Friday, December 31, 2010

யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு குட்டி கிறுக்கள்

டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா....எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டார்.நான் குவான்டேர்ஸில் தான் சிட்னியிலிருந்து சிங்கபூருக்கு போனனான்,இவன்கன்ட பிளேன் ஒருசததிற்கு உதவாது ,சாப்பாடும் சரியில்லை பணிப்பெண்களும் சரி ஆண்களும் சரி உதவாக்கரைகள் . சிங்கப்பூரிலிருந்து சிறிலங்கன் எயர்லைன்ஸில் தான் அங்கால போனனான்,"அது எல்லோ பிளைட்"நல்ல சாப்பாடும் அந்தமாதிரி உபசரிப்பும். கிரிபத்தும் சம்பலும் தந்தாங்கள் சொல்லி வேலையில்லை.கட்டுநாயக்காவில இறங்கினவுடன் என்னை அறியாமல் அழுது போட்டேன்,உன்னான அது ஆனந்த கண்ணீர்தான்.மனசுக்குள் ஒரு பயம் இருந்தது ஏனென்றால் இங்க சிட்னியில் ஒரு சில ஊர்வலங்களுக்கு போனனான் அதில என்னுடைய படங்களை எடுத்து ஆர்மிக்காரனுக்கு எங்கன்ட சனம் கொடுத்திருக்குமோ என்ற பயம்தான் .எங்கன்ட சனத்தைப்பற்றி உனக்கு தெரியும்தானே யாழ்மையவாத சிந்தனை கொண்ட சனம்தானே..(கிகிகிகி)ஆனால் ஆர்மிக்காரன் ஒரு தொந்தரவும் தரவில்லை மாத்தையா என்று நல்ல மரியாதையாகத் தான் கதைச்சவன் .எனக்கு 3 பாசையும் நல்லாய் தெரியும்தானே அதால எனக்கு சிறிலங்காவில எந்த மூலைக்கும் போய்வர முடியும் உன்னை மாதிரி 2 பாசைக்காரன் இல்லைத்தானே....வெள்ளவத்தைக்கு போயிட்டு அடுத்தநாளே யாழ்ப்பாணத்துக்கு போவதற்கு பஸ்ஸுக்கு டிக்கட்டை புக்பண்ணிப்போட்டேன்.கொழும்பு இப்ப அந்த மாதிரியிருக்குதடா அம்பி,30 வருசத்துக்கு முதல் நான் கொழும்ம்பில வேலை பார்க்கும் பொழுது இருந்தமாதிரி நல்லாயிருக்கு(?)கொழும்பில ஆட்களை கடத்துறாங்கள் என்று இணையங்களில் செய்தி போடுறாங்கள் அப்ப அது பொய்யோ அண்ணே?உவங்கள் உந்த இணையக்காரங்களை நம்பக்கூடாது,தாங்களும் தங்கட இனையத்தளமும் புகழ் பெற வேணும் என்று கண்டதையும் போடுறாங்கள்.உவங்களை நம்பக்கூடாது .நான் போயிட்டு சேவ்வாக வந்திட்டந்தானே.யாழ்ப்பாணத்துக்கு அந்த காலத்தில கே.ஜி காரான் பஸ் விட்டான் அது மாதிரி இப்ப டக்கிளஸ் விடுகிறான் சீ சீ விடுகிறார்.அவன் சீ அவர் இப்ப யாழ்ப்பாணத்தை நல்ல டிவலெப்மன்ட் செய்யிறார் என்று டக்கிளஸ்க்கு ஒரு புகழ்மாலையும் போட்டார்.ஊருக்கு போய் செய்த முதல் வேலை சாரத்தை கட்டிக்கொண்டு கிணற்றில போய் நல்லாய் அள்ளி தலை யில தண்ணி ஊத்தி குளிச்சன் ,ஜயோ அந்த சுகமிருக்கே சொல்ல வார்த்தையில்லை.குளிச்சுப்போட்டு எங்கன்ட கோயிலுக்கு போனேன்,ஒருத்தரும் என்னை மட்டுக்கட்டவில்லை ஆனால் நான் எல்லோரையும் கண்டுபிடிச்சிட்டேன் .அண்ணே ஆர்மிக்காரன் சனத்தோட எப்படி?அவங்கள் தாங்களும் தங்கடபாடும் எதாவது நொட்டினால்தான் பிரச்சனை மற்றும்படி அவங்கள் பேசாமல்தான் இருக்கிறாங்கள்.அனேகமான ஆர்மிக்காரங்கள் தமிழ் கதைக்கிறாங்கள்.நான் கோயிலில் நிக்கும் பொழுது இரண்டு ஆர்மிக்காரங்கள் வேஷ்டியுடன் வந்தவங்கள் நல்ல பயபக்தியுடன் கூம்பிட்டவங்கள்.கப்டன்,மேஜர் தர அதிகாரிகள் போல கிடந்திச்சு.போகும் பொழு து என்ட பேத்தியின் கன்னத்தில கிள்ளிப்போட்டு போனவன்.இப்படித்தான் ஒருநாள் என்ட மகளின் பெயரை சொல்லி கூப்பிட்டு கேட்டுது எட்டிப்பார்த்தேன் ஒரு ஆர்மிக்காரன் வெளியில நின்று தேசிக்காய் தாங்கோ என்று கேட்டான். அவ்வளவு அன்னியோன்னியமாக பழகிறான். என்னை கண்டவுடன் யார் என்று விசாரித்தான் மகளும் அது என்னுடைய அப்பா நேற்றுத்தான் வந்தவர் என்று சொல்ல அவன் உள்ள வந்து என்னுடன தமிழில் கதைக்க தொடங்கினான் நான் சிங்களத்தில் கதைக்க அவன் அதிர்ந்து போனான்.