Sunday, July 10, 2016

சோசல் மீடியா

விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மதபக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பாகாலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோபள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள்.
வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும்  செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும்அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா"
டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற அதிகார தோரணையில் சத்தம் வரும்.
காலைப்பொழுதை ரசிக்கும் வயதில்லை,கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிப்பேன் ஆனால்  மீண்டும் நித்திராதேவிஎன்னை அரவணைத்துக்கொள்வாள் .மரண அறிவித்தல் சொல்ல தொடங்க மீண்டும் திடுக்கிட்டு எழும்பி போர்வையை மெல்ல அகற்றிஅம்மா எங்கே நிற்கிறார் என்று பார்ப்பேன் .கிணத்தடி பக்கம் போயிருந்தார் என்றால் ஆறுதலாக கட்டிலிருந்து மீண்டும் சோம்பல்முறித்து இன்னும் கொஞ்சம் படுத்தால் எப்படியிருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு அரைத்தூக்கத்தில் வானொலியைகேட்டபடியிருப்பேன் .
"பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்என பாட்டுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சிதொடங்க கட்டிலை விட்டு எழும்பி கிணத்தடிக்கு போக அம்மா வீட்டுக்குள் வருவார்.
"என்ர ராசா இப்ப தான் எழும்பி வாரார் .கேதியா முகத்தை கழுவிபோட்டு வாபள்ளிக்கு போக நேரமாகிறது "
"ம்ம்ம்பற்பசையை பிரஸ்ஸில போட்டு வாயில் வைத்து அதில முதலில் வரும் இனிப்பு தன்மையை சுவைத்தபடி மெல்ல‌ மெல்லமாகபல்லை தேய்த்தபடி கிணத்து கட்டில் போய்யிருப்பேன் .வாய் பற்பசையின் நுரையால் நிரம்பியவுடன் கிணத்தடிக்கு பக்கத்தில் நின்றஎலும்பிச்சை மரத்தின் அடியில் துப்பிவிட்டு மீண்டும் துலக்கி மீண்டும் மரத்தை அசிங்கப்படுத்தி தூரிகையை வாயில் வைத்தபடிகிணத்துவாளியை உள்ளே போடுவேன் .கப்பியின் கீறிச்சிட்ட சத்தத்துடன் வாளி தண்ணியினுள்  போய்விழும்.அநேகமான‌ யாழ்ப்பாணத்து கிணத்து வாளிகள் க‌ல்லுப்பாறைகளில் அடிபட்டு உருமாறியிருக்கும் .தண்ணி வாளியினுள் நிறைந்தவுடன் கயிற்றை பிடித்து மேலே இழுக்கும் பொழுது கப்பி மேலும் சத்தம்போடும்.வாளியின் கைப்பிடியை பிடித்து தூக்கி சலவை தொட்டியின் கட்டில் வைப்பேன் சிலசமயங்களில் சமநிலை குழம்பி தண்ணி கீழே கொட்ட பார்க்கும் ஒரு மாதிரி சமநிலையில் வாளியை நிறுத்தி கை கால் கழுவி  ,ஒரு செம்பரத்தை பூவை புடுங்கி கொண்டு ரெடியோவில் ஒலிக்கும் சினிமா பாட்டை விசில் அடித்துகொண்டு வீட்டினுள் போவேன் .
