Friday, April 7, 2017

முதல் விமானப்பயணம்

"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களதுஇருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்திலஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால்வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன்.
"சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டைதேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன்.
இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனேபோட்டுவிட்டேன்.

முப்பதுவருடங்களுக்குமுன்புமுதல்விமானப்பயணம்சென்னையிலிருந்துகொழும்புக்குஏர்லங்காமூலம்ஆரம்பமானதுமானிப்பாயிலிருந்துமினிவானில்தலைமன்னார்சென்றுஅங்கிருந்துகப்பலில்ராமேஸ்வரம்போய்ரயிலில்சென்னைபோய்சேர்ந்தேன்
போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்துகாத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் .

இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து  எனது முதல்  விமானப்பயணம் ஆரம்பமானதுவிமானநிலையத்திற்குவழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்குநாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலைஅந்த வயதில்பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம்பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு.
டொக்டர்மாருக்கு  பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடாபைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ்கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில்அவையளினட வேலை போய்யிடும்என சொல்லி உசுப்பேத்தினான்.

எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது.
சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும்புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில்நின்றுகொண்டேன்.
"இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவர‌ வேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்துகொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்"
பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டுவெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு  சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்"
அவளுக்கு தெரியுமேஎனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒருமாதிரி                                                                                                                                                                                         சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்துகொண்டேன்.  .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.
அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்புநின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால்  என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம்அணிவது எப்படி என‌ விளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனைமுழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாதுஎன்பதாகவே இருந்தது.
உணவு பரிமாறினார்கள்முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை  போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன்சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளைசேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்ததுசேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும்சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது.
இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனதுகைப்பையை எடுக்க‌ எழும்பினேன்பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கைபட்டியை போடுமாறு.   புகையிரதத்திலிருந்து  இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான்கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன்.
முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள்எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால்இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர்பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய்ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார்,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன்.
ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான்சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வரகட்டிட நடைபாதையின் மேலேபோர் என்றால் போர் சமதானம்என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது....

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றேவிளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கைஎன்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."



3 comments:

  1. சிந்திக்க வைக்கும்
    சிறப்புப் பதிவு

    ReplyDelete
  2. ஓ அப்ப நாட்டுக்கு போய் வந்ததால் தான் பதிவுக்கு இடைவெளி போலும்[[

    ReplyDelete
  3. இதுதான் நல்லாட்சி வேஷம்[[

    ReplyDelete