Friday, December 31, 2010

நான் ஒரு சுழியன் குட்டி கிறுக்கல்

"அடோ என்ன ரோட்டில நிக்குது ஒடு ஒடு வீட்டுக்கு"என்று பொலிஸ்க்காரன் அரை குறை தமிழில் திட்டி பொல்லால் அடிப்பது போல கிட்ட வர எடுத்தோம் ஒட்டம்.அவன் போனபிறகு மீண்டும் ஒன்று கூடினோம்.இவன் சிங்களவன் எங்கன்ட இடத்தில வந்து சண்டித்தனம் காட்டுறான் ,உவங்களுக்கு வெடி வச்சாத்தான் சரி என்று வீரவசனம் பேச கூட நின்ற எனையவர்களும் சேர்ந்து சம்மதிப்பது போல உசார் ஏத்தினார்கள்.நாங்கள் ஒன்றுகூடுவதும் பொலிஸ் ஜீப்பை கண்டால் ஒடி ஒழிப்பதுமாக காலங்கள் சென்றன.சிவாவை சில நாட்களாக காணவில்லை,என்ன நடந்தது என்று புரியாமல் இருந்தோம்,அவன் இயக்கத்தில சேர்திட்டானாம் என்று குமார் சொன்னான் ,ஆனால் நணபர்களால் நம்பமுடியவில்லை.ஒருநாள் இரவு 9 மணியளவில் வீட்டை வந்தான்,உந்த சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும்,அதற்கு நாங்கள் ஒரு இயக்கமாக இயங்க வேண்டும் முதலில் ஆட்கள் ஒன்று சேரவேணும் பின்பு ஆயுதம் வாங்கி எம்மை பலப்படுத்த வேணும் என்றவன்,என்னை வந்து இயக்கத்தில் இணையும் படி கேட்டான்.போராட வந்திடுவேன் ஆனால் பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைச்சிருக்கு மச்சான் போய் படிப்பை முடித்துவிட்டு கட்டாயம் இயக்கத்தில் வந்து இணைந்து கொள்வேன் எனசொல்லி அவனை சுழிச்சு விட்டேன்.பிறகு அவனை சந்திப்பதை கூடியளவு தவிர்த்தேன்.நான் அவனை புறக்கணிப்பது அவனுக்கு புரிந்தபடியால என்னை சந்திக்க வாராதை தவிர்த்திக்கொண்டான்.யாழ் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரத விதமாக சிவாவை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.மச்சான் நீ நேற்று மேடையில் விடுதலை,சமதர்மம் போன்ற விடயங்களைபற்றி மேடையில் பேசினாய் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் மிகவும் நல்லாய்யிருந்தது.அவற்றை நடைமுறை படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க வேணும்,மேடை பேச்சுகளால் ஒன்றும் செய்ய முடியாது என விளக்கம் கொடுக்க தொடங்க ,மச்சான் எனக்கு விரிவுரைக்கு நேரமாகுது என்று பொய் சொல்லி அவனை மீண்டும் சுழிச்சுப்போட்டேன்.இவனுடன் தொடர்புகளைவைத்திருக்கக்கூடாது என்று கொழும்பு பல்கலைகழகத்திற்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாற்றலாகி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது,மச்சான் நீ சுழியண்டா என்ற குரல் கேட்டு திரும்பினேன் ,சிவா நின்றான்.ஏன்டாப்பா அப்படி சொல்லுகிறாய்,கொழும்புக்கு போகிராயாம்,ஒம்டாப்பா இங்கு இருந்தா படிச்சு முடிக்கஏலாது,ஒரே பகிஷ்கரிப்பும் ஒரே பிரச்சனையாக இருக்குது அதுதான் கொழும்புக்கு போய் படிப்பை முடித்துவிட்டு இங்கு திரும்பி வந்து எங்கன்ட சனத்திற்கு உதவலாம் என்று நினைக்கிறேன்.சிவா தான் அடுத்தகிழமை இந்தியாவுக்கு போவதாக சொல்லி விடை பெற்றான்.`படிப்பு முடிந்தவுடன்,ஏன் யாழ்ப்பாணத்திற்கு இந்த பிரச்சனகளுக்கு மத்தியில் போவான் கொழும்பில் ஒரு வேலையை பார்ப்போம் என்ற முடிவுடன் ,வேலை தேடும் படலம் ஆரம்பமானது.வேலையும் கிடைத்தது.கொழும்பு பல்கலைக்கழகத்தில் பழகிய சிங்கள பெண்னின் நட்பு காதலாக மாற இருவரும் நெருங்கி பழகும் வாய்ப்புக்கள் அதிகமாகினது.பஸ்கள்,ரயில்கள் ,பீச்,சினிமா என ஒன்றாக திரிந்தோம்.இதை கண்ட ஊர்காரன் ஒருவன் எனது பெற்றொருக்கு சொல்ல,அப்பா ரயில் பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தார்.அண்ணை உன்னை நோர்வேக்கு கூப்பிடுகிறானாம் நீ பாஸ்போர்ட் எடுத்து ரெடியாக இரு ,அடுத்த கிழமை நோர்வே எம்பசிக்கு இன்டர்வீயுக்கு போகவேணும் உனது போஸ்ட் கிரயுவேட்டை அங்க போய் செய் என்றார்.இப்ப என்ன அவசரம் இங்க வேலை செய்யிறன் இங்கயே செய்து முடிக்கலாம் என்றேன் .எனக்கு தெரியும் நீ ஏன் இங்க இருக்க விரும்புகிறாய்யென,இங்கு இருக்கிற கதையை விட்டுப்போட்டு வெளிநாடுபோய் உருப்படுகிற அலுவலை பார் என்றார்.அப்பா வந்த நாளில் இருந்து மாலினியை சந்திப்பதை தவிர்த்தேன்.அப்பாவும் ஒரேபிடியாக இருந்து என்னை நோர்வேக்குஅனுப்பி விட்டார்.போகும் பொழுது கூட மாலினியை சந்திக்காமல் சுழிச்சுப்போட்டேன்.புதிய இடம் மொழி வேறு படிக்க வேண்டும் ஒரு மாதிரியாக மொழியை நன்றாக கற்றுக்கொண்டேன்.நான் சுழியன் எங்க போனாலும் சுழிச்சுப்போடுவேன். என்னுடைய மண்வாசனை அப்படியுங்கோ.வெள்ளைத்தோல் பெண்களை கண்டவுடன் ஒரு சபலம் ஏற்பட அதற்கு உடந்தையாக ஒருத்தியை நண்பியாக்கிக் கொண்டேன்.காதல் பண் ணிகல்யாணம் செய்யலாம் என நினைத்தேன்,காமம் பின்பு ஒன்றாக வாழ்ந்து பார்ப்போம் அதன்பின்பு ஒத்து வந்தால் கல்யாணம் என்றாள்.நானும் மனதில் இவளை சுழிச்சிப்போடலாம் என்ற எண்ணத்துடன் சம்மதித்தேன்.அவள் கல்யாணத்திற்கு சம்மதித்தாள் நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.புது நாடு,ஜயா புது மாப்பிள்ளை.உறவுக்காரருக்கு எதுவும் தெரியாது. தமிழ் கலாச்சரத்துடன் பெண் வேணும் என்று சொல்ல பெற்றோர் தேடிப்பிடித்து பிளேன் ஏத்திவிட்டார்கள்.