"சாமி கும்பிட போகும் பொழுது தேவாரத்தை பாடிக்கொண்டு போகாமல் உது என்ன சினிமா "என அம்மாவும் அப்பாவும் கொரோசா குரல் கொடுப்பினம் உடனே விசில் அடிப்பதை நிறுத்தி சாமியறைக்கு சென்று பூவை வைத்து கடவுளே நல்லாய் படிப்பை தா என்று கேட்டு விபூதியை பூசிவிட்டு அதே சினிமா பாட்டை மீண்டும் விசிலடித்தபடி வெளியே வருவேன். இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ . பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும்.
"காலையில செத்தவரின்ட பிள்ளைகள் ஐந்தும் டாக்குத்தரும் இஞ்னினியரும் தான்"
"யார் பாட்டி செத்தது ,உங்களுக்கு தெரியுமோ செத்தவரை"
"இல்லையடாப்பு உந்த ரெடியொவில மரண அறிவித்தல்  சொன்னவையள் அதில கேட்டனான்."
இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக  பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்தநாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும்.
இன்றைக்கு சுதா அண்ரியின்ட மகளின்ட பேர்த்டே இப்ப ரெடியோவில சொல்லித்தான் தெரியும்என அக்கா சொல்லியபடி பாடசாலைக்கு கொண்டு போக வேண்டிய‌ புத்தகங்களை அடுக்கி கொண்டிருப்பார் ,,நானும் எனது புத்தகங்களை புத்தக பைக்குள்வைத்து விட்டு காலை சாப்பா
ட்டுக்காக‌ அம்மாவிடம்  சமையலறைக்கு சென்றுவிடுவேன். "அம்மா பொங்கும் பூங்குழல் தொடங்கிவிட்டது எழே கால் ஆயிற்று ஸ்கூலுக்கு நேரம்ப்போயிற்று கேதியா சாப்பாட்டை தாங்கோ"
"அந்த மேசையில் போட்டு வைச்சிருக்கிறன் போய் சாப்பிடு ,லெட்டா எழும்பிபோட்டு பிறகு சத்தம் போடுறாய் நாளைக்கு வெள்ளன எழும்பி பள்ளிக்கு போற வேலையை பார்"
"ஒமோம் நாளைக்கு,நாளைக்கு"
சாப்பிட்டவுடன் புத்த பையை தோலில் போட்டுக்கொண்டு வாசலில் இருக்கும் பாட்டா செருப்பை  கொழுவிக்கொண்டு படலையில் போய் நிற்பேன் .பொங்கும் பூங்குழலில் இரண்டு பாட்டு ஒலிபரப்பி முடியும் மட்டும் வாசலில் நிற்பேன் அதற்குள் பாடசாலை நண்பர்கள் இருவர் வந்து விடுவார்கள்.
வாசலில் நின்றபடியே அம்மா போயிற்றுவாரேன் என்று ஒரு கத்தல் ,அவரின் பதில் கிடைக்கும் முதல் நாங்கள் அடுத்த வீட்டு வாசலைதாண்டியிருப்போம்.அம்மா வெளியே வந்து எட்டிப்பார்த்து நான் பெடியங்களுடன் போகிறேன் என்று அறிந்த பின்புதான் நிம்மதியாகஉள்ளே செல்வார் .சந்தியை தாண்டுபொழுது தேனீர் கடை வானோலியில் விளம்பரங்களுடன் நேரமும் சொல்லுவார்கள்.
