Friday, February 19, 2021

மாஸ்க் எடுத்தாச்சே

 நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும்என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி  கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன்.

"மாஸ்க் எடுத்தாச்சே"

அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி

"போட்டாச்சு"  என்றேன்

"வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ"

ரொம்ப முக்கியம் என்ற படி

"சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்"

"என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே"

"முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்"

"என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர்  மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்"

"பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும்  தெரியாது"

"வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை"

"கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்"

"அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே"

"உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது"

கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்ததுவழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் .

கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின்  வாசல்படியில் வரிசையாக‌ மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு

"முபத்தாறோ,முப்பதேழே என்றேன் "

"35 நல்ல கூலா இருக்கிறீயள் போல "

"முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே"

மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி  முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் 

"கோவிலுக்குள்ள வந்தாலும்உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?"

"டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர்  எல்லாம் போட்டு  கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?"

"எல்லாம் உன் மீது கொண்ட அன்பு "

அன்போவார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்"

முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்"

பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்"

முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே  கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே?

எப்ப பிளைட் ஓடும்

எப்ப கொமிட்டி கூடும்

எப்ப தேர் கட்டலாம்

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

oh my dad  lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்

 

4 comments:

  1. இந்த லொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை புத்தனின் எழுத்தில் :).....
    எங்க பல மாதங்களா காணயில்லை...

    ReplyDelete
    Replies
    1. கொர்னாவிற்கு பயந்து இறங்குப்பெட்டியில் படுத்து இருந்தாராம் பறனில்!

      Delete
  2. மாஸ்க் இல்லாத தேசம் இனி இல்லைப்போலும்!

    ReplyDelete
  3. உண்மையில் இப்ப மாஸ்க் போட்டு கதைப்பது பாதி புரியாது![[

    ReplyDelete