அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம் கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ...
கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது.
தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை...
நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக.
வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ...
ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர்.
எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம்
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட சாக்குகளை உபயோக படுத்த முடியாது..
பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் ..
இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் ..
அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே) செய்வது கடினம் .