"டேய் ராமன் தேடிய சீதை வரப்போகிறது "
"நான் படம்பார்க்க வரமாட்டேன் அப்பா ஏசுவார்"
"ஸ்கூலுக்கு வாரமாதிரி வந்திட்டு  படத்திற்கு போவம்"
"என்டா ராசா ஆளைவிடு உப்படி நினைச்சது என்று தெரிந்தாலே தொலைஞ்சன்"
"டேய் உவன் சரியான பயந்தாங்கொள்ளி"
பாடசாலைக்கு முன்னால் உள்ள சாத்ரியாரின் வானொலி "டி.எம் செளந்தராஜன் ,சுசிலா பாடிய இந்த பாடலுடன் நிறைவடைகின்றதுபொங்கும் பூங்குழல் "
டேய் ஒடி வாங்கோட எட்டு மணியாகப்போகின்றது ஸ்கூல் தொடங்கப்போகின்றது " ஒருத்தன் ஞாபகப்படுத்த எல்லோரும்ஒடிப்போவோம் பாடசாலை மணியடிக்க சரியாக அசம்பிலியில் போய் நிற்போம் .
பிந்தி வந்தால் வெளியில் நிற்க வேண்டும் அசம்பிலி முடிய ஆசிரியர் பிரம்புடன் வந்து மைதானத்தை சுற்றி நடக்கச்சொல்வார்.
சினிமா பாட்டு ஒலிபரப்பாமல்சங்கிதம் அல்லது சொற்பொழிவுகள் ஒலிப்பரப்பிலிருந்தால் ,காலை பத்துமணிக்கு மேலாயிற்று என்றுஎங்கள் எல்லொருக்கும்  தெரியும்பதின்ரெண்டு மணியளவில் மதிய இடைவெளிக்காக பாடசாலை மணியடிக்கும் மீண்டும் வீட்டைஒடிப்போவோம் மதிய சாப்பாட்டை முடித்து 12:45 செய்தி தொடங்கமுதல் பாடசாலையில் நிற்போம் ..பாடசாலையின் அரைவாசிமாணவர்கள் மைதானத்தில் நிற்பார்கள் இருபது டீமுக்கு அதிகமார் விளையாடுவார்கள்.
ஹிந்தி பாட்டு ஒலிபரப்பிலிருந்தால் பிற்பகல் ஒன்றைரைக்கும் இரண்டுக்கும் இடையில் என் கணக்குபோட்டுகொள்வோம்.மூன்று மணிக்கு பாடசாலை மணியடிக்கும் வீட்டை போகும் வழியில் மீண்டும் வானொலி நிகழ்சியை ரசித்தபடி நடப்போம் .பாடசாலை கடையடியில் தொடங்கினால் வீட்டை போய் இரவு படிக்க தொடங்கும் வரை வர்த்தக ஒலிபரப்பு எங்கன்ட பொழுதுபோக்கு.மாலை நேரத்தில் வளவில் விளையாடும் பொழுதும் பக்கத்து வீட்டு வானொலியின் மூலம்  பாடல்கள் கேட்டபடியே விளையாடுவோம்.மாலை நாலரைக்கு விளையாட்டு செய்திகள் தொகுத்து வழங்குவார்  எஸ் .எழில்வேந்தன் .அதை அண்ணர் மற்றும் நண்பர்கள் ஒடிப்போய் கேட்பார்கள் .அநேகமாக  அதில் கேட்ட கிரிக்கட் பற்றிய செய்திகளை விளையாடிய படியே பேசுவார்கள்.
 ‍‍‍‍‍வணக்கம்கூறி விடைபெறுவது  கே.எஸ் ராஜா என்ற குரலுடன் வர்த்தக சேவையின் அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்து மாலை ஆறுமணி செய்திக்கான இசைய தொடங்குவார்கள் அநேகமான வீடுகளில் வானொலியை நிறுத்திவிடுவார்கள் .நாங்களும் மீண்டும் கை கால் கழுவி பாடப்புத்தகங்களை தூக்கி கையில் வைத்துக்கொள்வோம். அப்பா வரும்பொழுது நாங்கள் எல்லாரும் படித்து கொண்டிருக்க வேண்டும்...
வரவேற்பறையில் வானொலியை மிகவும் மெதுவாக போட்டு பாட்டியும் அம்மாவும் கேட்டு கொண்டிருப்பார்கள்.எட்டு மணிக்கு முஸ்லிம் நிகழ்ச்சி குறிப்பும் சலவாத் ஒதலும் என்று தொடங்கும்.தண்ணி குடிக்க போற சாட்டில் இரண்டு மூன்று தடவைகள் மேசையை விட்டு எழுந்து போய் நேரத்தை பார்த்து கொள்வேன். முஸ்லிம் நிகழ்ச்சி என்றவுடன் எனக்கு பசிக்க தொடங்கி விடும் .அம்மா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுவார் .மேசையில் இருந்து சாப்பிட்ட படியே ஒவ்வொருத்தரும் தங்களது அன்றைய நிகழ்ச்சியை பற்றி பேசுவார்கள்.
அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை.
தொழிற்சாலையில் வானொலி ஆங்கிலத்தில அலறும் ,என்ன பாட்டு என்றும் விளங்காது சிலர் ரசிப்பார்கள் நானும் ரசிக்கிற மாதிரிதலையை ஆட்டிகொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தின் பின்பு இயர் பிளக் இரண்டு காதினுள்ளும் இறுக்கி போட்டு வேலையை செய்துகொண்டிருப்பேன்.மூன்று மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது எர்லாம் அடிக்க கூடியதாக‌ மொபைலில்  வைப்ரேசன் மோட்டில் எலார்ம் செட் பண்ணிவைத்துள்ளேன்.அது என்னை உழுக்கி டேய் வீட்டை போற நேரம் வந்திட்டடா என்று உணர்த்தியவுடன்,பாதுகாப்புகவசங்களை எல்லாம் கழற்றி வைத்து போட்டு சி யு டுமாரோ,கவ்  நைஸ் இவினிங் என்று சக தொழிலாளிமாருக்கு சொல்லி போட்டுவெளியே வந்து காரை ஸ்டாட் பண்ணுவேன் வானொலி அவுஸ்ரேலியா,அமெரிக்கா ஐரோப்பியா செய்திகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து ஒலிபரப்புவார்கள்.நானும் கறுப்பு அவுஸ்ரெலியன் என்ற நினைப்பில சர்வதேச அரசியலை பற்றி மனதில் நினைத்தபடிவீட்டை நோக்கி காரை செலுத்துவேன்.
கையில் மொபைல் காதில் இரண்டு பக்கமும் சிறிய சிபிக்கர் மாட்டிய தலையை ஆட்டியபடி மொபைலை பார்த்து கொண்டு சிரித்த படி அறையிலிருப்பாள் மகள் என்னை கண்டவுடன் ‍ஹலோ அப்பா என்பாள் .நானும் பதிலுக்கு ‍ஹலோ சொல்லி போட்டு
"ஏன் மொபைலை பார்த்து கண்ணை பழுதாக்கிறீர் டி.வி யை போட்டு பாருமன்"
"தாத்தா பழைய படம் பார்க்கிறார்  தட் இஸ் போரிங்"
"மற்ற டி.வி அறையிலிருக்குதானே  அதில போய் பார்க்கலாம்  தானே"
"அம்மா டெலி டிராமா பார்கின்றார் I hate it! "
"லப்டொப் ,tablet,  iPad அதுகளில் பார்க்கலாம்"
"லப்டொப்போ அதைதானே நீங்கள் வைச்சு தட்டி கொண்டிருப்பியள்"
" அப்பா இது  Whatsapp"
"அது என்ன"

"It is a type of social media and you can only do it through your mobile phone "
"எங்க அக்கா "
"அவவின்ட அறைக்குள்ள இருக்கிறா"
"என்ன செய்யிறாள்"
"She is on Instagram"
"வட் இஸ் தட்"
"It is also a kind of social media"
அக்கா  அதில இருக்கிறா என்று எப்படி உமக்கு தெரியும்
"I just texted her "
"அந்த அறைக்கும் இந்த அறைக்குமிடையில் சோசல் மீடியாவில் கொமினிகேட் பண்ணுறீயள்"
நானும் பேஸ்புக்கில்  இருக்கிறன். உங்களை காணக்கிடைக்கிறதில்லை பேஸ் புக் அல்சோ சோசல் மீடியா நோ?
அப்பா உங்களுக்கு விளங்கப்படுத்துறதிற்க்குள் அடுத்த சோசல் மீடியா வந்திடும் நீங்கள் இப்ப போய் பேஸ் புக்கில் வார கொமன்ட்ஸ்க்குலைக் போடுங்கோ....

15 comments:

  1. சோசியல் மீடியாவின் வளர்ச்சி பற்றி அழகான நினைவு மீட்டல்!

    ReplyDelete
  2. என் காலத்தில் வர்த்தக சேவையில் காலைச்செய்தி 6.45 முடிந்த பின் நம்மவர் பாடல் 7 மணி வரை அதன் பின் பொங்கும் பூம்புனல் அந்த ஆரம்ப இசைக்காக இன்னும் மீண்டும் மீண்டும் புதிதாக பிறக்கலாம்!ம்ம்

    ReplyDelete
  3. 8-8.30 வரை என் விருப்பம் அதன் பின் விளம்பர நிகழ்ச்சி 9 மணி தொடக்கம் 10 வரை கதம்பமாலை அதன் பின்னே வர்த்தக நிகழ்ச்சி என்று 12 வரை பாடலுக்கு காத்து இருப்பதும் தனிச்சுகம்!

    ReplyDelete
  4. 2 மணி என்றாலே கவிமஞ்சரியும். அல்லியின் ஹலோ உங்கள் விருப்பமும் தான் நினைவில் இன்று 2.30 என்றால் சனியில் சந்தன மேடை இன்னும் நினைவில் மேடை!

    ReplyDelete
  5. இப்ப பல தனியார்/இணைய வானொலிகள் வந்தாலும் இன்னும் பாடல் தேர்வை வர்த்தகசேவை போல மிஞ்சமுடியாது!

    ReplyDelete
  6. வாட்சாப், பற்றி நான் அறியேன்[[ நீங்க முன்னேற்ற அறிவாளி[[ முகநூல் மட்டும் தான் இன்றுவரை[[

    ReplyDelete
  7. பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால் இன்னும் அழகான பகிர்வாய் அமையும் என்பது என் கருத்து! பிழை என்றால் மன்னிக்கவும்!

    ReplyDelete
  8. வாவ்......
    மிக அருமை புத்தன்....
    தெளிந்த நீரோட்டம் போல நடை....
    தடங்கல் இல்லாத லாவகமான இன்றய கால மாற்றம்....

    ReplyDelete
  9. [quote]பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால் இன்னும் அழகான பகிர்வாய் அமையும் என்பது என் கருத்து! பிழை என்றால் மன்னிக்கவும்[quote]
    இதில் என்ன தப்பு இருக்கு ...பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் ....நீங்கள் தரும் ஆக்கமும் ஊக்கமும்தான் என்னை கிறுக்க வைக்கின்றது....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  10. வாவ்......
    [quote]மிக அருமை புத்தன்....
    தெளிந்த நீரோட்டம் போல நடை....
    தடங்கல் இல்லாத லாவகமான இன்றய கால மாற்றம்...[quote]
    உண்மையாகத்தானே சொல்லுறீங்கள்....எனக்கே எனது எழுத்தில் சந்தகேம் ஏற்படுவதுண்டு அதுதான் .....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  11. [quote]பதிவை நீட்டாமல் பிரித்து எழுதினால் இன்னும் அழகான பகிர்வாய் அமையும் என்பது என் கருத்து! பிழை என்றால் மன்னிக்கவும்[quote]
    இதில் என்ன தப்பு இருக்கு ...பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் ....நீங்கள் தரும் ஆக்கமும் ஊக்கமும்தான் என்னை கிறுக்க வைக்கின்றது....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  12. சிறந்த கருப்பொருள்
    நன்றாக அலசப்பட்ட பதிவு
    தொழில் நுட்ப மாற்ற வேகம் எப்படி என்பதை
    அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்
    அழகான எழுத்து நடை
    ஆனால்,
    மாதம் ஒரிரு பதவுகளைத் தந்து
    வாசகரை மகிழ வையுங்கள்
    நாம்
    தங்கள் பதிவைப் படிக்க
    தொடர்ந்து வருவோம்!

    ReplyDelete
  13. வணக்கம் சகோ எங்கே போய்விட்டீர்கள் ஓய்வில் தளத்தில் புதிய பதிவிகளை காணமுடியவில்லையே என்னாச்சு!

    ReplyDelete
  14. எனது பதிவுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் சகல‌ பதிவர்களுக்கும் எனது தாழ்மையான நன்றிகள்

    ReplyDelete
  15. எனது பதிவுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் சகல‌ பதிவர்களுக்கும் எனது தாழ்மையான நன்றிகள்

    ReplyDelete