சிங்களத்தில பழமொழி இரண்டு சொல்ல அவன் முழித்த முழி இருக்கே அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பாக இருக்குது. அதற்கு பிறகு அந்த ஆர்மிக்காரன் எங்கு கண்டாலும் என்னோட சிங்களத்தில் கதைப்பான் மாத்தையா என்று சொல்லி நல்லமரியாதை.எத்தனை ஆர்மிக்காரன் சரியாம் இன்றைக்கு பெடியள் அடிச்ச அடியில என்று கேட்டு சந்தோசப்பட்டதும் நீங்கள்தான் இப்ப ஆர்மிக்காரன் உங்களை மாத்தையா என்று சொன்ன உடனே நல்லவன் என் செர்டிவிக்கேட் கொடுப்பதும் நீங்கள்தான் அண்ணே என்று சொன்னதும் கந்தர் கடுப்பானாலும் காட்டிக்கொள்ளவில்லை.தம்பி எங்கன்ட பள்ளிக்கூட பெடி பெட்டையள் கொஞ்சம் அட்டகாசம் நெடுகளும் ரொட்டில டியுசனுக்கு என்று சைக்கிளில் திரியுதுகள்.பெண்பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருப்பம் என்றில்லை எப்பவும் ரொட்டிலதான் அதுகளின்ட வாழ்க்கை போகுது.பெடியளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் பொழுது எல்லாம் ஒழுங்காக இருந்தது,இப்ப எல்லாம் தலைகீழாக கிடக்குது.களவு ,கொள்ளை, தெரு சண்டித்தணம்,சராயத்தை குடிச்சு போட்டு வம்புக்கு ஆட்களை இழுக்கிறது எல்லாம் அந்த மாதிரி நடக்குது.அண்ணே பெடியள் திரும்பி வந்துஅடிப்பாங்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்களோ என்று வம்புக்கு இழுத்தேன்.பெடியள் வரவேணும் வந்து உந்த களவு ,கொள்ளைகளை தடுக்கவேணும்,பெண்களுடன் சேட்டை விடுகிற கோஸ்டிகள்,குடிச்சுபோட்டு சண்டித்தனம் செய்யிறவன்களை எல்லாம் பிடிச்சு பச்சை மட்டையாள் அடிச்சு அடக்கி வைக்க வேணும்.நான் நினக்கிறேன் பெடியள் இன்னும் வன்னிகாட்டுக்குள் மறைந்து இருக்கிறான்கள் என்றுதான் ,பாருடாதம்பி ஒருநாளைக்கு வைப்பாங்கள் ஆப்பு அப்ப இந்த ஆர்மிக்காரங்கள் எடுப்பாங்கள் ஒட்டம்.அது சரி அண்ணே நேற்று உங்களை பப்பில் பியர்கிளாஸுடன் strippers சோவில் வெள்ளைகள் குழுக்கி ஆடினதை பார்த்துகொண்டிருந்ததாக கனகர் சொன்னவர் உண்மையோ?அட அந்த கதை உனக்கு தெரிந்துவிட்டதோ?என்ட வயசில எனக்கு எப்படி தப்புதாளங்களை கொன்றோல் பண்னுவது என்று தெரியும் ,அது போக இந்த நாட்டுக்கரான்களுக்கு ஏற்ற மாதிரி நடக்க வேணும் இல்லாவிடில் சுத்த பட்டிக்காடு என்று நினைப்பாங்கள்.ஆனால் ஊரில சனம் செய்யக்கூடாதுதடா நாங்கள் பரம்பரைபரபரையாக கட்டி காத்த கலாச்சாரம் என்னவாது. உதுகளை விடு நான் உன்னை சந்திக்க வந்த முக்கிய காரணம் ,என்னுடைய சொந்தகாரப்பெடியன் ஒருத்தனை கூப்பிட வேணும் உந்த ஏஜன்ட்காரனை உனக்கு தெரியும்தானே ஒருக்கா ஒழுங்கு படித்துதாடா தம்பி எவ்வவளவு காசு என்றாலும் நான் தாறேன்.அண்ணே இப்பதானே சொன்னீங்கள் யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு என்று பிறகு ஏன் அந்த பெடியனை இங்க கூப்பிட்டு கஸ்ட படுத்த யோசிக்கிறீயள் ,நீங்கள் எல்லாம் இங்க வந்து நாட்டில பிரச்சனை இல்லை என்று சொல்லி திரிவதால் அவுஸ்ரேலியா விசா கொடுக்கிறாங்கள் இல்லை .அதுகளப்பற்றி நீ யோசிக்க வேண்டாம் ,அது நான் லோயரை பிடிச்சு சேட் பண்ணி போடுவேன் ,அவனை பத்திரிகை துறையில்தான் வேலை செய்ய விட்டிருக்கிறேன்.......சிறிலன்காவில் பத்திரிகையாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லைதானே.......
இந்த கிறுக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து லீவுக்கு 10 நாள் போய் நின்று போட்டு திரும்பி வந்து சொந்தக்காரன்களை கூப்பிட வேணும் ஆனால் யாழ் நல்லாய் இருக்கு என்று புலம்பும் புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம்
This post has been edited by putthan: 21 December 2010 - 06:42 PM

No comments:

Post a Comment