கல்யாயாணமும் ந்டந்து முடிந்ததுகதை ,கட்டுரை என்று எழுத தொடங்கினேன் முதலில் புலி எதிர்ப்பாக எழுதினேன் வாசகர்கள் படிப்பதாக தெரியவில்லை,உடனே புலி ஆதரவாகவும் தேசியம் சார்பாக இரண்டு கட்டுரை எழுதினேன் பாராட்டுக்கள் குவிந்தன மேடையில் ஏறும் வாய்ப்புக்களும் தானாக தேடிவந்தன.தொடர்ந்து புலி ஆதரவு முகமூடியுடன் எழுதினேன் . பயம் காரணமாக புலிகளை சுழிக்க முடியாமல் போய்விட்டது.முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் புலிகளுக்கு என்றவுடன்,புலிகளை இனி சுழிச்சு போடலாம் என்ற துணிவு ஏற்பட்டது.அப்பே லங்கா என்ற கோசத்துடன் எழுத தொடங்கினேன்.பெரும்பான்மையினரின் ஆதரவும் கிடைக்க தொடங்கியது.23 வருடங்களின் பின்புகுடும்பம் சகிதமாக யாழ் மண்னை தரிசிக்க சென்றேன்.ஊர் கோவிலுக்கு முதலில் சென்றேன்.ஆண்டாவா நீ என்னை விட சுழியன்,இவ்வளவு பிரச்சனைளுக்கும் தாக்குப்பிடித்து இப்ப வெளிநாட்டுக்காரன் அந்த மாதிரி ஒரு கட்டிடம் கட்டிதந்திருக்கிறான் அனுபவி ராசா அனுபவி என கும்பிட்டு போட்டு திரும்பும் பொழுது,ஒருவர் என்னை விட 10 வயது கூடிய தோற்றத்துடன் காலை நொண்டியபடி சென்றவர் என்னை 2,3, தடவை பார்த்துபோட்டு என்னருகே வந்து உங்களுடைய பெயர் கண்ணன் தானே , ஒம் என தலையாட்டினேன்.உள்ளே ஒரு பயம் ,வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் கடத்தப் போறாங்களோ தெரியவில்லை என முழித்தேன்.என்னை தெரியவில்லையடாப்பா வடிவாக பார் என்றவன் ,கோவிலை சுற்றி கும்பிட்டுபோட்டு வாரன் யோசிச்சு பாருடாப்பா என்று சொல்லி சுற்ற சென்றுவிட்டான்.சுற்றி முடிந்து அருகே வந்தவன் மச்சான் நீ சுழியண்டாப்பா என்னை தெரியாத மாதிரி நல்லாய் நடிக்கிறாய்,பயப்பிடாதே போராட உன்னை குப்பிடமாட்டேன் நான் சிவா என்றான்.கட்டி அனைத்து நட்பு கொண்டாடினோம்.காலுக்கு என்ன நடந்ததுடாப்பா என்றேன்.10 வருடங்களுக்கு முதல் தாக்குதலோன்ரின் பொழுது காலை இழக்க நெரிட்டத்தா சொன்னான். நல்ல வேளை இவனை சுழிச்ச்சுப்போட்டு வெளிநாடு போனது என்று மனதில் நினைத்து கொண்டு அவனிடமிருந்து விடை பெறும் பொழுது, கோயில் தர்மகர்த்தா ஒடி வந்து புனர்நிர்மான பணிகளுக்கு இயன்றளவு உதவி செய்யும்படி கேட்டார். உடனே 20 ஆயிரம் என்று சொல்ல பக்கத்தில் நின்ற மனைவி கோயிலுக்கு தானே கேட்கினம் கொஞ்சம் கூடவா கொடுங்கோவன் என்றாள்.50 ஆயிரம் கொடுங்கோ உங்களுடைய 2 மணித்தியால சம்பளம்தானே என பில்டப் கொடுக்க நானும் சம்மதம் என தலையை ஆட்டினேன்.ஆண்டவனுக்கு ஒரு அஸ்டாங்க நமஸ்காரம் செய்து போட்டு எழுந்தேன் சிவா நொண்டியபடியே நடந்து சென்றான் ....

No comments:

Post a Comment