங்கோ நான் வீட்டை போறன்"
"லட்சு ,லட்சு கோபபடாதை நீ பஜனை பாடு நான் சும்மா சொன்னான்"
ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்த மாமி மீண்டும் சுதாகரித்துக் கொண்டு
"கோவில்காரர் சூம் லிங் அனுப்பியிருக்கினமா என்று பார்"
"இருங்கோ பார்த்து சொல்லுறன் "
பார்த்துவிட்டு சொன்னாள் அனுப்பியிருக்கினம் இன்னும் பத்து நிமிசத்தில தொடங்கப்போயினம்.
"அடுத்த வெள்ளிக்கிழமை நீங்கள் பஜனை படுங்கோ நான் கோவில்காரரிடம் கதைச்சு வைக்கிறன் ஆனால் இவன் கண்ணனின்டவீட்டை வந்து கூத்தடிக்கிறதில்லை"
சொல்லியபடியே மாமியும்,சுதாவும் கொம்பியூட்டர் மேசைக்கு போனார்கள்.
"
என்ன மாமா மாமி இப்படிசொல்லுறா"
"இந்த முப்பது வருசத்தில உப்படி எத்தனையை கண்டிட்டன்"
"அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை
பற்றி என்ன நினைக்கிறீயள்"
"நான் கடவுளோட சேட்டை விடமாட்டேன்,நீ என்ன
நினைக்கிறாய்"
"இன்லைனில் கடவுளை வைக்க வேண்டிய சனம் ஒன்லைனில்
வைச்சு கூத்தடிக்குதுகள்"
"அதேன்ன இன்லைன்"
"உள்ளக் கமலத்தில்"
இலங்கை அரசியலில் பாவம் புத்தர் சட்டை சோலை எல்லாம் இன்னும் கைதியாகின்றனர்! சப்பட்டைகள் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த வைரஸ் தோற்றிவித்திருப்பார்கள் போல!
ReplyDeleteஒன்லைன் இப்ப பெஷனாகிவிட்டது!அடுத்த வேட்டி ஓடரில் நல்ல கொர்னா டிசைன் தேடிப்பாருங்கள்!ஹீ
ReplyDeleteரோஹன வீஜயவீரவின் வாரிசும் பட்டதாரியாகிவிட்டாராம்/[[
ReplyDeleteஇயற்கை இடும் கட்டளைகள் மனிதரை எங்கே எல்லாம் கொண்டு செல்லுமோ...
ReplyDeleteவினோதமான மனிதக் கூட்டமாக ஆகிறோம் நாம்...
சமகால நடப்பை அப்படி காட்டியுள்ளீர்கள்
ReplyDeleteசிறப்பான விளக்கம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete