Friday, May 8, 2026

மக்களாம்

 சிவப்பு சேர்ட் ,அரிவாள் தொப்பி

போட்டவன் செந்தோழனாம்

வெள்ளை வேஸ்டி ஜீப்பா

அரசியல்வாதியாம்

கோர்ட் சூட் ஜென்டில்மன்

குறுந்தாடி ,கழுத்தில் அடையாள அட்டை

ஐ.டியாம்

மொட்டை காவி

பெளத்த துறவியாம்

உருத்திராட்சை அணிந்தவன்

ஆன்மீகவாதியாம்

சடைத்தாடி அரபிக் ஆடை

மெளலானாவாம்

வெள்ளை அங்கி கழுத்தில் சிலுவை

இடுப்பில் கறுத்த பட்டி பாதிரியாம்

மைக் பிடிச்சவன் பாடகனாம்,

தட்டச்சு தெரிந்தவன் எழுத்தாளனாம்,

கமரா முன் பேச தெரிந்தால்

அவன் யூடியுப் பிரபலமாம்,

முகப்புத்தகத்தில் அதிக லைக்

பெற்றவன் கருத்தாளனாம்

இவர்களை உருவாக்கி ,தூக்கி பிடித்து கை தட்டும்

நபர்கள் மக்களாம் ....

No comments:

Post a Comment